Tag Archives: ஹைட்ரோ கார்பன் திட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூன் 12 மனிதச் சங்கிலிப் போராட்டம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு!

காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கி, தமிழக விவசாயிகளின் வாழ்வதாரத்தை அடியோடு அழிக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு உள்ளிட்ட பல்வேறு பேரழிவுத் திட்டங்களை மத்திய பாஜக அரசும், மாநில அதிமுக அரசும் திட்டமிட்டு செயல்படுத்த முனைந்து வருகின்றன. இத்திட்டங்களால் தமிழக விவசாயமும், விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு, காவிரி பாசன மண்டலம் நாசமாகும் ஆபத்து உள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. ...

Read More »

தமிழகத்தை பாலைவனமாக்க காவிரிப்படுகை பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி சிபிஐ(எம்) கண்டனம்

காவிரிப்படுகை மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறை எரிவாயு எடுப்பதற்கான முயற்சிகளை இரு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய மோடி அரசு மேற்கொண்டது. தமிழ்நாட்டில் எடப்பாடி அரசும் அதற்கு ஆதரவாகச் செயல்பட்டது. தனியார் கார்ப்பரேட் நிறுவனத்தின் கொள்ளை லாபத்திற்காக டெல்டா பகுதியையும், மக்களையும் காவுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட மத்திய, மாநில அரசுகளின் இந்த மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜனநாயக அமைப்புகளும் இணைந்து போராடி தடியடி, சிறை, பொய்வழக்கு உள்ளிட்ட பல ...

Read More »