Tag Archives: மின்கட்டண உயர்வு

கொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்!

கொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திட வேண்டுமென தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களுக்கும், மின்சாரத்துறை அமைச்சர் திரு. பி. தங்கமணி ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். பெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்:- கொரோனா காலத்திற்கு மின் கட்டணம் குறைப்பு கோருவது தொடர்பாக:- * கொரோனா ஊரடங்கு காலத்தில் மத்திய, மாநில அரசுகள் ...

Read More »

உத்தேசித்துள்ள மின் இணைப்பு கட்டண உயர்வை முழுமையாக கைவிடுக!

தமிழ்நாடு மின்சார ஒழுங்கு ஆணையம் 2018-19ம் ஆண்டில் உத்தேசித்துள்ள மின் இணைப்பு கட்டண உயர்வை முழுமையாக கைவிட வேண்டுமெனவும், உத்தேச கட்டண உயர்வை தவிர்க்க வாய்ப்புள்ள மாற்று ஆலோசனைகளையும் சிபிஐ(எம்) முன்வைத்துள்ளது.

Read More »

தமிழக மின் பற்றாக்குறையை போக்கிடுக: மின் கட்டண உயர்வை திரும்பப் பெற்றிடுக!

தீர்மானம்:2 தமிழக மின்சார வாரியத்தில் தற்போது (2,52,32,000) இரண்டு கோடியே ஐம்பத்திரண்டு லட்சத்து முப்பத்திரண்டாயிரம், மின் இணைப்புகள் உள்ளன. ஆண்டுதோறும் குறைந்தபட்சம் எட்டு லட்சத்திலிருந்து பத்து லட்சம் வரை மின் இணைப்புகள் கூடிக் கொண்டே வருகின்றன. குறிப்பாக 2005ம் ஆண்டிற்கு பிறகு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பல புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு தமிழகத்தின் மின்தேவைக்கு ஏற்ப உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை தமிழகத்தை ஆண்ட திமுக, அஇஅதிமுக இரண்டு கட்சிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2001 ஆம் ஆண்டு முதல் 2013 ...

Read More »

சிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில் 2014 செப்டம்பர் 23-24 ஆகிய இரு நாட்களில் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், எம்.பி., தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராஜன், மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, அ. சவுந்தரராசன், பி.சம்பத், கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: 1. மின்கட்டண உயர்வு அறிவிப்பை திரும்பப் பெறுக: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ...

Read More »