Tag Archives: cpim

கோவில்பட்டி தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் கே.சீனிவாசன் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள் !

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 – திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கோவில்பட்டி தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் கே.சீனிவாசன் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள்… கோவில்பட்டி, கயத்தார் ஒன்றிய கிராமங்களுக்கு தாமிரபரணி தண்ணீர் விநியோகத்திட…தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க தீவிர நடவடிக்கை எடுத்திட…கயத்தார் ஒன்றியத்தில் கூடுதல் வேலைவாய்ப்பை தரும் புதிய தொழிற்சாலைகள் அமைத்திட…அரசு மருத்துவமனையில் MRI ஸ்கேன் வசதி, முழுநேர CT ஸ்கேன் வசதி  செய்திடகோவில்பட்டி மருத்துவமனையில் முதியோர், நீரழிவு நோயாளிகள் சிறப்பு பிரிவு ஏற்படுத்திட…கயத்தார், கழுகுமலையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் அமைத்திட…கோவில்பட்டியில் ...

Read More »

விவசாயிகள் சங்க தலைவர் அரசம்பட்டு தோழர் எம் சின்னப்பா மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் தாலுகா, அரசம்பட்டுவைச் சேர்ந்த தோழர் எம். சின்னப்பா அவர்கள் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று (01.01.2021) இரவு சிகிச்சை பலனின்றி சென்னையில் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறது. தோழர் எம். சின்னப்பா சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் போது மாணவர் சங்கத்துடன் அறிமுகம் ஏற்பட்டு சங்கத்தில் செயல்பட ஆரம்பித்தவர். தோழர் விபிசியால் ஈர்க்கப்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை ...

Read More »

புத்தாண்டு மக்கள் போராட்டங்களின் ஆண்டாக மலரட்டும்!

தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்து சென்ற ஆண்டின் கசப்புகள் நீங்கி, எதிர்வரும் ஆண்டில் மகிழ்ச்சி மலரட்டும் என வாழ்த்துகிறோம். கோவிட்-19 எனும் பெருந்தொற்று உலக மக்களை பெரும் துயரில் ஆழ்த்தியது. உலகம் முழுவதும் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்த சோகம் குடி கொண்டுள்ளது. உயிர் வாழ்வதற்காகவும், வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் பெரும் போராட்டத்தை மக்கள் நடத்தவேண்டி வந்தது. மறுபக்கம், மோடி அரசின் விவசாயிகள் விரோத சட்டங்களை எதிர்த்து தலைநகர் தில்லியிலும், நாடு முழுவதும் ...

Read More »

அறிஞர் தொ.பரமசிவன் மறைவு சிபிஐ (எம்) இரங்கல்

தமிழ் அறிஞரும், சிறந்த ஆய்வாளருமான பேராசிரியர் தொ.பரமசிவன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவருடைய முனைவர் பட்ட ஆய்வான “அழகர் கோவில்” குறித்த ஆய்வு தமிழ் இலக்கிய ஆய்வுலகில் ஒரு திருப்புமுனையாகும். மானுடவியல், பண்பாட்டு நோக்கில் தமிழக வரலாற்றை அவர் ஆய்வு செய்து சிறந்த நூல்களை வழங்கியுள்ளார். அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள் உள்ளிட்ட அவரது நூல்கள் தமிழில் பெரும் கவனத்தைப் பெற்றவை. மார்க்சிய, பெரியாரிய நோக்கிலேயே அவர் தன்னுடைய ஆய்வை அமைத்துக் கொண்டார். கல்லூரியில் பணியாற்றிய ...

Read More »

அதிமுக அரசை அகற்றுவோம்! பாஜகவை நிராகரிப்போம்! ஆட்சி மாற்றம் நிகழட்டும்! தமிழகம் நிமிரட்டும்!

டிசம்பர் 25-31 தேதிகளில் ஒருவார காலம் தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) மக்கள் சந்திப்பு இயக்கம்! மத்திய பாஜகவின் ஆட்சியில் மதவெறி எனும் நச்சரவம் படமெடுத்து ஆடுகிறது. அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கைகட்டி சேவகம் செய்கிற மோடி அரசு வாக்களித்த மக்களை வஞ்சிக்கிறது. உதாரணமாக, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி, பெட்ரோல் – டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, கோவிட் -19 பாதிப்பினால் ஏற்பட்ட வேலையிழப்பு, தொழில்முடக்கம் என தொடர் தாக்குதலால் மக்கள் வாழ வழியின்றி தத்தளிக்கிறார்கள். வேளாண் துறையை ...

Read More »

சட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் சிபிஐ (எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி (2021) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர் பி. சண்முகம் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை மாநிலக்குழு அமைத்துள்ளது. குழு உறுப்பினர்கள் பின்வருமாறு 1. பி. சண்முகம், 2. உ. வாசுகி, 3. என். குணசேகரன், 4. க. கனகராஜ், 5. மதுக்கூர் ராமலிங்கம், 6. சு. வெங்கடேசன் எம்.பி, 7. ஜி. சுகுமாறன், 8. எஸ். ...

Read More »

கேரளா உள்ளாட்சி தேர்தல்:இடது ஜனநாயக முன்னணி மகத்தான வெற்றி தமிழ்நாடு மாநிலக்குழு வாழ்த்து

கேரள மாநிலத்தில் கடந்த 4 1/2 ஆண்டு காலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தோழர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கேரள மாநிலத்தை இந்தியாவின் முன்னோடி மாநிலமாக திகழும் வகையில் வளர்ச்சிப் பாதையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி எடுத்துச் செல்வதால் நாடு தழுவிய பாராட்டுதலைப் பெற்று வருகிறது. கோவிட் 19 பெரும் தொற்று காலத்தில் இடது ஜனநாயக முன்னணியின் செயல்பாடு சர்வதே அளவிலும் பாராட்டுதலை பெற்றுள்ளது. இந்த சூழ்நிலையில் தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று ...

Read More »

ஜெகத்ரட்சகன் துணைவியார் மரணம் கே. பாலகிருஷ்ணன் இரங்கல் !

திமுக முன்னாள் மத்திய அமைச்சரும் – அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி., அவர்களின் துணைவியார் திருமதி அனுசுயா (வயது 65) அவர்கள் இன்று (15.12.2020) உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனைக்கு உள்ளானோம். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அம்மையார் திருமதி அனுசுயா அவர்களின் மறைவால் துயருற்றிருக்கும் திரு. ஜெகத்ரட்சகன் எம்.பி., அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். கே. பாலகிருஷ்ணன் மாநிலச் செயலாளர்

Read More »

விழுப்புரம் அருகே 5 பேர் குடும்பத்துடன் தற்கொலை! கந்துவட்டியை ஒழிப்பதற்கு அதிமுக அரசுக்கு அக்கறை இல்லை!! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!!!

விழுப்புரம் மாவட்டம், வளவனூரைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி மோகன் மற்றும் அவரது மனைவியை கந்துவட்டிக்காரர்கள் மிரட்டியுள்ளதால், மோகன், அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. தமிழகம் முழுவதும் கந்து வட்டி கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏழை, எளிய மக்கள் தங்கள் தொழில், குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். வட்டிக்கு பணம் கொடுக்கும் கந்துவட்டி கும்பல் வட்டிக்கு மேல் வட்டி என பல வகையான வட்டிமுறைகளை ...

Read More »

விவசாயிகள் மீது தமிழக போலீசார் கண்மூடித்தனமான தாக்குதல் சிபிஐ(எம்) கண்டனம்!

புதுதில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள விவசாயிகளுக்கு விரோதமான புதிய வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்த மசோதாவையும், தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டத்தையும் திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் இன்று (14.12.2020) மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது. இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பெண்கள் மீது காவல்துறை மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்தி கைது செய்துள்ளது. திண்டுக்கல்லில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. பாலபாரதி ...

Read More »