Tag Archives: anna university

மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

அரசுப்பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் தனியார்மருத்துவ கல்லூரிகளில் இடஒதுக்கீட்டை பெற்ற மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் முழுவதையும் அரசே முழுமையாக ஏற்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மத்தியில் ஆளும் பிஜேபி அரசு மாநில உரிமையை பறித்து கடந்த 2017 முதல் மருத்துவ படிப்பிற்காக அகில இந்திய அளவில் நீட் எனும் தேர்வை நடத்துகிறது. இத்தேர்வால் தமிழகத்தின் கிராமப்புற, ஏழை, எளிய அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு சிதைக்கப்பட்டது. இதுவரை இத்தேர்வால் 18 மாணவர்கள் தற்கொலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் ...

Read More »

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கக்கூடாது – துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் சிபிஐ(எம்) வலியுறுத்தல்

பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடக்கலை மற்றும் பல்துறை அறிவியல் கல்வியில் அண்ணா பல்கலைகழகம், இந்தியாவின் தலைசிறந்த பல்கலைகழகங்களில் ஒன்றாக விளங்குகிறது. 1978ல் தமிழக அரசு தொடங்கிய இப்பல்கலைக்கழகம், ஒருமை பல்கலைக் கழகமாக கிண்டி உள்ளிட்டு நான்கு வளாகங்களில் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 552 கல்லூரிகள் இயங்கிவருகின்றன. மேலும், இந்த பல்கலைக் கழகம் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பலரையும் தலைசிறைந்த விஞ்ஞானிகளாக உருவாக வழியமைத்துள்ளது. இப்பல்கலைகழகத்திற்கு சூரப்பா துணைவேந்தராக நியமிக்கப்பட்டதிலிருந்து, தொடர்ந்து சர்ச்சைகள் எழுகின்றன. தமிழக அரசு, அண்ணா பல்கலை கழகத்தை பிரித்து, ...

Read More »