Tag Archives: மே தினம்

விடியாத பொழுதென்று எதுவும் இல்லை, முடியாத துயர் என்று எதுவும் இல்லை – என்ற நம்பிக்கையோடு மேம்பட்ட பொன்னுலகை உருவாக்கிட சபதம் ஏற்போம்!

உலகத் தொழிலாளர் தினமான மே தினத்தில் கருத்தாலும், கரத்தாலும் உழைக்கக்கூடிய அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக அதிர வைக்கக்கூடிய பேரணிகளும், ஊர்வலங்களும், ஆர்ப்பாட்டங்களுமாக மே தின விழா நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு அவரவர் இருந்த இடத்திலேயே, இப்போதிருக்கும் இடர்பாடு நீங்க உலகிற்கு மாற்றாக எல்லோருக்கும், எல்லாமும் கிடைக்கக்கூடிய ஒரு பொன்னுலகை உருவாக்குவதற்கான சூளுரையை ஏற்க வேண்டியவர்களாக உள்ளோம். கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலகம் சுருண்டு கிடக்கிறது. ...

Read More »

உழைக்கும் மக்களின் உரிமை போராட்டங்களை முன்னெடுப்போம்!

மதவெறி, சாதிவெறி சக்திகளை முறியடித்து உழைக்கும் மக்களின் உரிமை போராட்டங்களை முன்னெடுப்போம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின வாழ்த்து உழைப்பாளி மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் மே தின நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம். மே தினம் என்பது இந்த உலகம் உழைப்பவருக்கே உரியது என்று ஓங்கி உரைத்த உரிமைத் திருநாளாகும். அமெரிக்காவில் மையம் கொண்ட உலகப் பொருளாதார நெருக்கடி, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்களின் வாழ்வாதாரங்களை சூறையாடத் துவங்கி பத்தாண்டுகள் கடந்து ...

Read More »