Tag Archives: COVID-19

இ-பாஸ் நடைமுறை, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை கைவிடுக – பொதுப்போக்குவரத்தை படிப்படியாக தொடங்கிடுக – தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்

பெறுநர்             மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,             தமிழ்நாடு அரசு,             தலைமைச் செயலகம்,             சென்னை – 600 009. மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம். பொருள்:-  இ-பாஸ் நடைமுறை – ஞாயிற்றுக் கிழமை முழுஊரடங்கு கைவிட வலியுறுத்துவது – நிபந்தனைகளுடன் பொதுப்போக்குவரத்தை படிப்படியாக அமலாக்க வேண்டியது குறித்து:  1. இ-பாஸ் வழங்கும் முறையை ரத்து செய்ய வேண்டும்             தமிழகத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த காலகட்டத்தில் மாவட்டம் ...

Read More »

நீதிமன்றங்கள் செயல்படாத காரணத்தினால் வழக்கறிஞர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கிடுக! தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்

கொரோனா தொற்றின் காரணமாக மார்ச் மாதம் 24ந் தேதி முதல் தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில் நீதிமன்றங்கள் முழுமையாக செயல்படவில்லை. திறந்த நீதிமன்ற விசாரணைக்கும் அனுமதி தரவில்லை. இதனால் பொதுமக்களும், வழக்கறிஞர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வழக்கறிஞர்கள் நீதிமன்றம் சென்று தொழில் செய்து வருமானம் இழந்து தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் வழக்கறிஞர்கள் ...

Read More »

அயோத்தி: அறக்கட்டளை அதன் வேலையைச்செய்யட்டும்மத்திய, மாநில அரசுகளுக்கு அதில் வேலையில்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

புதுதில்லி, ஆக.3- அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை அதற்கென நியமிக்கப்பட்டிருக்கும் அறக்கட்டளை செய்யட்டும் என்றும், மாறாக ‘பூமி பூஜை’ செய்யும் பணியை மாநில நிர்வாகமோ, மத்திய அரசாங்கமோ இதில் சம்பந்தப்படக் கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இது தொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: அயோத்தி தாவா, இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒப்பந்தம் மூலமாகவோ, அல்லது, நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலமாகவோ தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆரம்பம் ...

Read More »

தேர்தல் நடைமுறையில் ஒருதலைப்பட்சமாக மாற்றங்கள்

சீத்தாராம் யெச்சூரி கடும் எதிர்ப்பு நாட்டில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் நடத்துவதில், தேர்தல் நடைமுறைகளை மாற்றி, தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுத்திருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சேபணை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியத் தேர்தல் ஆணையத்தின், தலைமைத் தேர்தல் ஆணையர், சுனில் அரோராவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஊடகங்களில் வந்துள்ள செய்திகளின்படி நாட்டில் இதுவரை நிறுவப்பட்டிருந்த நடைமுறையான, அரசியல் கட்சிகளைக் கலந்தாலோசித்தே, தேர்தல் நடைமுறைகளில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டுவர வேண்டும் என்கிற ...

Read More »

தனுஷ்கோடியின் மரணத்துக்கு அரசின் செயலின்மையே காரணம்.

சு.வெங்கடேசன் எம் பி மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்றினைக் கையாள்வதில் செயலின்மையும் குளறுபடியும் தொடர்ந்து நீடித்து வருகின்றன. பலமுறை எடுத்துக்கூறியும் அதனைப் புரிந்து கொள்ளாத நிலை தொடர்கிறது. கடந்த ஒன்றாம் தேதி முதல், சோதனையை அதிகப்படுத்தப் பலமுறை கூறியும் கேட்காததன் விளைவை இன்று மதுரை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இப்பொழுது பிரச்சனை வளர்ந்து, அடுத்த கட்டத்தினை எட்டி நிற்கிறது. மதுரையில் தொற்றுப்பரவும் வேகமானது 7.9% இருப்பதைச் சுட்டிக்காட்டி அதற்கேற்ற வேகத்தில் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று எழுத்துப்பூர்வமான ஆலோசனையை வழங்கியுள்ளேன். கடந்த 24ஆம் தேதி சிறப்புக் ...

Read More »

ஊரடங்கை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் மின்சாரத் துறைக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி கண்டனம்!

கொரோனா பரவலைத் தொடர்ந்து மின் நுகர்வோருக்கு கட்டணம் செலுத்துவதற்கான இறுதி தேதி மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. மின்வாரியமும் மார்ச், ஏப்ரல் மாதத்துக்கான கட்டணத்தை அதற்கு முந்தைய மாத கட்டணத்தை கட்டலாம் என அறிவித்து இருந்தது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் சுமார் 310 யூனிட்களுக்குள் பயன்படுத்தி வந்த மின்நுகர்வோர், ரூ.560 கட்டணமாக கட்டிய நிலையில், தற்போது பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு மொத்தமாக 1240 யூனிட் என தீர்மானித்து ரூ. 4584 கட்டணத்தை கட்டுமாறு, கோவையைச் சேர்ந்த மின்நுகர்வோர் பத்மநாதன் என்ற ...

Read More »

நிதி வருவாய்க்கு வழி சொல்லும் அதிகாரிகள் மீது நிதி அமைச்சருக்கு கோபம் வருவது ஏன்?

இந்திய வருவாய்த் துறையில் (IRS) பணியாற்றும் சில இளம் அதிகாரிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதில் மத்திய அரசுக்கு உள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காண, சில புதிய ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளார்கள். காரண காரியங்களோடு இவற்றை ஏற்பதும் மறுப்பதும் மத்திய அரசின் பொறுப்பு. ஆனால், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், கடும் கோபத்தோடு, இவர்களது செயல் பொறுப்பற்ற செயல், இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது, கொரோனா தாக்கத்தில் நாடு சிக்கியுள்ள நிலையில் இது உள்நாட்டு குழப்பம் விளைவிக்கும் செயல் என விமர்சித்ததோடு ...

Read More »

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் பரிந்துரைத்துள்ளபடி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகள் எடுத்திடுக…

கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலுமாகத் தடுத்து, ஒழித்திட, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் பரிந்துரைத்துள்ளபடி உடனடியாக நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் கீழ் இருக்கின்ற உயர்மட்ட அளவிலான அறிவியலாளர்கள் மற்றும் அறிவியல் சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்கள் மத்தியில் இப்போது நாட்டில் எழுந்துள்ள மோசமான நிலைமை குறித்து கவலைகள் அதிகரித்திருப்பது ஊடகங்களில் மூலமாக தெரிய ...

Read More »

கொரோனாவை விட கொடியது மத்திய அரசின் மனப்பான்மை…

தொழில் மந்தநிலை, கொரோனாவால் ஏற்பட்டுள்ள நோய் பாதிப்புகள் ஆகியவற்றை எதிர்கொள்ள மாநில அரசுகளே நேரடியாக செலவழிக்க வேண்டிய நிலையுள்ளது. இத்தகைய நிலையில் கூட மத்திய அரசு கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள மாநிலங்களுக்கு போதுமான உதவிகள் செய்ய முன்வரவில்லை. இதுவரையிலும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரணங்கள் எந்த வகையிலும் தற்போதைய இடர்பாடுகளை எதிர்கொள்ள உதவும் வகையில் அமையவில்லை. இது ஒருபுறமிருக்க, மத்திய பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலங்களின் உரிமைகளின் மீதும், நிதி ஆதாரங்களின் மீதும் மிகக் கடுமையான ஆக்கிரமிப்பை செய்து வந்திருக்கிறது. ஜிஎஸ்டி ...

Read More »

ஊரடங்கை பயன்படுத்தி சம்பள வெட்டு, பணி நீக்கம் செய்யும் ஊடக நிறுவனங்கள்!

நாடு தழுவிய ஊரடங்கை பயன்படுத்திக் கொண்டு ஊடக முதலாளிகள் தன்னிச்சையாக ஆட்குறைப்பு செய்கின்றன. சம்பள குறைப்பை திணிக்கின்றன. “கொரோனா வைரஸ் பரவல் ஒரு தேசிய நெருக்கடி. இந்த நெருக்கடியை ஊடக நிறுவனங்களும் அதன் பங்குதாரர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் சுமைகளை தொழிலாளர்கள் மீது சுமத்தக் கூடாது” என்று நேஷனல் அலையன்ஸ் ஆப் ஜர்னலிஸ்ட் (என்ஏஜே) மற்றும் டெல்லி யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் (டியுஜே) என்ற இரண்டு ஊடகவியலருக்கான சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன. ஊரடங்கை நிறுவன மூடலாக மாற்றும் ஊடக நிறுவனங்கள்ஊரடங்கால் விற்பனை குறைந்திருக்கிறது. விளம்பரங்கள் ...

Read More »