Tag Archives: Dalits caste issue

பார்பரம்மாள்புரம் தலித் மக்கள் மீதான தாக்குதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்டக்குழு கண்டனம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: நாங்குநேரி தாலுகா விஜயநாராயணம் அருகே உள்ள பார்பரம்மாள்புரம் பதைக்கம் காலனியை சார்ந்த வேல்முருகன், சுபாஷ், சதீஷ், முத்துசரவணன் ஆகியோர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது. பதைக்கம் காலனி பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் உள்ள தண்ணீரை வீணடித்தும், மாசுபடுத்தியும் வந்த குகானந்தம், ராஜகோபால், பிரேம் ஆனந்த் மூவரையும் பதைக்கம் காலனியை சார்ந்த தலித் மக்கள் தண்ணீரை பாழடிக்காதீர்கள் என்று சொன்னதற்காக ...

Read More »

புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில் அருகே தலித் சிறுமி பாலியல் வன்கொடுமையால் கொடூரக்கொலை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே 7 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. இச் சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இந்த கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதே நேரத்தில் இது கூட்டு பாலியல் படுகொலையாக இருக்கலாம் என உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்தும் விசாரணை செய்து காவல்துறை விரைந்து அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். தமிழகத்தில் ...

Read More »

உடுமலை சங்கர் சாதி ஆணவப்படுகொலை வழக்கு – உயர்நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது!

மேல்முறையீடு செய்திட தமிழக அரசு சிபிஐ(எம்) வலியுறுத்தல்.. உடுமலைப்பேட்டை சங்கர், கௌசல்யா ஆகியோரின் சாதி மறுப்பு திருமணத்தை ஏற்க முடியாத சாதிவெறி சக்திகள் சங்கரை கொலைசெய்தனர். 2016 மார்ச் 13 அன்று பட்டப்பகலில், பலர் முன்னிலையில், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு எதிரில் சங்கர் கொடூரமான முறையில் கூலிப் படையினரால் படுகொலை செய்யப்பட்டார். சங்கர் கொல்லப்படுவதை தடுக்க முயன்ற கௌசல்யாவையும் கொலையாளிகள் வெட்டி வீழ்த்தினார்கள். மிகத்தீவிரமான சிகிச்சைக்கு பிறகே கௌசல்யா உயிர் பிழைத்தார். தமிழகம் மட்டுமல்ல,  உலகமே அதிர்ச்சி அடைந்த மிகக் கொடூரமான சாதி ஆணவப்படுகொலை ...

Read More »

பட்டியல் சாதியினர் – பழங்குடியின மக்கள் மீது தாக்குதல்கள் : நடவடிக்கை மேற்கொள்ள தமிழக முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்!

பெறுநர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு, தலைமை செயலகம், சென்னை-600 009. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்:- கொரோனா ஊரடங்கு நேரத்திலும் – தமிழ்நாட்டில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரமான தாக்குதல்கள். படுகொலைகள், பாலியல் வல்லுறவு, ஆணவப்படுகொலை, சொத்துக்கள் அழிப்பு, தாக்குதல்கள் என தொடர்வது – வன்கொடுமைகள் மீது உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்வது – பட்டியலின பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக: தமிழ்நாட்டில் பட்டியலின ...

Read More »

கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தார் என்பதற்காக தலித் இளைஞர் மீது ஆதிக்க சாதியினர் நடத்திய கொலைவெறித் தாக்குதலுக்கு வன்மையான கண்டனங்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வடக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிபிஐ(எம்) உறுப்பினர் கண்ணுச்சாமி என்பவரது மகன் சிவன்ராஜா மே 27 அன்று பேருந்து நிழற்குடையில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தார் என்பதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதி இளைஞர்கள் ஏண்டா உனக்கு எவ்வளவு திமிர் இருந்தால் எங்க முன்னாடியே இப்படி திமிராக உட்கார்ந்து இருப்பாய் என்று தாக்கியதோடு ஐந்திற்கும் மேற்பட்ட இளைஞர்களைத் திரட்டி வீட்டிற்கும் சென்று கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் சிவன்ராஜின் பற்கள் ...

Read More »

வெளிச்சம் தொலைக்காட்சி நிருபர் கண்ணன் மீதான சாதிய ரீதியிலான தாக்குதலுக்கு சிபிஐ(எம்) கரூர் மாவட்டக்குழு கண்டணம்!

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், ஆத்தூர் பூலாம்பாளையம் கிராமம், செல்லரபாளையத்தைச் சேர்ந்த வெளிச்சம் தொலைக்காட்சியின் நிருபராக உள்ள திரு.கண்ணன் (அருந்ததியர்), மே 24 அன்று, அவருடைய ஊரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் வருவதாய் இருந்த திருமணம் கொரோனா தொற்று பரவல் நிலையில் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்காததால் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தொலைபேசி மூலம் புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், செல்லரபாளையத்திற்கு வந்த அமைச்சர், சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தி, அவருடன் வந்தவர்களை தூண்டிவிட்டு தாக்கச் செய்ததாக நிருபர் கண்ணன் காணொளிப் பதிவை வெளியிட்டுள்ளார். ...

Read More »

உத்தப்புரம் – உடைபடும் சுவர்கள்

Read More »