Tag Archives: CoronavirusLockdown

பிரதமரின் அனைத்து கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக தோழர் இளமாறம் கரீம் அவர்கள் எடுத்து வைத்த முக்கிய ஆலோசனைகள்:

மாண்புமிகு பிரதமர் அவர்களே அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்கு இந்திய அரசாங்கத்தை நான் பாராட்ட்டுகிறேன். பிப்ரவரி மாதத்திலிருந்தே இத்தகைய கூட்டத்தை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியும் இடதுசாரி கட்சிகளும் கோரி வந்தன. கோவிட் வைரசுக்கு எதிரான போராட்டம் என்பது இந்திய மக்கள் அனைவரும் ஒரே மனிதனாக அரசியல் வேறுபாடுகளை கடந்து ஓரணியில் நின்று நடத்த வேண்டிய போராட்டம் ஆகும்.இந்த போராட்டத்தில் எங்களது ஆதரவை முழுமையாக நல்குகிறோம். தேசம் தழுவிய ஊரடங்கு என்பது இன்றைய தேவையாக இருக்கலாம். ஆனால் திடீரென அது ...

Read More »

ஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

பா.ஜ.க.-வின் 40வது நிறுவன தினத்தன்று, அக்கட்சியின் மத்திய அலுவலகத்திலிருந்து கட்சி தொண்டர்களுக்கு உரையாற்றுகையில், பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கை மீறுமாறு பா.ஜ.க. ஊழியர்களுக்கு வெளிப்படையான அறைக்கூவலை விடுத்துள்ளார். முதலில், புதிதாக உருவாக்கபட்டுள்ள வைப்பு நிதிக்கு ஒவ்வொரு ஊழியரையும் தாராளமாக நன்கொடை வழங்குமாறு அவர் ஊக்குவித்ததோடு, ஒவ்வொருவரையும் மேலும் 40 பேரிடமிருந்து நண்கொடை சேகரிக்குமாறு ஊக்குவித்தார். மேலும், ஒவ்வொரு தேர்தல் சாவடி நிலையிலும், முக்கிய சேவை மற்றும் சுகாதாரத்திற்காக உழைக்கும் 40 பேரை பா.ஜ.க. ஊழியர்கள் சந்தித்து, அவர்களுக்கு நன்றி கூறுமாறு அறிவுறுத்தினார். மேலும், ஒவ்வொருவருக்கும் ...

Read More »

கொரானா வைரஸ் தொற்று குறித்து நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு, சீத்தாராம் யெச்சூரி கடிதம்

கொரானா வைரஸ் தொற்று குறித்து உரியநடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், சீத்தாராம் யெச்சூரி, குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக, அவர் குடியரசுத் தலைவருக்கு திங்கள் அன்று, எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர் என்ற முறையிலும், உங்களுடைய அனுமதி மற்றும் அதிகாரத்தின் கீழ்தான் மத்திய அரசாங்கம் செயல்படுகிறது என்பதாலும் இக்கடிதத்தை உங்களுக்கு எழுதி இருக்கிறேன். நாடும், நாட்டு மக்களும் இதுவரையில்வ இரு அடையாளபூர்வமான நிகழ்வுகளின் ஊடே சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக, நாடு, குரோனா ...

Read More »

கொரோனா தொற்று தடுப்புக்காக-மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்!

தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் பெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,             தமிழ்நாடு அரசு,             தலைமைச் செயலகம்,             சென்னை – 600 009. வணக்கம். பொருள்:-     கொரோனா தொற்று தடுப்புக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கு – மக்கள் சந்திக்கும் பல பிரச்சினைகள் – பொருட்கள் பற்றாக்குறை – விலைவாசி உயர்வு – விவசாயிகள் பொருட்களை அறுவடை செய்ய முடியாமல் அழிவு – மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது போன்ற பிரச்சனகள் தொடர்பாக தாங்களிடம் முறையிட எங்கள் ...

Read More »

வெறுப்பு அரசியல் வேண்டாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்!

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து உயிர்காக்கும் முக்கியப் போராட்டக் களத்தில் உலகமே இறங்கியுள்ளது. ஒருபுறம் அதற்குத் தேவையான சமூக விலகல், சுய தனிமைப்படுதல் உளிட்ட கடமைகள் மக்கள் முன்பும், சமூக விலகலை உறுதிப்படுத்த மக்களின் அடிப்படைப் பொருளாதார தேவைகள், மருத்துவ சேவை, மருந்து உற்பத்தியில் தொய்வின்மை, சுகாதார வசதிகள் போன்றவற்றை உறுதி செய்யும் கடமை, மத்திய மாநில அரசுகள் முன்பும் உள்ளன. இந்தியா முழுவதும் சாதி, மதம், அரசியல் வேறுபாடு கடந்து ஒற்றை மனிதராய் இந்த சவால்களைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதற்கிடையே, ...

Read More »

குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் கொரோனா நிவாரண நிதி மற்றும் உணவுப் பொருட்களை ஓரிரு நாட்களுள் வழங்க வேண்டும்..!

தமிழக முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம் பெறுநர்             மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,             தமிழ்நாடு அரசு,             தலைமைச் செயலகம்,             சென்னை – 600 009. வணக்கம். பொருள்:-    குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் கொரோனா நிவாரண நிதி மற்றும் உணவுப் பொருட்களை ஓரிரு நாட்களுள் வழங்கி முடிப்பது தொடர்பாக… கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூபாய் ஆயிரமும், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்குவது என அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 2ம் தேதி ...

Read More »

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிதி வழங்க முடிவு!

தமிழக முதலமைச்சரின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தையும், கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஓய்வூதியத் தொகையையும் அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் மற்றும் தமிழக மக்களையும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கக் கேட்டுக் கொள்கிறோம். – கே. பாலகிருஷ்ணன் மாநிலச் செயலாளர்

Read More »

கொரோனா வைரஸ்; தடுப்பு நடவடிக்கை மற்றும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காணுங்கள்” : முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்!

பெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்,   சென்னை – 600 009 வணக்கம். பொருள்:-    கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் – தமிழகம் முழுவதும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பலவிதமான நெருக்கடிகளுக்கு தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்வது – அவசரமாக அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக… 1. தற்போது நாம் அசாதாரணமான சூழ்நிலையைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நடவடிக்கைகளுக்கு கட்சி ...

Read More »

கொரோனா வைரஸ் மருத்துவ சிகிச்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலா 1 கோடி நிதி ஒதுக்கீடு!

கொரோனா வைரஸ் நோய் மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்கள் அதாவது வென்ட்டிலேட்டர் மற்றும் பாதுகாப்பு கருவிகள் வாங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் (மாநிலங்களவை), பி.ஆர்.நடராஜன் (கோவை), சு.வெங்கடேசன் (மதுரை) ஆகியோர் தலா 1 கோடி ரூபாய் சம்மந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஏற்கனவே 1 கோடியே 8 லட்சம் வழங்கிவிட்டார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். – கே. பாலகிருஷ்ணன் மாநிலச் செயலாளர்

Read More »

கொரோனா வைரஸ் பாதிப்பு – கூடுதல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்!

சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம் பெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,  தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. வணக்கம் பொருள்:- கொரோனா வைரஸ் பாதிப்பு – கூடுதல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வற்புறுத்துவது தொடர்பாக… கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எங்களது முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறோம். வைரஸ் பரவாமல் தடுக்க மக்கள் தங்களைத் தானே தனிமைப்படுத்திக் கொள்வது என்பதைத் தவிர வேறு மாற்று வழியே இல்லை என்பதை பொது ...

Read More »