Tag Archives: covai

எழுத்தாளர் கோவை ஞானி மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

எழுத்தாளர் கோவை ஞானி மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இலக்கிய திறனாய்வாளரான கோவை ஞானி ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தமிழ் இலக்கிய பண்பாட்டு சூழலில் இடையறாது இயங்கி வந்தவர் அவர். மார்க்சியத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இரு கண்களும் பார்வையை இழந்தபோதும், வாசிப்பை அவர் கைவிடாமல் இலக்கியத் தளத்தில் இயங்கி வந்துள்ளார். கருத்து வேறுபாடு கொண்டவர்களோடும், நட்பு பாராட்டி வந்தவர். அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ...

Read More »

பெரியார் சிலை அவமதிப்பு – சிபிஐ(எம்) கண்டனம்

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பெரியார் சிலை மீது நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் காவி சாயம்  ஊற்றி சென்றுள்ளனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.   கொள்கை அடிப்படையில் எதிர்க்க துணிவில்லாத கோழைகள்தான் இக்காரியத்தை செய்வார்கள். மதவெறி சக்திகளும். சங்பரிவார் போன்ற அமைப்புகளும் இத்தகைய பிற்போக்குத்தமான காரியத்தை தொடர்ந்து செய்து வருகின்றன. பெரியார் சிலைகள் உடைக்கப்பட வேண்டும் என்று பாஜக வின் எச்.ராஜா  பேசியது, பெரியார் சிந்தனைகள் பாடப் புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டிருப்பதன் நீட்சியும் தொடர்ச்சியுமே ...

Read More »

ஊரடங்கை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் மின்சாரத் துறைக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி கண்டனம்!

கொரோனா பரவலைத் தொடர்ந்து மின் நுகர்வோருக்கு கட்டணம் செலுத்துவதற்கான இறுதி தேதி மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. மின்வாரியமும் மார்ச், ஏப்ரல் மாதத்துக்கான கட்டணத்தை அதற்கு முந்தைய மாத கட்டணத்தை கட்டலாம் என அறிவித்து இருந்தது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் சுமார் 310 யூனிட்களுக்குள் பயன்படுத்தி வந்த மின்நுகர்வோர், ரூ.560 கட்டணமாக கட்டிய நிலையில், தற்போது பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு மொத்தமாக 1240 யூனிட் என தீர்மானித்து ரூ. 4584 கட்டணத்தை கட்டுமாறு, கோவையைச் சேர்ந்த மின்நுகர்வோர் பத்மநாதன் என்ற ...

Read More »

கோவை சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு இல்லம் திறப்பு!

கோவை சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு இல்லம் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. கோவை மாவட்டக்குழுவின் 21 ஆவது மாவட்டக்குழு மாநாட்டு ஜோதிப் பயணமும் சின்னியம்பாளையம் தியாகிகள் இல்லத்திலிருந்து துவங்கியது.

Read More »