Tag Archives: BJP government

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் டிசம்பர் 14 அன்று – சிபிஐ (எம்) சார்பில் அம்பானி, அதானி பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம்

மூன்று வேளாண் சட்டங்களையும், இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்கான மின்சார சட்டத் திருத்த மசோதா (2020)-ஐ முற்றாக ரத்து செய்யவேண்டுமென வலியுறுத்தி நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து டிசம்பர் 8 அன்று நாடு தழுவிய மகத்தான பந்த் போராட்டம் நடைபெற்றது. டிசம்பர் 9 அன்று, 6வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்த போது மத்திய அரசு ஆணவப் போக்கோடு நடந்து கொண்ட காரணத்தினால் விவசாய சங்க கூட்டமைப்பு போராட்டத்தை தீவிரப்படுத்த அறைகூவல் விடுத்துள்ளது. டிசம்பர் 14 அன்று, தில்லி மாநகரத்தின் அருகமையில் இருக்கும் மாநில ...

Read More »

மாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்

மருத்துவராக வேண்டும் என்ற மாணவர்களின் கனவை நீட் தேர்வின் மூலம் தகர்த்து வருகிறது மத்திய அரசு. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென நாடு தழுவிய அளவில் பலத்த எதிர்ப்புகள் எழுந்தபோதும் மத்திய பாஜக அரசு இதற்கு எதற்கும் செவி சாய்க்காமல் நடத்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது, நீதிமன்றங்களும் அதற்கு ஆதரவாக தான் இருக்கின்றன. இதன் விளைவாக, எத்தனையோ மாணவர்களும் மாணவிகளும் மருத்துவ கனவு தகர்ந்து தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்கள். கடந்த 8ம் தேதி, அரியலூர் மாவட்டம் செந்துறை ...

Read More »

தேசிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக தமிழக அரசு நிராகரிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்…

மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய கல்விக் கொள்கை மாநில உரிமைகளை பறிப்பது, அதிகாரத்தை மையப்படுத்தவது, வணிகமயமாக்கலுக்கு கல்வியை முற்றிலும் திறந்துவிடுவது, காவிமயமாக்குவது, ஏழைகளுக்கு கல்வியை மறுப்பது, ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டை புறக்கணிப்பது, வழக்கொழிந்த சமஸ்கிருத மொழியை இதர மொழி பேசும் மக்கள் மீது திணிப்பது, அனைவருக்கும் கல்வி என்பதற்கு பதிலாக முதல் தலைமுறை மாணவர்களை ஒதுக்கி வைக்கவும் வடிகட்டுவதற்கும் வழிகோலுவது என்று பல்வேறு பிற்போக்கான நடவடிக்கைகளுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள், கல்வித்துறை செயல்பாட்டாளர்கள் என்று அனைத்து தரப்பினராலும் இது நிராகரிக்கப்பட்டிருக்கிறது. ...

Read More »

மத்திய அரசு, மாநிலங்களுக்கு அளிக்க வேண்டியஜிஎஸ்டி நிலுவைத்தொகைகளை அளித்திட வேண்டும்:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

புதுதில்லி, ஜூலை 30- மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அளிக்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகைகளை உடனடியாக அளித்து, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நடத்திவரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு மார்ச் 31 வரையிலும் முடியும் நிதியாண்டு வரைக்குமே இதுவரையிலும் ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகளை வழங்கியிருக்கிறது. எனினும், நிதிச் செயலாளர் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம், அரசாங்கத்தால் 2020-21 நிதியாண்டிற்கான ...

Read More »

கல்வியைமத்தியத்துவப்படுத்தியிருப்பதையும், மதவெறி அடிப்படையில் மாற்றியிருப்பதையும்மற்றும் வணிகமயப்படுத்தி இருப்தையும் கடுமையாக எதிர்க்கிறது. மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை!

புதுதில்லி, ஜூலை 30- மத்திய அரசு, மத்தியத்துவப்படுத்தியிருப்பதையும், மதவெறி அடிப்படையில் மாற்றியிருப்பதையும் மற்றும் வணிகமயப்படுத்தி இருப்தையும் கடுமையாக எதிர்க்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அமைச்சரவை, புதிய கல்விக் கொள்கையை ஒருதலைப்பட்சமாகத் திணிப்பதற்கும், மத்திய மனிதவள வளர்ச்சித்துறையின் பெயரை மாற்றியிருப்பதற்கும் தன் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. கல்வி, நம் அரசமைப்புச் சட்டத்தின் பொதுப் பட்டியலில் இருக்கிறது. இப்போது மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கையை பல்வேறு மாநில அரசாங்கங்களும் ...

Read More »

மருத்துவ படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!!

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தமிழ்நாடு உள்பட மாநிலங்கள் வழங்கும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு இதுவரை வழங்கப்படவில்லை. இந்த ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அமலாக்க வேண்டுமெனவும், அந்தந்த மாநிலத்தில் உள்ள இட ஒதுக்கீடு சட்டத்தின் படி இம்மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பிரதான அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தன. இதன்படி தமிழ்நாட்டிலிருந்து வழங்கப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 சதமானம், பட்டியலினத்தோருக்கு ...

Read More »

ஆகஸ்ட்20-26 அகில இந்திய எதிர்ப்பு வாரம் அனுசரித்திடுக!மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அறைகூவல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் முதன்முறையாக இணையத்தின் வழி (ஆன்லைனில்) ஜூலை 25-26 தேதிகளில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று திங்கள்கிழமை மாலை கூட்டத்தின் முடிவுகளை விளக்கி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது: கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பு பிரதமர் நரேந்திர மோடி எவ்விதத் திட்டமிடலும் இல்லாது, திடீரென்று அறிவித்த பொது முடக்கம் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைப் பரவாது கட்டுப்படுத்துவதில் வலுவிழந்திருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மிக நீண்ட காலத்திற்கு பொது முடக்கத்தை அறிவித்த போதிலும் அதனைப் பயன்படுத்திக் கொண்டு, ...

Read More »

மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை – 2020ஐ உடனடியாக திரும்ப பெறுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

மத்திய அரசு கோவிட் 19ஐ கட்டுப்படுத்துவதை விட்டு விட்டு, இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி பல மக்கள் விரோத, ஜனநாயக விரோத சட்டங்களையும், திட்டங்களையும் அமல்படுத்த முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக “புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை – 2020”  ஒன்றை வெளியிட்டுள்ளது.  இந்த அறிவிக்கை ஜனநாயக விரோதமானது, அநீதியானது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறோம். மத்திய அரசின் இந்த அறிவிக்கைக்கு வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஏற்கனவே உள்ள சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச் சட்டம் ...

Read More »

பாஜகவோடு சேர்ந்து பாமக நடத்தும் கூட்டணிக்கச்சேரியால் தமிழக மக்களின் நலன் பாதிக்கப்பட்டு விடக்கூடாது! கோ.க.மணி அவதூறுக்கு கே.பாலகிருஷ்ணன் பதில்!!

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதமான இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் வழக்கு தொடுத்துள்ள போது, பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் 27 சதமான இட ஒதுக்கீடு போதும் என மனு செய்திருப்பது ஏன்?, இது பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையை விட்டுக் கொடுப்பது ஆகாதா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேள்வி எழுப்பியிருந்தோம். இதற்கு பதிலளிக்கும் வகையில் பாமக தலைவர் திரு. கோ.க. மணி அவர்கள் ...

Read More »

ஆகஸ்ட் 9 இந்தியா பாதுகாப்பு தினம்: “இந்தியாவைப் பாதுகாப்போம்”, “மக்களைப் பாதுகாப்போம்”சிஐடியு, அகில இந்திய விவசாயிகள்சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் அறைகூவல்

புதுதில்லி, ஜூலை 24 வெள்ளையனே வெளியேறு தினமான ஆகஸ்ட் 9 அன்று இந்தியா பாதுகாப்பு தினம் கொண்டாடுவோம். இந்தியாவைப் பாதுகாப்போம், மக்களைப் பாதுகாப்போம் என்று இந்தியத் தொழிற்சங்க மையம், அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் கூட்டாக அறைகூவல் விடுத்துள்ளன. இது தொடர்பாக இம்மூன்று சங்கங்களும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத, விவசாயிகள் விரோத, தொழிலாளர்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம், ஆகஸ்ட் 9 அன்று ...

Read More »