Tag Archives: corruption

‘நமோ டிவி’ செலவினைமறைத்த பாஜக மீது தேர்தல் ஆணையம்நடவடிக்கை எடுக்குமா?தலைமைத் தேர்தல்ஆணையருக்கு சீத்தாராம் யெச்சூரி கேள்வி

புதுதில்லி, ஆக. 18- ‘நமோ டிவி’ செலவினை மறைத்த பாஜக மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என்று, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர், சுனில் அரோராவிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: முதலில், பீகார் சட்டமன்றத் தேர்தலில், 64 வயதுக்கு மேம்பட்டவர்களுக்கு அஞ்சல் வாக்கு மூலம் வாக்குரிமை அளிக்கும் முடிவை கிடப்பில் போட்டிட, முடிவெடுத்திருப்பதற்கு எங்கள் ஏற்பளிப்பினைத் தெரிவித்துக் கொள்கிறோம். எனினும், வாக்காளர்களை நேரடியாக சரிபார்க்கும் கொள்கையை உத்தரவாதப்படுத்துவதே, ...

Read More »

மின்கட்டணக் கணக்கீட்டில் குழறுபடிகள் ஏதுமில்லையா? க.கனகராஜ்

தமிழகம் மின்மிகை மாநிலமா? அதிமுக அரசில் மின்வெட்டே இல்லை என்பது உண்மையா? அமைச்சர் தங்கமணியின் கருத்து உண்மையா? நேற்று 20.7.20 தமிழகத்தின் மாண்புமிகு மின்துறை அமைச்சர் தங்கமணி அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கீழ்க்கண்ட மூன்று விசயங்களை பிரதானமாக முன்வைக்கிறார். 1. மார்ச் – ஜீன் மாதங்களில் மின்கட்டணக் கணக்கீட்டில் குழறுபடிகள் ஏதுமில்லை. அதனால் யாரும் பாதிக்கப்படவில்லை. 2. கடந்த பத்தாண்டுகளில் மாநில அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக மின்வெட்டே இல்லை. 3. தமிழகம் மின்மிகை மாநிலமாகத் திகழ்கிறது. இந்த மூன்று ...

Read More »

என்எல்சி நிறுவனத்தின் இயக்குநர் மீது ஊழல் புகார்: சிபிஐ மற்றும் சிவிசி உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிபிஐ(எம்) வலியுறுத்தல்! கடலூர் மாவட்டம் நெய்வேலியிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் செயல்பட்டு வரும் மத்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. யில் நிரந்தர தொழிலாளர்கள்,பொறியாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என சுமார் 30,000 பேர் பணியாற்றி வருகிறார்கள். அனல் மின்நிலையம், சூரிய ஒளி, காற்றாலை ஆகியவற்றின் மூலம் சுமார் 4,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து, ஆண்டுக்கு ரூபாய் 1,000 கோடி லாபம் ஈட்டும் நவரத்னா நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. சமீப நாட்களில் இந்நிறுவனத்தை பற்றி வரும் செய்திகள் கவலை அளிப்பதாக உள்ளன. நிறுவனத்திற்கான ...

Read More »

மின்கட்டணத்தில் நடந்திருப்பது கொள்ளைதான் ! கணக்கீட்டை சொல்லி அரசு தப்பிக்க முடியாது !!

தமிழக மின்சார வாரியம் கடந்த 4 மாதங்களுக்கான மின்கட்டணத்திற்கான வசூலை இப்போது நடத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவுக்காக தள்ளி வைக்கப்பட்ட இந்த வசூல் கொரோனா தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் கட்டாயப்படுத்தி வசூலித்துக் கொண்டிருப்பது தள்ளி வைத்ததன் நோக்கத்தையே சிதைக்கிறது.  இந்த மாதங்களில் அரசு ஊரடங்கை அமல்படுத்தியதால் மக்கள் வீட்டிலேயே இருப்பதற்கு நிர்பந்திக்கப்பட்டார்கள். இந்த நிர்பந்தத்தின் காரணமாகவும், இது கத்தரி வெயில் காலமாக இருந்ததாலும், பெரும்பாலான வீடுகளில் 24 மணிநேரமும் மக்கள் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்தார்கள். இதன் காரணமாக முதலமைச்சரே கூறியபடி நெருக்கமான வீடுகள், இடித்து ...

Read More »

கொரோனா பாதிப்பிற்கு உடனடி நிவாரணம் வழங்கக் கோரி இடதுசாரிக் கட்சிகள் ஜூன் 9 போராட்டத்திற்கு அறைகூவல்!

கடந்தமே 30ம் தேதி புதுதில்லியில் கூடிய இடதுசாரிக் கட்சிகளின் கூட்டம்  கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இந்தியா முழுவதும் இயக்கத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது. இந்த அறைகூவலை நிறைவேற்றுவதற்காக இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மாநிலச் செயலாளர் தோழர் என்.கே.நடராஜன் ஆகியோர் விவாதித்து கீழ்க்கண்ட கோரிக்கைகளின் அடிப்படையில் ஜூன் 9 ஆம் தேதி ...

Read More »

கறுப்புப் பணத்தை வெளிக் கொணர மோடி அரசால் முடியாது-சிபிஐ(எம்)

புதுதில்லி, நவ. 9-500 ரூபாய், 1000 ரூபாய்நோட்டுகளை செல்லாது என்று மோடி அறிவித்தது கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வதற்குத் தேவையான பலன்களை அளித்திடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:பிரதமர் மோடி, 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்திருப்பது கறுப்புப் பணத்தை வெளிக்கொணரத் தேவையான பலன்களை அளித்திடாது. இது மிகவும் அற்ப அளவிலேயே விளைவுகளை ஏற்படுத்திடும். ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்திருப்பதானது கறுப்புப் பணம், போலி கரன்சிகள், ...

Read More »