Tag Archives: மீத்தேன்

தமிழகத்தை பாலைவனமாக்க காவிரிப்படுகை பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி சிபிஐ(எம்) கண்டனம்

காவிரிப்படுகை மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறை எரிவாயு எடுப்பதற்கான முயற்சிகளை இரு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய மோடி அரசு மேற்கொண்டது. தமிழ்நாட்டில் எடப்பாடி அரசும் அதற்கு ஆதரவாகச் செயல்பட்டது. தனியார் கார்ப்பரேட் நிறுவனத்தின் கொள்ளை லாபத்திற்காக டெல்டா பகுதியையும், மக்களையும் காவுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட மத்திய, மாநில அரசுகளின் இந்த மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜனநாயக அமைப்புகளும் இணைந்து போராடி தடியடி, சிறை, பொய்வழக்கு உள்ளிட்ட பல ...

Read More »

சிபிஐ(எம்) இன் பொங்கல் திருநாள் வாழ்த்து!

தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றும், கொண்டாடி குதூகலிக்கும் இந்த நன்னாளில் அனைவரின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துகிறது. உழுபவன் கையில் நிலம் இருக்க வேண்டும்; இருக்கும் நிலம் பாதுகாக்கப்பட வேண்டும். உலகத்தார் அனைவருக்கும் உணவளிக்கும் உழவன் ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கு உரிமையுள்ளவராய் இருக்க வேண்டும். உணவளிக்கும் தொழில் கட்டுபடியானதாய், மகிழ்ச்சி தரத்தக்கதாய் அமைவதற்கு விதையும் உரமும் மருந்தும் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும். நதியும் குளமும் கிணறும் பராமரிக்கப்பட்டு ...

Read More »

மீத்தேன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி

மீத்தேன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தஞ்சை மாவட்டம் முழுவதும் புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஆர்.மனோகரன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

Read More »

மீத்தேன் திட்டத்தை முற்றிலும் இரத்து செய்க! தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்

தஞ்சை திருவாரூர் மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்திற்காக கிரேட் ஈஸ்டர்ன் என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. பாகூர் தொடங்கி ராஜமன்னார்குடி வரையிலும் உள்ள ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 819 ஏக்கர் விளை நிலங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என சொல்லப்பட்டது. 500 முதல் 1650 அடி வரையில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்றினால்தான் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என்பதால் இது விவசாயத்தைக் கடுமையாக பாதிக்கும். இதன் காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், விவசாய இயக்கங்களும் இத்திட்டத்திற்கு ...

Read More »