Tag Archives: லாக்கப் மரணம்

கிருஷ்ணகிரி குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் லாக்கப் மரணம் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்

லாக்கப் மரணங்களை தடுப்பதற்கும், காவல்துறையினர் சட்டவிதிகளையும், மனித உரிமைகளையும் மீறாமல் கடமையாற்றுவதை தமிழக அரசும், காவல்துறை உயர்அதிகாரிகளும் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்...

Read More »

வள்ளியூர் காவல்நிலையத்தில் லாக்கப் மரணம் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் டிஜிபிக்கு கடிதம்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே உள்ள கப்பியறை கிராமத்தைச் சேர்ந்த லீலாபாய் என்பவரை கூடங்குளம் காவல்துறை ஆய்வாளர் அடித்து, துன்புறுத்தியதில் மரணமடைந்துள்ளார். இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்வதுடன், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள், இன்று (29.8.2019) உயர்திரு. காவல்துறை தலைவர் (டிஜிபி) அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் நகல் கீழே தரப்பட்டுள்ளது. ...

Read More »

முதுகுளத்தூர் காவல்நிலையத்தில் லாக்கப் மரணம் – படுகொலை செய்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக!

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 27) என்பவரை, 1.08.2018 அன்று முதுகுளத்தூர் காவல் நிலையத்தைச் சார்ந்த கோதண்டபாணி, லிங்ககிருஷ்ணன் மற்றும் இரண்டு காவல் அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். 02.08.2018 அன்று மணிகண்டனை விசாரிக்கச் சென்ற அவருடைய தாயாரிடம் முதுகுளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் இந்த வழக்கிலிருந்து மணிகண்டனை விடுவிக்க வேண்டுமென்றால் ரூ. 85,000/- லஞ்சம் கொடுக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார். மணிகண்டனின் தாயார் பணம் கொடுக்காததால் மணிகண்டனை காவல்நிலையத்திற்குள் வைத்து கடுமையாக அடித்து, உதைத்து, சித்தரவதை செய்ததன் ...

Read More »