Tag Archives: coronavirus

கொரோனாவால் இறப்போர் இறுதி நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்க!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் ! கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு தங்கள் பகுதியில் அனுமதிக்க முடியாதென சிலர் ஆட்சேபனை செய்தது இரண்டாவது முறையாக தமிழகத்தில் நடந்திருக்கிறது. நேற்றைய தினம் மரணமடைந்த நரம்பியல் மருத்துவர் சைமன் உடல் அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டபோது, அந்த அடக்கத்திற்காக சென்றவர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டிருக்கிறது. கொரோனாவால் மரணமடைந்தவரை தங்கள் பகுதியில் புதைப்பதால் தாங்கள் பாதிக்கப்படுவோம் என்ற தவறான புரிதலால் சிலர் இதில் ஈடுபட்டிருக்கின்றனர். கொரோனா தொற்றால் இறந்தவர்களை புதைப்பதால் அருகிலுள்ள பகுதிகளுக்கு எந்தவித ...

Read More »

மலையாள மனோரமா இதழ் பொய்ச்செய்திகளைப் பரப்புவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

மலையாள மனோரமா நாளிதழ், சிபிஎம் மத்திய தலைமை குறித்து பொய்ச்செய்திகளை முதல் பக்கத்தில் பிரசுரித்திருப்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கேரளாவிலிருந்து தெளிப்பான் பிரச்சனை மீது வந்த விளக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியத் தலைமை நிராகரித்திருக்கிறது என்று மலையாள மனோரமா நாளிதழ், தன்னுடைய முதல் பக்கச் செய்தியாக வெளியிட்டிருப்பது பொய்யானதும், எவ்வித அடிப்படையுமில்லாததுமாகும். ஒரு புகழ்பெற்ற நாளிதழ், இவ்வாறு பொய்ச்செய்தியைப் பரப்பிக்கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமாகும். கோவித் 19 தொற்றுக்கு எதிரான ...

Read More »

ஆனந்த் டெல்டும்பே, கவுதம் நவ்லகா கைது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

ஆனந்த் டெல்டும்பே மற்றும் கவுதம் நவ்லகா கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பீமா கொரேகான் பிரச்சனையில் முற்றிலும் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆனந்த் டெல்டும்பே மற்றும் கவுதம் நவ்லகா ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. கோவிட்-19 தொற்று காரணமாக உச்சநீதிமன்றம் இவர்கள் கைது செய்யப்படுவதை ஒத்தி வைக்காதது கவலைப்படத்தக்க விஷயமாகும். ஆனந்த் டெல்டும்பே, சாதி மற்றும் ...

Read More »

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறிக்கை!

இந்தியாவின் “ஹைட்ராக்சி க்ளோரோக்கின்” மருந்து சரக்குகளை அமெரிக்காவிற்கு அனுப்பிய பின், தமிழகத்திற்கு வரவிருந்த சோதனை உபகரணங்கள் அமெரிக்காவிற்கு வழிமாற்றிவிடப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மிரட்டலுக்கு அடிபணிந்து இந்தியா “ஹைட்ராக்சி க்ளோரோக்கின்” மாத்திரைகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ததை, அரசாங்கத்திற்கு ஆதரவாக வாதிடுபவர்கள் அது மனிதாபிமான அடிப்படையில் செய்யப்பட்டது என சப்பைக் கட்டு கட்டினார்கள். அனால் இன்று அமெரிக்கா வெளிப்படுத்தியுள்ள உக்கிரம், அப்படிப்பட்ட மனிதாபிமானத்தை நாம் திரும்பி எதிர்பார்க்க முடியாது என்பதை தெளிவாக்குகின்றது. அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரியப் போர் காலத்து அமெரிக்க சட்டமான “பாதுகாப்பு உற்பத்தி ...

Read More »

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு காலத்தை 30.4.2020 வரை நீடித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதாக தலைமைச் செயலாளர் செய்தியாளர்களிடம் கூறினார். சனிக்கிழமை மாலை பேட்டியளித்த தமிழகஅரசின் தலைமைச் செயலாளர், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை பிரதமர் முடிவெடுத்து வெளியிடுவார் என்று தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது முதலமைச்சரே மேலும் 16 நாட்கள் ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முதலில் ஏன் பிரதமர் அறிவிப்பார் என்று கூறினார்கள் என ...

Read More »

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தொண்டர்களைப் பயன்படுத்துவதில் பாரபட்சம் காட்டுவதா? தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம்.

பெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,             தமிழ்நாடு அரசு,             தலைமைச் செயலகம்,             சென்னை – 600 009. வணக்கம். பொருள்:-     ஊரடங்கு பாதிப்பு நிவாரண நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகளையும் தொண்டர்களாக பாரபட்சமின்றி பயன்படுத்திட கோருவது தொடர்பாக… கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழகத்தில் கடந்த 17 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டு, பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியே வருவது தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு வீடுகளில் இருக்கும் மக்களுக்குத் தேவையான பொருட்களை வீடுகளுக்கே சென்று விநியோகிப்பதற்கும், நியாயவிலை ...

Read More »

கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக…

CPIM மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழக முதல்வருக்கு கடிதம் பெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,             தமிழ்நாடு அரசு,             தலைமைச் செயலகம்,             சென்னை – 600 009. வணக்கம். பொருள்:-     கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக… தமிழகத்தில் கொரோனா பரவல் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இந்தியாவிலேயே அதிகம் பேர் பாதித்த மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. கொரோனா பரவலின் இரண்டாவது கட்டத்தில் இருந்து மூன்றாவது கட்டத்திற்கு போவதற்கான ...

Read More »

தொகுதி மேம்பாட்டு நிதி: நாங்கள் கொண்டு வந்ததும் அவர்கள் கொண்டு போவதும்!

கடந்த மாதம் 25ஆம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் கொரோனா சிகிச்சைப் பிரிவுக்குத் தேவையான துணைக் கருவிகளை வாங்க நிதி ஒதுக்கீடு செய்தேன். மொத்தமாக நிதியை ஒதுக்கி, “தேவையான துணைக்கருவிகளை வாங்கிக்கொள்ளுங்கள்” என்று சொல்லாமல், கொரோனா வார்டுக்கு என்னவெல்லாம் தேவை என்பதை மருத்துவமனை முதல்வரிடமும் மருத்துவர்களிடமும் கருத்துக்கேட்டு, அதன் அடிப்படையில் என்னென்ன துணைக்கருவிகள் வாங்க வேண்டும் என்ற பட்டியலோடு நிதி ஒதுக்கீடு செய்தேன். அன்று மாலையே மாவட்ட ஆட்சியர் நிர்வாக உத்தரவினை வழங்கினார். அன்றிலிருந்து வேலை தொடங்கியது.நாடெங்கும் மருத்துவக்கருவிகளை ...

Read More »

பிரதமரின் அனைத்து கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக தோழர் இளமாறம் கரீம் அவர்கள் எடுத்து வைத்த முக்கிய ஆலோசனைகள்:

மாண்புமிகு பிரதமர் அவர்களே அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்கு இந்திய அரசாங்கத்தை நான் பாராட்ட்டுகிறேன். பிப்ரவரி மாதத்திலிருந்தே இத்தகைய கூட்டத்தை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியும் இடதுசாரி கட்சிகளும் கோரி வந்தன. கோவிட் வைரசுக்கு எதிரான போராட்டம் என்பது இந்திய மக்கள் அனைவரும் ஒரே மனிதனாக அரசியல் வேறுபாடுகளை கடந்து ஓரணியில் நின்று நடத்த வேண்டிய போராட்டம் ஆகும்.இந்த போராட்டத்தில் எங்களது ஆதரவை முழுமையாக நல்குகிறோம். தேசம் தழுவிய ஊரடங்கு என்பது இன்றைய தேவையாக இருக்கலாம். ஆனால் திடீரென அது ...

Read More »

ஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

பா.ஜ.க.-வின் 40வது நிறுவன தினத்தன்று, அக்கட்சியின் மத்திய அலுவலகத்திலிருந்து கட்சி தொண்டர்களுக்கு உரையாற்றுகையில், பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கை மீறுமாறு பா.ஜ.க. ஊழியர்களுக்கு வெளிப்படையான அறைக்கூவலை விடுத்துள்ளார். முதலில், புதிதாக உருவாக்கபட்டுள்ள வைப்பு நிதிக்கு ஒவ்வொரு ஊழியரையும் தாராளமாக நன்கொடை வழங்குமாறு அவர் ஊக்குவித்ததோடு, ஒவ்வொருவரையும் மேலும் 40 பேரிடமிருந்து நண்கொடை சேகரிக்குமாறு ஊக்குவித்தார். மேலும், ஒவ்வொரு தேர்தல் சாவடி நிலையிலும், முக்கிய சேவை மற்றும் சுகாதாரத்திற்காக உழைக்கும் 40 பேரை பா.ஜ.க. ஊழியர்கள் சந்தித்து, அவர்களுக்கு நன்றி கூறுமாறு அறிவுறுத்தினார். மேலும், ஒவ்வொருவருக்கும் ...

Read More »