உண்மையை அப்பட்டமாக்கும் தென்னக ரயில்வேயின் விளக்கம்சு.வெங்கடேசன் பத்திரிக்கையாளர் சந்திப்பு மத்திய பட்ஜெட்டில் தென்னக இரயில்வேயில் தமிழகத்துக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்து ஞாயிறன்று செய்தி வெளியிட்டிருந்தேன். இதனைத் தொடர்ந்து தென்னக இரயில்வேயின் முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி பத்திரிக்கை குறிப்பொன்றினை (510/2019-20) வெளியிட்டுள்ளார். கடந்த காலங்களில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தமிழகத்துக்கான பத்து புதிய வழித்தடங்களின் விபரங்களைச் சொல்லி அவைகள் அனைத்துக்கும் தலா ஆயிரம் ரூபாய் வீதம் பத்தாயிரம் ரூபாய்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வடக்கு இரயில்வேயில் புதிய வழித்தடங்களுக்கு சுமார் 7000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று ...
Read More »நிதி நெருக்கடியில் அரசு – வறட்சியின் பிடியில் தமிழகம் – தீர்வு ஏதும் சொல்லாத தமிழக பட்ஜெட்
கடந்த சில வருடங்களாக தமிழக அரசு கடைபிடித்து வந்த தவறான கொள்கைகளாலும், மத்திய அரசின் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கையினாலும் தமிழக அரசின் முன்யோசனையற்ற நிதிநிர்வாகத்தாலும் கடுமையான நிதி நெருக்கடியை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருக்கிறது என்பதை தமிழக அரசின் 2017-18க்கான நிதிநிலை அறிக்கை வெளிப்படுத்துகிறது. இதுவரை மூடிவைத்திருந்து சிகிச்சை செய்யப்படாத புண்ணைப் போல தமிழகத்தின் நிதிநிலை காட்சியளிக்கிறது. தமிழக அரசின் கடந்த ஆண்டிற்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசின் ஒட்டுமொத்த கடன் ரூ. 2,52,431 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. இந்த ...
Read More »2016-17 அதிமுக அரசின் நிதிநிலை அறிக்கை – மக்களுக்கு ஏமாற்றமே
மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற அதிமுக அரசின் முதலமாண்டு நிதிநிலை அறிக்கையில் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிட குறிப்பான திட்டங்கள் ஏதுமில்லை. மளிகைப் பொருட்கள், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை 100 சதவிகிதத்திற்கு மேல் உயர்ந்த பின்னணியில் விலைவாசியை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள், திட்டங்கள் ஏதும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. சிறு – குறு விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் என்பதை தவிர்த்து வேளாண் வளர்ச்சிக்கு முக்கிய அம்சங்களான விளை பொருட்களுக்கு நியாய விலை வழங்குவது பற்றியோ, பாசன வசதிகளை விரிவாக்குவது பற்றியோ ...
Read More »