Tag Archives: delhi

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் டிசம்பர் 14 அன்று – சிபிஐ (எம்) சார்பில் அம்பானி, அதானி பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம்

மூன்று வேளாண் சட்டங்களையும், இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்கான மின்சார சட்டத் திருத்த மசோதா (2020)-ஐ முற்றாக ரத்து செய்யவேண்டுமென வலியுறுத்தி நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து டிசம்பர் 8 அன்று நாடு தழுவிய மகத்தான பந்த் போராட்டம் நடைபெற்றது. டிசம்பர் 9 அன்று, 6வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்த போது மத்திய அரசு ஆணவப் போக்கோடு நடந்து கொண்ட காரணத்தினால் விவசாய சங்க கூட்டமைப்பு போராட்டத்தை தீவிரப்படுத்த அறைகூவல் விடுத்துள்ளது. டிசம்பர் 14 அன்று, தில்லி மாநகரத்தின் அருகமையில் இருக்கும் மாநில ...

Read More »

தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்கள் செய்திருப்பதைக் கண்டித்து இடதுசாரி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்கள் செய்திருப்பதைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்), புரட்சி சோசலிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக், எல்ஜேடி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவருக்கு, எழுதிய கடிதம் எழுதியிருக்கின்றனர். அதில் கண்டுள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (13/5/20) அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகமான ஏ,.கேகோபாலன் பவனில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Read More »

ரம்ஜான் வாழ்த்துக்கள் கூட சொல்ல வேண்டாம்! இந்தப் புறக்கணிப்புகளுக்கு முடிவு கட்டுவோம்!

இசுலாமியர்களுக்கு எதிரான புறக்கணிப்பும் பாரபட்சமும்: மருத்துவத்துறையின் மீது நம்பிக்கையிழக்க வைத்திருக்கிறது… மருத்துவத்துறையில் கூட இசுலாமியர்களுக்கு எதிரான பாரபட்சம் ஒன்றும் புதிதல்ல. ஆனால், சமீபத்தில் தப்ளிகி ஜமாத்தின் தில்லி நிஜாமுதீனிலுள்ள தலைமையத்தைப் பற்றி கொரோனா வைரஸ் பரவலுக்குப் பின்னர் பாய்ச்சப்பட்ட ஊடக வெளிச்சம் நாட்டின் சமூக நல்லிணக்கத்தை பெருமளவிற்கு மாற்றியமைத்திருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதற்கு இசுலாமியர்கள்தான் காரணம் என்ற பிரச்சார தீயில் ஊடகங்கள் எண்ணெய் வார்த்தன. அவர்கள் இசுலாமியர்களை ‘கொரோனா குண்டுகள்’ என்றும் தேசத்தின் எதிரிகள் என்றும் தொலைக்காட்சிகளில் சித்தரிக்க ஆரம்பித்தார்கள். இசுலாமியர் ...

Read More »

வெறுப்பு அரசியல் வேண்டாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்!

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து உயிர்காக்கும் முக்கியப் போராட்டக் களத்தில் உலகமே இறங்கியுள்ளது. ஒருபுறம் அதற்குத் தேவையான சமூக விலகல், சுய தனிமைப்படுதல் உளிட்ட கடமைகள் மக்கள் முன்பும், சமூக விலகலை உறுதிப்படுத்த மக்களின் அடிப்படைப் பொருளாதார தேவைகள், மருத்துவ சேவை, மருந்து உற்பத்தியில் தொய்வின்மை, சுகாதார வசதிகள் போன்றவற்றை உறுதி செய்யும் கடமை, மத்திய மாநில அரசுகள் முன்பும் உள்ளன. இந்தியா முழுவதும் சாதி, மதம், அரசியல் வேறுபாடு கடந்து ஒற்றை மனிதராய் இந்த சவால்களைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதற்கிடையே, ...

Read More »