Tag Archives: chennai

சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து விசாரணையை துரிதப்படுத்துக!

தமிழகத்தின் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருப்பதும், பாலியல் தொல்லைக்கு உள்ளானவர் ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரி என்பதும் தமிழகத்தில் பெண்கள் நிலைமையை தோலுரித்துக் காட்டுகிறது. ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறையில் ஒரு பெண் எஸ்பி, அத்துறையின் உயர் அதிகாரி கொடுத்த புகாரின் மீது இறுதிக் கட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலைதான் மேலும், மேலும் பாலியல் குற்றங்கள் செய்யப்படுவதற்கு ஊக்கமளிக்கிறது. உண்மை இப்படி இருக்கும்போது, தமிழகம் பெண்கள் பாதுகாப்பில் முன்னணியில் உள்ளது என்று அரசு கொடுக்கும் ...

Read More »

புறநகர் ரயில் சேவையை தொடங்கிடுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!

கொரோனா நோய்த் தொற்று மற்றும் ஊரடங்கினால் கடந்த 8 மாத காலமாக சாதாரண ஏழை, எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசு பேருந்துகள் 60 சதவிகித பயணிகளுடன் இயங்கலாம் என்று இருந்ததை மாற்றி 100 சதவிகித பயணிகளுடன் இயங்கலாம் எனவும், தேவையையொட்டி கூடுதல் பேருந்துகளை இயக்கிக்கொள்ளலாம் எனவும் தமிழக அரசு நேற்று (07.12.2020) உத்தரவிட்டுள்ளது. மேலும் மெட்ரோ ரயில் சேவையும் முழுமையாக இயங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா நோய்த் ...

Read More »

ஸ்டெர்லைட் ஆலை மீதான தடை தொடரும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு ; மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு !!

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பகுதியில் இருக்கிற மக்கள் நடத்தி வந்துள்ள போராட்டத்திற்கு  கிடைத்த வெற்றியே  சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இன்றைய தீர்ப்பாகும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.  சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு விதித்துள்ள தடை தொடரும் என தெரிவித்துள்ள தீர்ப்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டி வரவேற்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென பல கட்டங்களாக அந்த பகுதி மக்கள் போராடி ...

Read More »

கொரோனா உயிரிழப்புகளை தடுப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட – தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்

பெறுநர்             மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,             தமிழ்நாடு அரசு,             தலைமைச் செயலகம்,             சென்னை – 600 009. மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்:- கொரோனா நோய்த் தொற்று – பரவாமல் கட்டுப்படுத்துவது – கொரோனா மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகள் – அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள கோருவது தொடர்பாக:             தமிழகத்தில் மதுரை, விருதுநகர், தேனி, திருநெல்வேலி தென்மாவட்டங்கள் உள்பட பெரும்பகுதியான மாவட்டங்களில், நகரங்கள், கிராமங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி ...

Read More »

மத்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட தமிழக மாணவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு…

அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் தேசிய அளவில் சாதனை படைத்திருக்கக்கூடிய தமிழகத்தைச் சேர்ந்த இளம் சாதனையாளர்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. இவர்களது வெற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்க்கக் கூடியதாகும். இரண்டு குறிப்பிடத்தக்க வெற்றியாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெருமையுடன் பாராட்டுகிறது. ஒன்று, மதுரையைச் சேர்ந்த பூரண சுந்தரி இவர் கண் பார்வையற்றவர். 25 வயதான இவர் ஐந்து வயதில் பார்வை இழந்தவர். கிராம வங்கியில் எழுத்தராகப் பணியாற்றி கொண்டிருந்த இவர் மிகவும் தீவிர முயற்சி ...

Read More »

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை அவதுறாக சித்தரிப்பதை கண்டித்து 22ம் தேதி சிபிஐ(எம்) கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தை அவதூறாக சித்தரிக்கும் பதிவு ஒன்றை விஷ்வா என்பவர் முகநூலில் பதிவிட்டுள்ளார். மேலும்  அரசியல் சமூக தளங்களில் செயல்படும் பெண் செயல்பாட்டாளர் ஒருவரை அவதூறு செய்யும் பதிவும் அதில் இடம் பெற்றிருக்கிறது. இத்தகைய கீழ்த்தரமான பதிவும் அதனுடைய பின்னூட்டங்களும் வன்மையான கண்டனத்துக்குரியவை. இதனைக் கண்டித்து, வரும் 22ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்த உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து பங்கேற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இத்தகைய ...

Read More »

திமுக எம்எல்ஏ ஜே. அன்பழகன் மறைவு; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜே. அன்பழகன் மறைவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். திமுக-வின் மாவட்டச் செயலாளராக நெடுங்காலம் திறம்பட பணியாற்றிய ஜே.அன்பழகன், மூன்று முறை சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டு, மக்கள் பணியாற்றியவர். சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சனைகளில் உரத்துக் குரல் கொடுக்கக் கூடிய ஆற்றல் மிக்கவர். சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது, மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றியவர். கொரோனா தொற்று காரணமாக சென்னை மக்கள் கடுமையாக ...

Read More »

கொரோனாவால் இறப்போர் இறுதி நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்க!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் ! கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு தங்கள் பகுதியில் அனுமதிக்க முடியாதென சிலர் ஆட்சேபனை செய்தது இரண்டாவது முறையாக தமிழகத்தில் நடந்திருக்கிறது. நேற்றைய தினம் மரணமடைந்த நரம்பியல் மருத்துவர் சைமன் உடல் அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டபோது, அந்த அடக்கத்திற்காக சென்றவர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டிருக்கிறது. கொரோனாவால் மரணமடைந்தவரை தங்கள் பகுதியில் புதைப்பதால் தாங்கள் பாதிக்கப்படுவோம் என்ற தவறான புரிதலால் சிலர் இதில் ஈடுபட்டிருக்கின்றனர். கொரோனா தொற்றால் இறந்தவர்களை புதைப்பதால் அருகிலுள்ள பகுதிகளுக்கு எந்தவித ...

Read More »