Tag Archives: மதுரை

கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தார் என்பதற்காக தலித் இளைஞர் மீது ஆதிக்க சாதியினர் நடத்திய கொலைவெறித் தாக்குதலுக்கு வன்மையான கண்டனங்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வடக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிபிஐ(எம்) உறுப்பினர் கண்ணுச்சாமி என்பவரது மகன் சிவன்ராஜா மே 27 அன்று பேருந்து நிழற்குடையில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தார் என்பதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதி இளைஞர்கள் ஏண்டா உனக்கு எவ்வளவு திமிர் இருந்தால் எங்க முன்னாடியே இப்படி திமிராக உட்கார்ந்து இருப்பாய் என்று தாக்கியதோடு ஐந்திற்கும் மேற்பட்ட இளைஞர்களைத் திரட்டி வீட்டிற்கும் சென்று கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் சிவன்ராஜின் பற்கள் ...

Read More »

தொகுதி மேம்பாட்டு நிதி: நாங்கள் கொண்டு வந்ததும் அவர்கள் கொண்டு போவதும்!

கடந்த மாதம் 25ஆம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் கொரோனா சிகிச்சைப் பிரிவுக்குத் தேவையான துணைக் கருவிகளை வாங்க நிதி ஒதுக்கீடு செய்தேன். மொத்தமாக நிதியை ஒதுக்கி, “தேவையான துணைக்கருவிகளை வாங்கிக்கொள்ளுங்கள்” என்று சொல்லாமல், கொரோனா வார்டுக்கு என்னவெல்லாம் தேவை என்பதை மருத்துவமனை முதல்வரிடமும் மருத்துவர்களிடமும் கருத்துக்கேட்டு, அதன் அடிப்படையில் என்னென்ன துணைக்கருவிகள் வாங்க வேண்டும் என்ற பட்டியலோடு நிதி ஒதுக்கீடு செய்தேன். அன்று மாலையே மாவட்ட ஆட்சியர் நிர்வாக உத்தரவினை வழங்கினார். அன்றிலிருந்து வேலை தொடங்கியது.நாடெங்கும் மருத்துவக்கருவிகளை ...

Read More »

கொரோனா வைரஸ் மருத்துவ சிகிச்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலா 1 கோடி நிதி ஒதுக்கீடு!

கொரோனா வைரஸ் நோய் மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்கள் அதாவது வென்ட்டிலேட்டர் மற்றும் பாதுகாப்பு கருவிகள் வாங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் (மாநிலங்களவை), பி.ஆர்.நடராஜன் (கோவை), சு.வெங்கடேசன் (மதுரை) ஆகியோர் தலா 1 கோடி ரூபாய் சம்மந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஏற்கனவே 1 கோடியே 8 லட்சம் வழங்கிவிட்டார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். – கே. பாலகிருஷ்ணன் மாநிலச் செயலாளர்

Read More »

மதுரை, கீழடியில் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்க CPIM வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் சென்னையில் 27-9-2016 அன்று கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், டி.கே.ரங்கராஜன், கே.பாலகிருஷ்ணன், அ.சவுந்தரராசன், பி.சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:- மதுரை, கீழடியில் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் மதுரைக்கு அருகில் உள்ள கீழடி கிராமத்தில் கடந்த இரண்டாண்டுகளாக மத்திய தொல்லியல்துறையின் சார்பில் அகழ்வாய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை ...

Read More »