Tag Archives: போராட்டம்

பொன்னேரியில் மழைநீர் வடிகால் ஓடை ஆக்கிரமிப்பு எதிர்த்து போராடியவர்கள் அமைச்சரின் தூண்டுதலின் பேரில் கைது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும், அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்பப் பெறுவதோடு, அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, ஆக்கிரமிப்புகளை மீட்டு மழைநீர் வடிகால் ஓடையை பாதுகாக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Read More »

குடிநீர், ரேசன் பொருள்கள் கோரி திருப்பூரில் பல்வேறு இடங்களில் பட்டினிப் போராட்டம்

திருப்பூர் மாநகரில் ஒரு வாரத்தில் இருந்து பத்து பதினைந்து நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வழங்கப்படுகிறது. அதுவும் சுத்திகரிக்கப்படாமல் கலங்கலாக, மஞ்சள் நிறத்தில் வரும் குடிநீரைப் பயன்படுத்துவதால் பெண்கள், குழந்தைகளுக்கு மர்ம நோய்கள் தாக்கி வருகின்றன. மாநகரில் பல பகுதிகளிலும் குப்பைகள் அகற்றப்படாமல் மலைபோல் தேங்கியிருக்கின்றன. சாக்கடை கழிவுகளை சுத்தப்படுத்துவதும் முடங்கிப் போயுள்ளது. எனவே திருப்பூரில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கி அனைவருக்கும் சீராக குடிநீர் வழங்கவும், குப்பைகள், சாக்கடைக் கழிவுகளை முறையாக அகற்றி சுகாதாரம் பேணவும், தெரு விளக்கு, சாலை பிரச்சனைகளுக்குத் தீர்வு கோரியும், ...

Read More »

புதுவையில் பணத்திற்கு பதில் அரிசி: சிபிஐ(எம்) இன் தொடர் போராட்டத்தால் வெற்றி

பணம் வழங்குவதை கைவிட்டு ரேசன் கடைகளில் மீண்டும் அரிசி, கோதுமை வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி புதுச்சேரியில் ஆளும் திரு. ரங்கசாமி அரசு திடீரென ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வந்த அரிசிக்குப் பதிலாக மாதம் ரூபாய் 300 வழங்குப்படும் என அறிவித்து நடைமுறைப்படுத்தியது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பு வந்த உடனே மக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டங்களை நடத்தியது. திரு ரெங்கசாமி ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் ...

Read More »

சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

சத்துணவு ஊழியர்கள்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்குவது, குடும்ப பாதுகாப்புடன் ஓய்வூதியம் வழங்குவது, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்புவது, சத்துணவுக்கான உணவு மானியத்தை உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக பல கட்டப்போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். தற்போது தமிழக அரசோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் அவர்களது கோரிக்கை ஏற்கப்படாத நிலையில் வேறு வழியின்றி ஏப்ரல் 15 முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று (17-4-15) தமிழகம் ...

Read More »

வனச்சரகர் காலி பணியிடங்களை வனக்கல்லூரி மாணவர்களைக் கொண்டே நிரப்பிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் வனக்கல்லூரி மாணவ-மாணவிகள், காலியாக உள்ள அனைத்து வனச்சரகர் பணியிடங்களையும், வனவியல் பட்டதாரிகளை கொண்டே நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறார்கள். நியாயமான கோரிக்கையை முன்னிறுத்தி போராடும் மாணவ, மாணவிகளின் இந்தப் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது. தமிழக அரசின் வனத்துறை அமைச்சர் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு மாணவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி கொடுத்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாத காரணத்தினால், வேறு வழியின்றி கோரிக்கைளையும், கொடுத்த ...

Read More »