Tag Archives: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மத்திய அரசின் கொள்கைகள் நாட்டின் ஒற்றுமைக்கு உதவாது…

நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால் நாட்டிலுள்ள பல்வேறு கலாச்சாரங் களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள், நாட்டிலுள்ள பல்வேறு மொழிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் நாடு ஒற்றுமையாக இருந்திடும் என்று கூறி இவற்றைப் பரிசீலனை செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Read More »

விவசாயிகள் சங்கத் தலைவர்களை சிறையிலடைப்பதா? அடக்குமுறையைக் கைவிடுக!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் புதிய சட்டம் இயற்ற வேண்டும். ஈசன் உட்பட ஐந்து தலைவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கைத் திரும்பப் பெறுவதோடு, கோவைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து பேரையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Read More »

வேதாரண்யத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலை உடைப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் நகரில் பேருந்து நிலையம், காவல்நிலையம், அரசு மருத்துவமனை ஆகியவை அமைந்துள்ள நகரத்தின் மையப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த டாக்டர் அம்பேத்கர் சிலை உடைத்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிப்பதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, கைது செய்ய வேண்டுமென வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது. டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்தியாவின் முன்னேற்றத்திற்கும், அரசியல் சாசன உருவாக்கத்திற்கும் அரும்பணியாற்றியவர். இந்திய சமூகத்தில் காலங்காலமாக நீடித்து வரும் மநுதர்ம அடிப்படையிலான சாதிய ஏற்றத்தாழ்வுகளையும், சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்ட வாழ்நாள் முழுவதும் ...

Read More »

தீப்பற்றி எரியும் வீட்டிற்கு வெள்ளையடிக்க முயலும் நிர்மலா சீத்தாராமன்

மோடி அரசு விவசாயத்துறையை மீட்டெடுப்பது, பாசன மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்கி நீர் மேலாண்மையை மேம்படுத்துவது, முழுமையான பயிர் இன்சூரன்ஸ் திட்டங்களை நிறைவேற்றுவது, விவசாயத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலையையும், வருமானத்தையும் உறுதி செய்வது, வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்வது, அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் சிறு-குறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு சந்தை உத்தரவாதம், கடன் வழங்குவது, ஜி.எஸ்.டி.யிலிருந்து விதிவிலக்கு அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென சிபிஐ (எம்) தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

Read More »

வேகப்படுத்தப்படும் தனியார்மயம் வேலையின்மையை மேலும் அதிகப்படுத்தும்!

ஜூன் 18 ஆம் தேதியன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சமர்ப்பித்த குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

Read More »