Tag Archives: cpim tamilnadu

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் தாயார் மறைவு சிபிஐ (எம்) இரங்கல்

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் தாயார் கரீமாபேகம் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இளம் வயதிலேயே தந்தையை இழந்த ஏ.ஆர். ரகுமானுக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்து இசைத்துறையில் அவர் உலக அளவில் சாதனை படைப்பதற்கு உறுதுணையாக இருந்தவர் அவரது தாய் கரீமா பேகம் ஆவார். ஏ.ஆர். ரகுமான் இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்ற போது அவ்விருதுகளை தன்னுடைய தாய்க்கு சமர்ப்பிப்பதாக கூறியது தனது தாயின் மீது அவருக்கு இருந்த அளப்பரிய அன்பையும், மரியாதையையும் எடுத்துக்காட்டியது. தாயாரை ...

Read More »

அறிஞர் தொ.பரமசிவன் மறைவு சிபிஐ (எம்) இரங்கல்

தமிழ் அறிஞரும், சிறந்த ஆய்வாளருமான பேராசிரியர் தொ.பரமசிவன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவருடைய முனைவர் பட்ட ஆய்வான “அழகர் கோவில்” குறித்த ஆய்வு தமிழ் இலக்கிய ஆய்வுலகில் ஒரு திருப்புமுனையாகும். மானுடவியல், பண்பாட்டு நோக்கில் தமிழக வரலாற்றை அவர் ஆய்வு செய்து சிறந்த நூல்களை வழங்கியுள்ளார். அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள் உள்ளிட்ட அவரது நூல்கள் தமிழில் பெரும் கவனத்தைப் பெற்றவை. மார்க்சிய, பெரியாரிய நோக்கிலேயே அவர் தன்னுடைய ஆய்வை அமைத்துக் கொண்டார். கல்லூரியில் பணியாற்றிய ...

Read More »

சட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் சிபிஐ (எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி (2021) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர் பி. சண்முகம் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை மாநிலக்குழு அமைத்துள்ளது. குழு உறுப்பினர்கள் பின்வருமாறு 1. பி. சண்முகம், 2. உ. வாசுகி, 3. என். குணசேகரன், 4. க. கனகராஜ், 5. மதுக்கூர் ராமலிங்கம், 6. சு. வெங்கடேசன் எம்.பி, 7. ஜி. சுகுமாறன், 8. எஸ். ...

Read More »

கேரளா உள்ளாட்சி தேர்தல்:இடது ஜனநாயக முன்னணி மகத்தான வெற்றி தமிழ்நாடு மாநிலக்குழு வாழ்த்து

கேரள மாநிலத்தில் கடந்த 4 1/2 ஆண்டு காலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தோழர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கேரள மாநிலத்தை இந்தியாவின் முன்னோடி மாநிலமாக திகழும் வகையில் வளர்ச்சிப் பாதையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி எடுத்துச் செல்வதால் நாடு தழுவிய பாராட்டுதலைப் பெற்று வருகிறது. கோவிட் 19 பெரும் தொற்று காலத்தில் இடது ஜனநாயக முன்னணியின் செயல்பாடு சர்வதே அளவிலும் பாராட்டுதலை பெற்றுள்ளது. இந்த சூழ்நிலையில் தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று ...

Read More »

ஜெகத்ரட்சகன் துணைவியார் மரணம் கே. பாலகிருஷ்ணன் இரங்கல் !

திமுக முன்னாள் மத்திய அமைச்சரும் – அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி., அவர்களின் துணைவியார் திருமதி அனுசுயா (வயது 65) அவர்கள் இன்று (15.12.2020) உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனைக்கு உள்ளானோம். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அம்மையார் திருமதி அனுசுயா அவர்களின் மறைவால் துயருற்றிருக்கும் திரு. ஜெகத்ரட்சகன் எம்.பி., அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். கே. பாலகிருஷ்ணன் மாநிலச் செயலாளர்

Read More »

விழுப்புரம் அருகே 5 பேர் குடும்பத்துடன் தற்கொலை! கந்துவட்டியை ஒழிப்பதற்கு அதிமுக அரசுக்கு அக்கறை இல்லை!! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!!!

விழுப்புரம் மாவட்டம், வளவனூரைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி மோகன் மற்றும் அவரது மனைவியை கந்துவட்டிக்காரர்கள் மிரட்டியுள்ளதால், மோகன், அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. தமிழகம் முழுவதும் கந்து வட்டி கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏழை, எளிய மக்கள் தங்கள் தொழில், குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். வட்டிக்கு பணம் கொடுக்கும் கந்துவட்டி கும்பல் வட்டிக்கு மேல் வட்டி என பல வகையான வட்டிமுறைகளை ...

Read More »

விவசாயிகள் மீது தமிழக போலீசார் கண்மூடித்தனமான தாக்குதல் சிபிஐ(எம்) கண்டனம்!

புதுதில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள விவசாயிகளுக்கு விரோதமான புதிய வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்த மசோதாவையும், தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டத்தையும் திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் இன்று (14.12.2020) மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது. இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பெண்கள் மீது காவல்துறை மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்தி கைது செய்துள்ளது. திண்டுக்கல்லில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. பாலபாரதி ...

Read More »

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களி கட்டணத்தை குறைத்திடுக! தமிழக முதல்வருக்கு சிபிஐ (எம்) கடிதம்

பெறுநர்                 மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,                 தமிழ்நாடு அரசு,                 தலைமைச் செயலகம்,                 சென்னை – 600 009. பொருள்:- சிதம்பரம், ராஜா அண்ணாமலை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு – இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை பெற்றுக் கொண்டு கல்வி தொடர வாய்ப்பளிக்க கோருவது தொடர்பாக: சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு 2013-2014ம் ஆண்டில் அதிக கட்டணம் (ரூ. 5.54 லட்சம்) தீர்மானிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் தொடுத்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசு நியமித்த கல்விக் கட்டணம் தீர்மானிக்கும் குழு கட்டணங்களை ...

Read More »

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் டிசம்பர் 14 அன்று – சிபிஐ (எம்) சார்பில் அம்பானி, அதானி பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம்

மூன்று வேளாண் சட்டங்களையும், இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்கான மின்சார சட்டத் திருத்த மசோதா (2020)-ஐ முற்றாக ரத்து செய்யவேண்டுமென வலியுறுத்தி நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து டிசம்பர் 8 அன்று நாடு தழுவிய மகத்தான பந்த் போராட்டம் நடைபெற்றது. டிசம்பர் 9 அன்று, 6வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்த போது மத்திய அரசு ஆணவப் போக்கோடு நடந்து கொண்ட காரணத்தினால் விவசாய சங்க கூட்டமைப்பு போராட்டத்தை தீவிரப்படுத்த அறைகூவல் விடுத்துள்ளது. டிசம்பர் 14 அன்று, தில்லி மாநகரத்தின் அருகமையில் இருக்கும் மாநில ...

Read More »

சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றிபெற்ற 100 சதவிகித பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பிருந்தா கராத் தொலைபேசியில் வாழ்த்து!

நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ள சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் தமிழகத்திலிருந்து மதுரையைச் சார்ந்த பூரண சுந்தரி மற்றும் சென்னையைச் சேர்ந்த பாலநாகேந்திரன் ஆகிய இரு பார்வை மாற்றுத்திறனாளிகள் வெற்றிபெற்றுள்ளனர். சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிருந்தா கராத் அவர்கள், வெற்றிபெற்றுள்ள இந்த இரு  பார்வை மாற்றுத்திறனாளிகளையும் தொலைபேசியில் தனித்தனியே தொடர்புகொண்டு வெற்றி பெற்றுள்ளதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார், பார்வை மாற்றுத்திறனாளிகளின் விடாமுயற்சிகளுக்கும், தன்னம்பிக்கைக்கும் தனது இதயபூர்வ பாராட்டுதல்களை தெரிவிப்பதாக தோழர் பிருந்தா கராத் கூறியுள்ளதோடு, அவர்கள் தங்கள் பணிகளில் சிறந்து விளங்குவதற்கும் ...

Read More »