Tag Archives: Atrocities against Dalits

கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தார் என்பதற்காக தலித் இளைஞர் மீது ஆதிக்க சாதியினர் நடத்திய கொலைவெறித் தாக்குதலுக்கு வன்மையான கண்டனங்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வடக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிபிஐ(எம்) உறுப்பினர் கண்ணுச்சாமி என்பவரது மகன் சிவன்ராஜா மே 27 அன்று பேருந்து நிழற்குடையில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தார் என்பதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதி இளைஞர்கள் ஏண்டா உனக்கு எவ்வளவு திமிர் இருந்தால் எங்க முன்னாடியே இப்படி திமிராக உட்கார்ந்து இருப்பாய் என்று தாக்கியதோடு ஐந்திற்கும் மேற்பட்ட இளைஞர்களைத் திரட்டி வீட்டிற்கும் சென்று கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் சிவன்ராஜின் பற்கள் ...

Read More »

விழுப்புரம் சேஷசமுத்திரம் தலித் மக்கள் மீதான தாக்குதல் – சிபிஐ(எம்) கண்டனம்!

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டத்திலுள்ள சேஷசமுத்திரம் கிராமத்தில் தலித் பகுதி மக்களின் மாரியம்மன் கோவில் சாமி ஊர்வலமும், தேரோட்டமும், பொதுப்பாதை வழியாக செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலித் பகுதி மக்கள் குடியிருப்புகள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. மின்மாற்றியை உடைத்து மின்விநியோகத்தை தடை செய்து, பெட்ரோல் குண்டுகள் மூலம் சாமி தேரும், குடியிருப்புகளும் கொளுத்தப்பட்டுள்ளன. பல வீடுகள், தெருவிளக்குகள், குடிநீர் குழாய்கள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளன. இந்தக் கொடிய சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தலித் மக்களின் சாமி ...

Read More »