Tag Archives: CoronavirusLockdown

மதுரை மக்களைக் காக்க முதல்வரே, உடனே உதவுக! சு.வெங்கடேசன்.எம்.பி., வலியுறுத்தல்

மதுரையில் கொரோனாவின் தாக்குதல் தீவிரப்பட்டிருக்கிறது. நாள்தோறும் தொற்றாளர்களின் எண்ணிக்கை மூன்று இலக்கங்களில் வரத் தொடங்கியுள்ளது. இது மக்களுக்கு சற்றே பதட்டத்தையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் மாநில அரசின் செயல் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக அமைய வேண்டும். தொற்று பரவினாலும் அதனைச் சந்திக்கும் நிலையில் மாவட்ட நிர்வாக அமைப்பும் சுகாதார அமைப்புகளும் இருக்கிறது என்ற நம்பிக்கையை உருவாக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் தொற்று பரவும் (ஜூன் 22 தேதி புள்ளிவிபரங்களின் அடிப்படையில்) வேகமானது (Growth rate ) 7.9% இருக்கிறதென்று மத்திய சுகாதாரத்துறையின் குறிப்பு தெரிவிக்கிறது. இதே ...

Read More »

தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மீண்டும் ஒரு கோடி ரூபாய் வழங்க திட்டம்!

மதுரை மாவட்டத்துக்கு சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் சந்திரமோகன் இஆப அவர்களை இன்று காலை சந்தித்து, மதுரையில் கரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய 15 நடவடிக்கைகளைப்பற்றி எழுத்துபூர்வமான மனுவினை அளித்தேன். இந்த நடவடிக்கைகளை நிறைவேற்ற எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உடனடியாக ரூபாய் ஒரு கோடி வழங்க தயாராக உள்ளேன் என்பதையும் தெரிவித்துள்ளேன் . சு. வெங்கடேசன் எம்பி மதுரை. இணைப்பு: பெறுநர்: உயர்திரு டாக்டர் சந்திரமோகன் இஆபசிறப்பு கண்காணிப்பு அதிகாரிமதுரை உயர்திரு டாக்டர் வினய் இஆபமாவட்ட ஆட்சித்தலைவர்மதுரை அன்பு வணக்கம்! ...

Read More »

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலைய போலீசாரால் சட்டவிரோதமாகதுன்புறுத்தப்பட்டு,சித்ரவதைசெய்யப்பட்டு கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ்வழக்கில் கடும் நடவடிக்கை எடுத்திடுக

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல்துறையினரால் ஜெயராஜ் (வயது 60), பென்னிக்ஸ் (வயது 31) ஆகியோர் அடித்துக் கொல்லப்பட்ட கொடுமை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.  ஜெயராஜ் நடத்துகிற  செல்போன் கடையை  சாத்தான்குளம் காவல்நிலையத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் மூடச்சொன்ன பிரச்சினையை ஒட்டி, அவரைக் காவல்நிலையத்திற்கு அழைத்துக் கொண்டு போய் அங்கே வைத்து அடித்து சித்ரவதை செய்துள்ளார்கள். இவ்வாறு காவல்நிலையத்திற்கு கொண்டு போகும் முன்பு உச்சநீதிமன்றம் டி.கே.பாசு வழக்கில் சொல்லியுள்ள படியோ அல்லது நடைமுறை சட்டங்களின்படியோ என்ன வழக்கிற்காக ஜெயராஜை காவல்நிலையத்திற்கு அழைத்து செல்கின்றோம் என்கிற ...

Read More »

அனைத்து பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் சமைத்த மதிய உணவு வழங்கிட தமிழக முதல்வருக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்

பெறுநர்       மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,       தமிழ்நாடு அரசு,       தலைமைச் செயலகம்,       சென்னை – 9. மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம். பொருள்:-        அனைத்துப் பள்ளி குழந்தைகளுக்கும் சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்குவது – இந்த கல்வி ஆண்டில் கல்வி அளிப்பது  குறித்து ஆசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கல்வியாளர்களுடன் கலந்துரையாடி முடிவு செய்வது – பள்ளி பாடப்புத்தகங்கள், நோட்டுகள் உடனடியாக விநியோகிப்பது தொடர்பாக:             “கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் ...

Read More »

மின் கட்டண கொள்ளையை எதிர்த்து முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூன் 26லிருந்து 30 வரை மனு அனுப்பும் இயக்கம்

கொரோனா ஊரடங்கு காலத்தில் மத்திய, மாநில அரசுகள் பொதுமுடக்கத்தை  அமலாக்கி வருகின்றன. இதன் விளைவாக, இக்காலம் முழுவதும் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே  மின் நுகர்வும் அதிகரித்துள்ளது. இன்னொரு பக்கம் வேலை, வருமானம் இல்லாமல் மக்களுடைய வாழ்வாதாரம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. ஏழை, எளிய மக்கள் வீட்டு வாடகை கூட செலுத்த முடியாமல் வீடுகளை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான காலத்தில் மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்து பொதுமக்களுக்கு தாங்க ...

Read More »

பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைக் குறைத்திடுக மக்களுக்கு நிவாரணம் அளித்திடுக இடதுசாரிக் கட்சிகள் அறிக்கை

புதுதில்லி, ஜூன் 23 மோடி அரசாங்கம், பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகளைக் குறைத்து, மக்களுக்கு நிவாரணம் அளித்திட வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் கோரியுள்ளன. இது தொடர்பாக திங்கள் அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, புரட்சி சோசலிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா மற்றும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் தேவ பிரதா பிஸ்வாஸ் ...

Read More »

பழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்

புதுதில்லி, ஜூன் 22 ஏழை மக்கள் மற்றும் விளிம்புநிலையில் உள்ள மக்களுக்காக சேவை செய்து வருபவர்களுக்கு எதிராக, பழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள் எடுப்பது, எந்தவொரு அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான பிருந்தா காரத் கடிதம் அனுப்பியுள்ளார். மகாராஷ்ட்ர மாநிலத்தில் பீமா கொரேகான் வழக்குடன் சம்பந்தப்பட்ட அரசியல் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களைக் கைது செய்து, மனிதாபிமானமற்ற முறையில் நடத்திக்கொண்டிருப்பது தொடர்பாக, ஞாயிறு அன்று ...

Read More »

நிலைகுலைந்து நிற்கும் இந்தியப் பொருளாதாரம் மீட்க வழி தெரியாமல் முரட்டுத்தனமாக மக்களைத் தாக்கும் மோடி அரசு!

கொரோனா தாக்கத்திற்கு முன்பும், பின்புமான நிலைமைகளின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் நிலைகுலைந்து நிற்கிறது என்றும், அதிலிருந்து நாட்டை மீட்க வழி தெரியாத மோடி அரசு மக்கள் மீது முரட்டுத் தனமான தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூட்டம் புதனன்று இணைய வழியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் இதுதொடர்பாக கூறப்பட்டிருப்பதாவது: 2020 ஜூன் 1 அன்று, மத்திய அரசாங்கம், முன்பு அறிவித்த நிதித்தொகுப்புகளுடன், மேலும்20 லட்சம் கோடி ரூபாய்க்கு நிதித் தொகுப்புகளை ...

Read More »

மின்கட்டணத்தில் நடந்திருப்பது கொள்ளைதான் ! கணக்கீட்டை சொல்லி அரசு தப்பிக்க முடியாது !!

தமிழக மின்சார வாரியம் கடந்த 4 மாதங்களுக்கான மின்கட்டணத்திற்கான வசூலை இப்போது நடத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவுக்காக தள்ளி வைக்கப்பட்ட இந்த வசூல் கொரோனா தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் கட்டாயப்படுத்தி வசூலித்துக் கொண்டிருப்பது தள்ளி வைத்ததன் நோக்கத்தையே சிதைக்கிறது.  இந்த மாதங்களில் அரசு ஊரடங்கை அமல்படுத்தியதால் மக்கள் வீட்டிலேயே இருப்பதற்கு நிர்பந்திக்கப்பட்டார்கள். இந்த நிர்பந்தத்தின் காரணமாகவும், இது கத்தரி வெயில் காலமாக இருந்ததாலும், பெரும்பாலான வீடுகளில் 24 மணிநேரமும் மக்கள் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்தார்கள். இதன் காரணமாக முதலமைச்சரே கூறியபடி நெருக்கமான வீடுகள், இடித்து ...

Read More »

அவசரச் சட்டங்களை ரத்து செய் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

மத்திய அமைச்சரவை நேற்று (புதன்கிழமை) ஒப்புதல் அளித்துள்ள மூன்று அவசரச் சட்டங்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்ப்பதுடன், அவற்றை ரத்து செய்திட வேண்டும். அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் முன்மொழிந்துள்ள திருத்தங்கள் நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு மிகவும் அவசியமாக இருந்துவரும் கேந்திரமான வேளாண் பொருள்களின் மீதான விலை நிர்ணயம் மற்றும் போக்குவரத்து குறித்து இருந்து வரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கிவிடுகிறது. இந்த முன்மொழிவுகள்  அனைத்தும் ஊக வர்த்தகர்கள் மற்றும் இடைத்தரகர்களால் ஒரு செயற்கையான பற்றாக்குறையை உருவாக்குவதற்கு வழிவகுத்து, நாட்டின் உணவுப் பாதுகாப்பைக் கடுமையாகப் பாதித்திடும். ...

Read More »