Tag Archives: doctors

கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

கொரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த முன் வரிசை பணியாளர்கள்சிலர்  அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் ஆரம்பத்தில் அரசு அறிவித்த பணியிலிருக்கும்போது இறந்தவர்களின் குடும்பத்திற்கான ரூ.50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனமும் வழங்கப்படாதது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது சம்மந்தமாக இதுவரை ஐந்து மரணங்கள் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளன. 1) திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் வருவாய் ஆய்வாளர் திரு.சேகர், 2) காஞ்சிபுரம் நகராட்சி  வருவாய் அலுவலர் திருமதி தமிழ்ச் செல்வி, 3) காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம் ...

Read More »

ஜோதிகாவை இழிவுபடுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்…

விருது வழங்கும் விழா ஒன்றில் திரைக்கலைஞர் ஜோதிகா பேசியதை, அண்மையில் ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. தஞ்சாவூருக்கு படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்கச் சென்றபோது அங்குள்ள அரசு மருத்துவமனையின் அவலமான நிலையைக் கண்டு தாம் வருந்தியதாகவும், கோவில்களுக்கு செலவு செய்து பராமரிப்பது போல அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசுப் பள்ளிகளையும் பராமரிக்க வேண்டும் என்ற பொருளில்தான் அவர் பேசியுள்ளார். ஆனால், அவருடைய பேச்சை முன்னும் பின்னுமாக வெட்டி திரித்து அவர் கோவில்களுக்கு எதிராக பேசிவிட்டது போல சிலர் விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவரது பேச்சை முழுமையாக கேட்கும் ...

Read More »

மருத்துவர்கள் மரணம் – தொடர்பாக தமிழக முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

பெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. வணக்கம். பொருள்:-     கொரோனா தொற்று – மருத்துவப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் – நோய்த்தொற்றுக்கு ஆளாகி வருவது – மருத்துவர்கள் மரணம் – உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது மற்றும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோருவது தொடர்பாக… மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் பாராமல், தங்களது உயிரை துச்சமென மதித்து, தங்களது குடும்பத்தினரைப் பற்றிக் கூட கவலைப்படாமல், கொரோனா ...

Read More »

கொரோனாவால் இறப்போர் இறுதி நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்க!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் ! கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு தங்கள் பகுதியில் அனுமதிக்க முடியாதென சிலர் ஆட்சேபனை செய்தது இரண்டாவது முறையாக தமிழகத்தில் நடந்திருக்கிறது. நேற்றைய தினம் மரணமடைந்த நரம்பியல் மருத்துவர் சைமன் உடல் அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டபோது, அந்த அடக்கத்திற்காக சென்றவர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டிருக்கிறது. கொரோனாவால் மரணமடைந்தவரை தங்கள் பகுதியில் புதைப்பதால் தாங்கள் பாதிக்கப்படுவோம் என்ற தவறான புரிதலால் சிலர் இதில் ஈடுபட்டிருக்கின்றனர். கொரோனா தொற்றால் இறந்தவர்களை புதைப்பதால் அருகிலுள்ள பகுதிகளுக்கு எந்தவித ...

Read More »