Tag Archives: comrade

நாகப்பட்டினம் மாவட்ட வீரஞ்செறிந்த போராளிகளில் ஒருவரான தோழர் ஏ.வி. முருகையன் மறைவு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்ட வீரஞ்செறிந்த போராளிகளில் ஒருவரான தோழர் ஏ.வி. முருகையன் இயற்கை எய்திவிட்டார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இளம் வயதிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து தனது அயராத உழைப்பாலும், உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக நடத்திய வீரியமிக்க போராட்டங்களாலும், கிளைச் செயலாளர் துவங்கி கட்சியின் மாவட்டச் செயலாளர், மாநிலக்குழு உறுப்பினராக திறம்பட செயலாற்றியவர் தோழர் ஏ.வி. முருகையன் அவர்கள். நாகப்பட்டினம் மாவட்டத்தில், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கான பல வரலாற்று சிறப்பு மிக்க ...

Read More »

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ராஜாங்கம் காலமானார்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், தொழிற்சங்க தலைவர் தோழர் எம்.ராஜாங்கம் 21.7.20 அன்று  மதியம்  சுமார் 12.00  மணியளவில் காலமானார். அவருக்கு வயது 77. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா நெட்டூர் கிராமத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.  மதுரையில் கூட்டுறவு தொழிலாளிகளை திரட்டியதில் இருந்து அவரது அரசியல் பணி துவங்கியது. 1972ல்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட மேற்கு பிராந்திய கமிட்டியில் இணைந்து செயல்பட துவங்கினார். 1970களில் பீடித் தொழிலாளர் சங்கம் துவக்கப்பட்டது. அதன் தலைவராக பாலவிநாயகமும், செயலாளராக ராஜாங்கமும் ...

Read More »

புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் செயலாளர் தோழர் சண்முகம் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

புதுக்கோட்டை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான தோழர் சண்முகம் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக  தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய தோழர்  சண்முகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது அதில் தன்னை இணைத்துக் கொண்டு தீவிரமாக கட்சிப் பணியாற்றியவர். தொழிற்சங்கத்தில் மாவட்டத் தலைவர், கட்சியின் நகரச் செயலாளர், மாவட்டக்குழு உறுப்பினர், மாவட்ட செயற்குழு உறுப்பினர், மாவட்டச் செயலாளர் மற்றும் பொறுப்புச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளில் மாவட்ட கட்சிக்கு தலைமை வகித்தவர். கட்சியின் ...

Read More »

மின்சார ஊழியர்களின் தலைவர் எஸ்.முத்துக்குமாரசாமி காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்டக்குழு அஞ்சலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில நிர்வாகியாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்டக்குழு உறுப்பினராகவும் செயல்பட்ட தோழர் எஸ்.முத்துக்குமாரசாமி உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். தோழர் எஸ்.முத்துக்குமாரசாமி தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகில் உள்ள புதுக்குடி கிராமத்தை சார்ந்தவர். விடுதலைப் போராட்ட வீரரும், கம்யூனிஸ் இயக்க மூத்த தலைவருமான டி.ஆர்.சுப்பிரமணியம் அவர்களின் மூலம் கட்சியில் உறுப்பினார். 1973ல் மின் ...

Read More »

மின் ஊழியர் மத்திய அமைப்பின் நீண்ட கால நிர்வாகி தோழர் மீனாட்சி சுந்தரம் அவர்களது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!

எம்எம்எஸ் என்று தோழர்களால்  அன்போடு அழைக்கப்படும் தோழர் மீனாட்சிசுந்தரம்  விக்ரமசிங்கபுரம் பஞ்சாலை போராட்டத்தில்  தோழர் ஏ.நல்லசிவன் அவர்களோடு கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். தோழர் மீனாட்சி சுந்தரம் நீண்ட நெடுங்காலமாக மின்சார ஊழியர் சங்கத்திலும், மின்சார ஊழியர் மத்திய அமைப்பு மற்றும்  இந்திய மின் ஊழியர் கூட்டமைப்பிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும், தொழிற்சங்க இயக்கத்திலும் மிக முக்கியமான பங்கினை ஆற்றியவர். பணி ஓய்வுக்குப் பிறகும் இடதுசாரி இயக்கத்தோடு இரண்டறக் கலந்து பணியாற்றியவர். 99 வயதை அடைந்து அடுத்த 6 மாத காலத்தில் ...

Read More »