Tag Archives: மதவெறி

உங்கள் அரசு வேலை செய்கிறதா பிரதமரே!

சீத்தாராம் யெச்சூரி கோவிட்-19 என்னும் கொரானா வைரஸ் தொற்றை முறியடித்திட தற்போதைய சூழலில், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி,  பிரதமர் நரேந்திர மோடிக்கு சனிக்கிழமையன்று அனுப்பியுள்ள கடிதம். துரதிர்ஷ்டவசமாக, சமூக முடக்கக் காலத்தில் மீண்டும் உங்களுக்குக் கடிதம் எழுத வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. என்னுடைய முந்தைய கடிதங்களுக்கும் தங்களிடமிருந்து எவ்விதப் பதிலும் இல்லை. உண்மையில், அவை வரப்பெற்றதற்கான ஏற்பளிப்புகூட இல்லை. இது வழக்கமற்ற ஒன்று. நாடும், நாட்டின் பெரும்பாலான மக்களும் ...

Read More »

பாமக நிறுவனர் திரு. ராமதாஸ் அவர்களின் கடிதத்திற்கு சிபிஐ(எம்) பதில்

பெண்கள் மீதான வன்முறை – சாதி ஆணவக் கொலைகளை எதிர்த்தும்,  பாலின சமத்துவத்திற்கான போராட்டத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லும் பெண்களின் பாதுகாப்பு குறித்து அரசியல் கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும், சில ஆலோசனைகளையும் உள்ளடக்கிய உங்கள் கடிதம் கிடைத்தது. நன்றி. பெண்கள் மீதான வன்முறை பல வகைப்பட்டது. பெண் என்பதால் வரும் பாலியல் தாக்குதல்; தொழிலாளி, விவசாயி, அலுவலக ஊழியர் என்று வேலை தலத்தில் எதிர்நோக்கும் வன்முறை; போராட்டங்களின் போது அரசு/காவல்துறை கட்டவிழ்த்து விடும் வன்முறை; தலித்/பழங்குடியின ...

Read More »

மக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை

மக்கள் விரோத பொருளாதார கொள்கைகளை எதிர்ப்போம் இந்திய நாட்டில் கால்நூற்றாண்டுக்கு மேலாக மத்திய அரசு கடைபிடித்து வரும் உலகமய, தாராளமய, தனியார்மய பொருளாதார கொள்கைகள் தமிழ்நாட்டிலும் மக்கள் வாழ்விலும், மாநில நலனிலும் நாசகரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. காங்கிரஸ் அரசால் நிறைவேற்றப்பட்ட இக்கொள்கைகளை நரேந்திர மோடி அரசும் தீவிரமாக அமலாக்கி வருகிறது. இந்திய இறையாண்மைக்கும், மக்கள் நலனுக்கும் விரோதமாக பாஜக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் இக் கொள்கைகளை எதிர்த்து வலுமிக்க போராட்டங்களை மக்கள் நலக் கூட்டியக்கம் முன்னெடுத்துச் செல்லும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை ...

Read More »

இராமகோபாலன் வகுப்புவெறி அறிக்கை: சிபிஐ (எம்) கண்டனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ. லாசர் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநிலச் செயலாளருமான தோழர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராஜன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, பி. சம்பத், அ. சவுந்தரராசன், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: இராமகோபாலன் வகுப்புவெறி அறிக்கை: சிபிஐ (எம்) கண்டனம் இந்து முன்னணியின் நிறுவன அமைப்பாளர் ...

Read More »

சிபிஐ (எம்), சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் கூட்டறிக்கை

மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு சாதி, மதவெறி சக்திகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஜனநாயகம், கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, முற்போக்கு கருத்துக்கள் ஆகியவற்றின் மீது இந்த பிற்போக்கு சக்திகள் கருத்து ரீதியான தாக்குதல் நடத்துவதோடு, கருத்து சொல்வோரையும், நிறுவனங்களையும் நேரடியாக தாக்குவதும் அதிகரித்திருக்கிறது. இதன் மீது தமிழக அரசும், காவல்துறையும் கண்டு கொள்ளாமலும், வன்முறையில் ஈடுபடும் பிற்போக்கு சக்திகளுக்கு ஆதரவாகவும் செயல்படடு வருகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்கும் புகார்களை பதிவு செய்யாமல் இருப்பது வேறு வழியின்றி வழக்கு பதிவு செய்ய வேண்டியிருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீதும் வழக்கு ...

Read More »

சர்வதேச மகளிர் தினம்: சிபிஐ(எம்) வாழ்த்து1

‘பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே’ என்ற பாரதிதாசனின் வரிகள், சமுதாயத்தின் சரிபாதி விடுதலை பெறுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. கம்யூனிஸ்டுகள் அனைத்துவித பாகுபாடுகளையும் களைவதற்கான போராட்டங்களுக்கு சொந்தக்காரர்கள் என்ற முறையில் உலகெங்கிலும் உயர்ந்த லட்சியத்துக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடும் பெண்களுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு இந்நாளில் தன் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது. முதலாளித்துவத்தின் இன்றைய முகமான நவீன தாராளமயம் சாதாரண மக்களின் வாழ்வுரிமைக்கும் வாழ்வாதாரத்துக்கும் எதிராக யுத்தம் நடத்துகிற காலம் இது. பொருளாதார பாகுபாடுகள் அதிகரித்து வருகின்றன. விலைவாசி ...

Read More »