Tag Archives: BJP

தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு பதில் அளிக்க மறுப்போம்!

தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு பதில் அளிக்க மறுப்போம்! மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பதில் சொல்வோம்! நாடு முழுவதும் வீடு வீடாக பிரச்சாரம் - சிபிஎம் மத்தியக்குழு அறைகூவல்...

Read More »

மத்திய அரசின் கொள்கைகள் நாட்டின் ஒற்றுமைக்கு உதவாது…

நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால் நாட்டிலுள்ள பல்வேறு கலாச்சாரங் களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள், நாட்டிலுள்ள பல்வேறு மொழிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் நாடு ஒற்றுமையாக இருந்திடும் என்று கூறி இவற்றைப் பரிசீலனை செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Read More »

ரஃபேல் ஊழல் விசாரணையைத் தடுக்கவே சிபிஐ அதிகாரிகள் இடம் மாற்றம்

ரஃபேல் ஊழல் மீதான பொது விசாரணை கோரி நடைபெற்ற இடதுசாரிக் கட்சிகளின் கூட்டத்தில் தோழர் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது; “ரஃபேல் ஊழல் விவகாரம் தொடர்பான விசாரணையை குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ), மேற்கொள்வதைத் தடுக்கவே, அதன் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  மோடிக்கு வேண்டப்பட்ட அதிகாரியைக் காப்பாற்றும் நோக்கில் சிபிஐ இயக்குநரைச் சட்டவிரோதமாக நீக்கியுள்ளார்கள். ரஃபேல் ஊழல் குறித்து அவர் தீவிரமான முறையில் விசாரணையை மேற்கொண்டு வந்ததால்தான், திடீரென்று நள்ளிரவில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அலோக் வர்மா மீதான நடவடிக்கை அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும். ...

Read More »

பயங்கரவாதிகளுடன் பாஜக கூட்டணி – திரிபுரா தேர்தலில் விரட்டியடிப்போம்: சீத்தாராம் யெச்சூரி

தேசபக்தி பற்றி வாய்ச்சவடால் அடிக்கும் பாரதிய ஜனதா கட்சி, திரிபுராவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பிரிவினைவாதிகளுடனும் பயங்கரவாதிகளுடனும் கூட்டணி அமைத்திருக்கிறது. திரிபுராவில் நல்லாட்சி நடத்தி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணியை தேர்தலில் எதிர்கொள்வதற்காக எத்தகைய இழிவான உத்தியையும் கடைப்பிடிப்பதற்கு பாஜக தயாராகி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. திரிபுராவில் இடதுசாரிகளுக்கு எதிராக எத்தகைய உத்தியை கையாண்டாலும் தேர்தலில் பாஜகவால் வெற்றிபெற முடியாது, இந்த உலகையே ஆளத் துடித்த நெப்போலியனே வாட்டர்லூ எனும் இடத்தில் நடைபெற்ற யுத்தத்தில் வீழ்த்தப்பட்டான்; அதேபோல ...

Read More »

சிபிஎம் மாநிலக்குழு அலுவலகம் முன் கட்சி கொடியை எரித்து ஏபிவிபி அராஜகம் – சிபிஐ(எம்) கண்டனம்

ஆர்எஸ்எஸ் தலைமையில் செயல்படக்கூடிய பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பை சேர்ந்த 11 பேர் செவ்வாயன்று (அக்.31) மாலை  6 மணி அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகம் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியின் கொடியையும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் படத்தையும் பெட்ரோல் ஊற்றி எரித்து முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இதனை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. நாடு முழுவதும் வகுப்புவாத ரீதியில் மக்களை பிளவுபடுத்துவதை மார்க்சிஸ்ட் கட்சி உறுதியோடு மக்களை திரட்டி எதிர்த்து வருவதை பொறுத்துக் ...

Read More »

பொருளாதார வீழ்ச்சிக்கு யார் பொறுப்பு?

கடந்த சில தினங்களாக நாட்டின் பொருளாதாரம் குறித்து வந்து கொண்டிருக்கும் செய்திகள் தொடர்ந்து மிகவும் பயங்கரமாக இருக்கின்றன. வெளியாகியிருக்கும் தரவுகள் அனைத்துமே ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்தது, நாட்டின் பொருளாதார மந்தத்தை துரிதப்படுத்தியிருக்கிறது என்றும் நாடு பின்னோக்கிச் செல்வதற்கு இட்டுச் செல்லும் என்றும் காட்டுகின்றன. ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரத்தின் இருண்ட பக்கத்தையே சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கையின் இரண்டாம் தொகுதி காட்டியுள்ளது. 2016-17க்கான உண்மையான மதிப்புக்கூட்டல் (real Gross Value Added) வளர்ச்சி விகிதம்6.6 சதவீதமாகும். இது 2015-16 ஆம் ஆண்டில் 7.9 சதவீதமாக ...

Read More »

‘இந்தி திணிப்புக்கு எதிராக மீண்டும் ஒரு மொழிப் போருக்கு தயாராவோம்’

மத்திய பாஜக அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக மீண்டும் ஒரு மொழிப்போருக்கு தயாராவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறைகூவல் விடுத்தார். சென்னையில் வெள்ளியன்று (ஆக. 25) திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பிற்கு எதிரான மாநாட்டில் அவர் பேசியதாவது: இந்தி, சமஸ்கிருத திணிப்புக்கு எதிரான இந்த மாநாட்டில் நிறை வேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் இருந்து இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பெரியார் ...

Read More »

Battle against post-truth – SITARAM YECHURY

What is happening today is a vile attack on the very concept of Indian nationhood that subsumes a wide range of diversity with the intention to replace it with the rabidly intolerant and fascistic Hindu rashtra. By SITARAM YECHURY The conscience of modern Indian Republic was shattered when the more-than-four-centuries-old Babri Masjid was demolished by the Rashtriya Swayamsewak Sangh (RSS)-inspired ...

Read More »

புரட்டுகளுக்கு எதிரான போர் – சீத்தாராம் யெச்சூரி

சீத்தாராம் யெச்சூரி தமிழாக்கம் : செ.சிவசுப்ரமணியன் ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட கரசேவகர்களால் டிசம்பர் 6, 1992 அன்று நானூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, நவீன இந்தியாவின் மனசாட்சி உலுக்கப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்னால் பிஜேபியின் அன்றைய தலைவர் எல்.கே.அத்வானி அவர்களால் மேற்கொள்ளப்பட்ட ரதயாத்திரையானது நாடு முழுவதும் மதக் கலவரங்களையும் அதனைத் தொடர்ந்த மரணங்களையும், குழப்பங்களையும், ரத்த வெள்ளத்தையும் உருவாக்கியது. இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பின்பு பிறந்த என் தலைமுறைக்கு, இந்தியா மதரீதியாக இரண்டாகப் பிரிக்கப்பட்டது வரலாறாகும். இந்த நிகழ்ச்சிப் ...

Read More »

கூலிப்படைகளை பிடிக்காத காவல்துறை போராடுபவர்களை தாக்குவதா?

கோவையில் நடைபெற்று வரும் இரண்டு நாள் மாநிலக்குழுக் கூட்டத்தின் பத்திரிகையாளர்களைச் சந்திப்பின்போது:- தமிழக காவல்துறை ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறது, கூலிப்படைகளை பிடிக்காமல் ஜனநாயக ரீதியில் போராடும் மக்கள் மீது தாக்குதலை தொடுக்கிறது. கடந்த மூன்றாண்டு கால பாஜக ஆட்சியில்  அனைத்து துறைகளிலும் படுதோல்வி அடைந்து இருக்கின்றது.  இதில் தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாக பல முடிவுகளை மத்திய அரசு எடுத்து இருக்கின்றது. குறிப்பாக நீட் தேர்வு, உதய் திட்டம் போன்ற திட்டங்களால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாகவும்,  நூறு நாள் வேலை திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த ...

Read More »