Tag Archives: மோடி அரசு

பாஜக-விற்கும் முகநூல் நிறுவனத்திற்கும் இடையேயான பிணைப்பு குறித்து கிரிமினல் புலனாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்: பி.ஆர்.நடராஜன் எம்.பி கடிதம்!

மத்தியில் ஆளும் பாஜக-விற்கும் முகநூல் நிறுவனத்திற்கும் இடையேயான பிணைப்பு குறித்து கிரிமினல் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும் என்று நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு தலைவருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது: தாங்கள் முகநூல் நிறுவனத்துடன் செப்டம்பர் 1, 2 தேதிகளில் நடத்தவுள்ள கூட்டம் தொடர்பாக, நான் தங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இந்தியாவில் முகநூல் நிறுவனம் கடைப்பிடித்துவரும் கேள்விக்குரிய நடைமுறைகள் குறித்தும் அது தன்னுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் ...

Read More »

மாநில அரசுகளை திவாலாக்கும் மத்திய அரசின் முயற்சி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

சரக்கு மற்றும் சேவை வரிகள் (GST) மன்றத்தின் கூட்டம் புதுடில்லியில் மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கால் ஏற்பட்ட நிதிபற்றாக்குறையை மாநிலங்கள் ஈடுசெய்வது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள திட்டங்கள் மாநில அரசுகளை திவால் நிலைக்கு தள்ளும் ஆபத்து உள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஜிஎஸ்டி வரி இந்தியா முழுவதும் 2017ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டது. இதனால் மாநிலங்கள் தங்கள் சொந்த தேவைக்கு சுயேச்சையாக வரிவிதிப்பு செய்யும் அதிகாரம் முழுவதும் பறிக்கப்பட்டு விட்டது. பேரிடர் நிவாரணத்திற்காக ...

Read More »

OBC இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் – நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை கைவிட வேண்டும்!

மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்.. மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு  வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதமான இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென அறிவித்தது. இதனை எதிர்த்து, இந்திரா சஹானி என்பவரால் தொடுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம், இதர பிற்படுத்தப்படோருக்கான 27 சதமான இடஒதுக்கீட்டை செயல்படுத்திட வேண்டுமென தீர்ப்பளித்தது. அதே சமயம் இந்த சலுகையினை பெறுவதற்கு வருமான வரம்பினை (கிரிமிலேயர்) தீர்மானிக்க வேண்டுமென உத்தரவிட்டது. இதன்படி வருமான வரம்பினை தீர்மானிப்பதற்கு நீதிபதி ராம் நந்தன் பிரசாத் அவர்கள் ...

Read More »

விவசாயத்திற்கு கடன் வழங்கக்கோரி ஜுலை 17 ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறைகூவல்… இந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து குறித்த காலத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு விவசாயிகளும் மகிழ்ச்சியுடன் பணிகளை துவக்கினர். அந்த மகிழ்ச்சியில் மண்அள்ளி போடும் வகையில் கூட்டுறவு வங்கிகள் பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன் தர மறுத்துவருகின்றனர். கடந்த காலத்தில் வாங்கிய கடனை கட்டவில்லை என்றும் கூடுதல் கடன் விவசாயிகள் பெயரில் இருக்கிறது என்ற காரணத்தைக் கூறி கடன் தர மறுக்கின்றனர். இதனால் தண்ணீர் திறக்கப்பட்டும் வேளாண்மைப் பணிகளை தொடர முடியாமல் விவசாயிகள் திகைத்து நிற்கின்றனர். அதிலும் நகைக்கடன் அனுமதி வழங்கும் ...

Read More »

நிலைகுலைந்து நிற்கும் இந்தியப் பொருளாதாரம் மீட்க வழி தெரியாமல் முரட்டுத்தனமாக மக்களைத் தாக்கும் மோடி அரசு!

கொரோனா தாக்கத்திற்கு முன்பும், பின்புமான நிலைமைகளின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் நிலைகுலைந்து நிற்கிறது என்றும், அதிலிருந்து நாட்டை மீட்க வழி தெரியாத மோடி அரசு மக்கள் மீது முரட்டுத் தனமான தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூட்டம் புதனன்று இணைய வழியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் இதுதொடர்பாக கூறப்பட்டிருப்பதாவது: 2020 ஜூன் 1 அன்று, மத்திய அரசாங்கம், முன்பு அறிவித்த நிதித்தொகுப்புகளுடன், மேலும்20 லட்சம் கோடி ரூபாய்க்கு நிதித் தொகுப்புகளை ...

Read More »

மாநிலங்களின் உரிமையை பறிக்கும் மின்சார சட்டத் திருத்த மசோதா 2020ஐ மத்திய அரசே கைவிடு…

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யாதே! மாநிலங்களின் உரிமையை பறிக்கும் மின்சார சட்டத் திருத்த மசோதா 2020ஐ மத்திய அரசு கைவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்! மத்திய அரசு மின்சாரத் துறையில் தனியார்மயமாக்கலை எவ்வளவு விரைவாக செயல்படுத்திட முடியுமோ அவ்வளவு விரைவாக செய்திட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு முனைப்பு காட்டி செயல்பட்டு வருகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டு நாடே பரிதவித்து கொண்டிருக்கிற இந்த அசாதாரணச் சூழலில் மின்சார வாரிய ஊழியர்கள் வைரஸ் தொற்று தடுப்புப் பணியில் இரண்டாம் கட்ட வீரர்களாக பணியாற்றி வரும் சூழலில்,  தனியார் ...

Read More »