Tag Archives: BJP government

மருத்துவ படிப்பிற்கான இட ஒதுக்கீடு வழங்குவதில் பிற்படுத்தப்பட்ட மக்களை மத்திய பாஜக அரசு பழிவாங்குவது ஏன்?

மருத்துவ படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற பிரச்சனையில் தொடர்ந்து மத்திய பாஜக அரசு சண்டித்தனம் செய்து வருகிறது. இதேபோல ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., மாணவர் சேர்க்கையில் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கொள்கையை முழுமையாக அமல்படுத்த மறுத்து வருகிறது. உதாரணமாக, 2015 முதல் 2019 ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள 23 ஐஐடி நிறுவனங்களில் மொத்தம் உள்ள 25,007 இடங்களில் பிற்படுத்தப்பட்ட பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு ...

Read More »

மருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் பாமக குறுக்குச்சால் ஓட்டுவது ஏன் ? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி

மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதமான இடங்களை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. உச்சநீதிமன்றம் இந்த வழக்கினை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதன்படி தமிழக அரசும் பிரதான அரசியல் கட்சிகளின் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மருத்துவப்படிப்பில் அகில இந்திய தொகுப்புக்கு இளநிலை படிப்பில் 15 சதமான இடங்களையும், முதுநிலை படிப்பில் 25 ...

Read More »

விவசாயிகளை பாதிக்கும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஜூலை 27ல் வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம்

மத்திய பிஜேபி அரசு பொது முடக்கத்தை பயன்படுத்தி மக்களுக்கு விரோதமான சட்டங்களையும் திட்டங்களையும் நிர்வாக உத்தரவின் மூலமாகவும், அவசர சட்டங்கள் மூலமும் நிறைவேற்றி வருகிறது. கொரோனா நோய்த்தொற்று மற்றும் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உருப்படியான நிவாரண உதவிகள் எதையும் செய்யவில்லை. மாறாக, மக்கள் மீது அடுக்கடுக்கான தாக்குதல்களை தொடுத்து வருகிறது.  குறிப்பாக, மின்சார திருத்த சட்ட மசோதா 2020 நடைமுறைக்கு வருமானால் விவசாயத்திற்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்தாகும், குடிசைவாழ் மக்கள் மற்றும் பல்வேறு பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார சலுகை ...

Read More »

பழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்

புதுதில்லி, ஜூன் 22 ஏழை மக்கள் மற்றும் விளிம்புநிலையில் உள்ள மக்களுக்காக சேவை செய்து வருபவர்களுக்கு எதிராக, பழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள் எடுப்பது, எந்தவொரு அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான பிருந்தா காரத் கடிதம் அனுப்பியுள்ளார். மகாராஷ்ட்ர மாநிலத்தில் பீமா கொரேகான் வழக்குடன் சம்பந்தப்பட்ட அரசியல் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களைக் கைது செய்து, மனிதாபிமானமற்ற முறையில் நடத்திக்கொண்டிருப்பது தொடர்பாக, ஞாயிறு அன்று ...

Read More »

இந்திய – சீன எல்லைத் தகராறு செய்ய வேண்டியது என்ன?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த நான்கு பரிந்துரைகள் இந்திய – சீன எல்லைத் தகராறு தொடர்பாக பிரதமர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுச் செயலாளர் சீத்தாராம்யெச்சூரி கலந்து கொண்டார். அப்போது அவர் கட்சியின் சார்பில் அரசாங்கத்திற்கு முன்வைத்த பரிந்துரைகள் வருமாறு: 1.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய-சீன எல்லைக்கோட்டுப்பகுதியில், லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கில், சமீபத்தில் நடைபெற்ற மோதலில் உயிரிழந்த நம் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறது. 2. நம்முடைய அயல் துறை ...

Read More »

மருத்துவ படிப்பில் மத்திய தொகுப்பு இடங்களில் தமிழக இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற உச்சநீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கு…

தமிழகத்திலிருந்து மத்திய தொகுப்பிற்கு மருத்துவ பட்டம் மற்றும் பட்டயப் படிப்பில் எடுத்துக் கொள்ளப்பட்ட 15 சதவிகித இடங்களிலும் முதுநிலை பட்டப்படிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 50 சதவிகித இடங்களிலும் ‘தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு (கல்வி நிலையங்கள், அரசு வேலைவாய்ப்பு மற்றும் பணியிடங்களில் இடஒதுக்கீடு வழங்குதல்) சட்டம் 1993ன் படி இடஒதுக்கீடுகளை பின்பற்றாமல் மத்திய அரசு இந்தச் சட்டத்தை மீறி உள்ளது. எனவே, மத்திய தொகுப்பு இடங்களிலும் தமிழகத்தின் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு ...

Read More »

ஊரடங்கின் துயரம் தீர்க்க ஒரு பொருளாதார செயல்திட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரகடனம்

நாடு தழுவிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கு துவங்கியது முதல் உருவான பிரச்சனைகளும், துயரங்களும் மேலும் தீவிரமடைந்துள்ளன. கோடானுகோடி இந்திய மக்கள், குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள், தினக் கூலித் தொழிலாளர்கள் மற்றும் ஏழை, எளிய மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதற்கு கூட முடியாத அளவிற்கு அவர்களது இருப்பையே இந்த ஊரடங்கு கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தப் பின்னணியில், மத்திய அரசு உடனடியாகவும், நீண்டகால அடிப்படையிலும் மேற்கொள்ள வேண்டிய பொருளாதார திட்டங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசின் முன்பும், நாட்டு மக்களின் ...

Read More »

உங்கள் அரசு வேலை செய்கிறதா பிரதமரே!

சீத்தாராம் யெச்சூரி கோவிட்-19 என்னும் கொரானா வைரஸ் தொற்றை முறியடித்திட தற்போதைய சூழலில், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி,  பிரதமர் நரேந்திர மோடிக்கு சனிக்கிழமையன்று அனுப்பியுள்ள கடிதம். துரதிர்ஷ்டவசமாக, சமூக முடக்கக் காலத்தில் மீண்டும் உங்களுக்குக் கடிதம் எழுத வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. என்னுடைய முந்தைய கடிதங்களுக்கும் தங்களிடமிருந்து எவ்விதப் பதிலும் இல்லை. உண்மையில், அவை வரப்பெற்றதற்கான ஏற்பளிப்புகூட இல்லை. இது வழக்கமற்ற ஒன்று. நாடும், நாட்டின் பெரும்பாலான மக்களும் ...

Read More »

ரம்ஜான் வாழ்த்துக்கள் கூட சொல்ல வேண்டாம்! இந்தப் புறக்கணிப்புகளுக்கு முடிவு கட்டுவோம்!

இசுலாமியர்களுக்கு எதிரான புறக்கணிப்பும் பாரபட்சமும்: மருத்துவத்துறையின் மீது நம்பிக்கையிழக்க வைத்திருக்கிறது… மருத்துவத்துறையில் கூட இசுலாமியர்களுக்கு எதிரான பாரபட்சம் ஒன்றும் புதிதல்ல. ஆனால், சமீபத்தில் தப்ளிகி ஜமாத்தின் தில்லி நிஜாமுதீனிலுள்ள தலைமையத்தைப் பற்றி கொரோனா வைரஸ் பரவலுக்குப் பின்னர் பாய்ச்சப்பட்ட ஊடக வெளிச்சம் நாட்டின் சமூக நல்லிணக்கத்தை பெருமளவிற்கு மாற்றியமைத்திருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதற்கு இசுலாமியர்கள்தான் காரணம் என்ற பிரச்சார தீயில் ஊடகங்கள் எண்ணெய் வார்த்தன. அவர்கள் இசுலாமியர்களை ‘கொரோனா குண்டுகள்’ என்றும் தேசத்தின் எதிரிகள் என்றும் தொலைக்காட்சிகளில் சித்தரிக்க ஆரம்பித்தார்கள். இசுலாமியர் ...

Read More »

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறிக்கை!

இந்தியாவின் “ஹைட்ராக்சி க்ளோரோக்கின்” மருந்து சரக்குகளை அமெரிக்காவிற்கு அனுப்பிய பின், தமிழகத்திற்கு வரவிருந்த சோதனை உபகரணங்கள் அமெரிக்காவிற்கு வழிமாற்றிவிடப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மிரட்டலுக்கு அடிபணிந்து இந்தியா “ஹைட்ராக்சி க்ளோரோக்கின்” மாத்திரைகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ததை, அரசாங்கத்திற்கு ஆதரவாக வாதிடுபவர்கள் அது மனிதாபிமான அடிப்படையில் செய்யப்பட்டது என சப்பைக் கட்டு கட்டினார்கள். அனால் இன்று அமெரிக்கா வெளிப்படுத்தியுள்ள உக்கிரம், அப்படிப்பட்ட மனிதாபிமானத்தை நாம் திரும்பி எதிர்பார்க்க முடியாது என்பதை தெளிவாக்குகின்றது. அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரியப் போர் காலத்து அமெரிக்க சட்டமான “பாதுகாப்பு உற்பத்தி ...

Read More »