Tag Archives: மத்திய அரசு

மத்திய அரசு, ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகளை மாநிலங்களுக்கு அளித்திட வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தில்!

மத்திய அரசு, ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகளை மாநில அரசுகளுக்கு அளித்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் சார்பில் வியாழன் அன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், 2020-21 நிதியாண்டிற்கு, மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகளை, மத்திய அரசால் அளிக்க இயலவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் ஒப்புக்கொண்டிருப்பது அட்டூழியமாகும். இவ்வாறு மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை என்பது சுமார் 2.35 லட்சம் ...

Read More »

ஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்!

தமிழகத்தில் 5 மாதத்திற்கு மேலாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கம் கடைபிடிக்கப்படுகிறது. பொது முடக்கம் மூலமாக மட்டுமே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என்று மத்திய அரசும், அதை அப்படியே பின்பற்றிய மாநில அரசும் நோய்த்தொற்று அதிகமாகிக் கொண்டிருப்பதை கையறு நிலையில் வேடிக்கை பார்ப்பதாகவே தெரிகிறது. பரிசோதனை எண்ணிக்கை எதுவாக இருந்தாலும் கடந்த சில நாட்களாக தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 6000க்குள்ளாகவே இருப்பதும், மரணங்களின் எண்ணிக்கை 115 என்ற அளவில் இருப்பது பல விதமான கேள்விகளை எழுப்புகிறது. மேலும், ...

Read More »

அவசரச்சட்டத்தின் மூலம் கூட்டுறவு வங்கிகளைக் கையகப்படுத்தி இருப்பதைக் கைவிட வேண்டும்! – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்..

மத்திய அரசு, அவசரச்சட்டத்தின் மூலம் கூட்டுறவு வங்கிகளைக் கையகப்படுத்தி இருப்பதைக் கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியிருக்கிறது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசாங்கம் ஓர் அவசரச் சட்டத்தின்மூலம் நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் உள்ள 1540 கூட்டுறவு வங்கிகளைக் கையகப்படுத்திட, ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கண்டிக்கிறது. கூட்டுறவு வங்கிகள் உட்பட கூட்டுறவுத்துறை மாநில அரசாங்கங்களின் மேற்பார்வையில் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்கள் எதையும் கலந்தாலோசிக்காமலேயே மத்திய ...

Read More »

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளரைச் சந்தித்து சிபிஐ(எம்) கோரிக்கை மனு

பெறுநர்                 மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,                 தமிழ்நாடு அரசு,                 தலைமைச் செயலகம்,                 சென்னை – 600 009. தமிழ்நாடு அரசு தலைமைச்செயலாளர்  அவர்கள் வழியாக இன்று நேரில் சந்தித்து அளிக்கப்பட்டது. வணக்கம். பொருள்:-       கொரோனா நோய்த்தொற்று பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் – மருத்துவ சிகிச்சை – ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்  – அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை வற்புறுத்துவது தொடர்பாக… நோய்தொற்று மற்றும் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. அடுத்து ...

Read More »

கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர் பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்டக்குழு வலியுறுத்தல் இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மத்திய அரசின் நேரடி பார்வையில் இயங்கி வரும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சுமார் 7,000த்திற்கும் அதிகமான ஒப்பந்த தொழிலாளர்கள் எல்&டி போன்ற ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் வேலை செய்து வருகிறார்கள். இதில் 6000 பேர் வடமாநில தொழிலாளர்கள். இவர்களுக்கு குறைந்த அளவு ஊதியமே வழங்கப்படுகிறது. 144 தடை உத்தரவு பிறப்பித்த இந்த காலத்தில் கூடங்குளம் ...

Read More »

ஊரடங்கை பயன்படுத்தி சம்பள வெட்டு, பணி நீக்கம் செய்யும் ஊடக நிறுவனங்கள்!

நாடு தழுவிய ஊரடங்கை பயன்படுத்திக் கொண்டு ஊடக முதலாளிகள் தன்னிச்சையாக ஆட்குறைப்பு செய்கின்றன. சம்பள குறைப்பை திணிக்கின்றன. “கொரோனா வைரஸ் பரவல் ஒரு தேசிய நெருக்கடி. இந்த நெருக்கடியை ஊடக நிறுவனங்களும் அதன் பங்குதாரர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் சுமைகளை தொழிலாளர்கள் மீது சுமத்தக் கூடாது” என்று நேஷனல் அலையன்ஸ் ஆப் ஜர்னலிஸ்ட் (என்ஏஜே) மற்றும் டெல்லி யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் (டியுஜே) என்ற இரண்டு ஊடகவியலருக்கான சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன. ஊரடங்கை நிறுவன மூடலாக மாற்றும் ஊடக நிறுவனங்கள்ஊரடங்கால் விற்பனை குறைந்திருக்கிறது. விளம்பரங்கள் ...

Read More »

நாடுமுழுதும் உள்ள ஏழைகளைக் காப்பாற்றிட இருப்பிலுள்ள தானியங்களை விநியோகித்திட மத்திய அரசு முன்வர வேண்டும்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை நாடு, மிக வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸைத் தடுத்துநிறுத்திட முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாலும், அதன் பொருளாதாரப் பாதிப்புகளும் ஏற்கனவே நாட்டின் பெரும்பான்மையான ஏழை மற்றும் விளிம்புநிலைமக்களைக் கடுமையாக பாதித்திருப்பதாலும், மத்திய அரசாங்கம் இருப்பிலுள்ள தானியங்களை பொது விநியோக முறையில் ஏழைகளுக்கு விநியோகம் செய்திட முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: நாட்டில், சுற்றுலாத்துறை, கட்டுமானத்துறை, போக்குவரத்துத்துறை போன்ற பல துறைகளிலும் வேலைகள் ஸ்தம்பித்திருப்பதால், அவற்றில் ...

Read More »