Tag Archives: Farmers Protest

விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி அளித்திட வலியுறுத்தி தமிழக டிஜிபிக்கு சிபிஐ (எம்) கடிதம்

டெல்லியில் கடந்த அறுபது நாட்களுக்கு மேலாக வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகளின் வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் நடைபெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள். அந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக ஜனவரி 26 குடியரசு தினத்தன்று விவசாயிகளின் அடையாளமான டிராக்டர் அணிவகுப்பு நடத்திட அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு அறைகூவல் விடுத்துள்ளது. அரசின் சார்பில் நடைபெற இருக்கும் குடியரசுதின விழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்த பிறகு விவசாயிகள் தேசியக்கொடியுடன் டிராக்டர் அணிவகுப்பு நடத்திட அறிவித்துள்ளனர். இதனை ஏற்று டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பு நடத்திட டெல்லி காவல்துறை ...

Read More »

அதிமுக அரசை அகற்றுவோம்! பாஜகவை நிராகரிப்போம்! ஆட்சி மாற்றம் நிகழட்டும்! தமிழகம் நிமிரட்டும்!

டிசம்பர் 25-31 தேதிகளில் ஒருவார காலம் தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) மக்கள் சந்திப்பு இயக்கம்! மத்திய பாஜகவின் ஆட்சியில் மதவெறி எனும் நச்சரவம் படமெடுத்து ஆடுகிறது. அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கைகட்டி சேவகம் செய்கிற மோடி அரசு வாக்களித்த மக்களை வஞ்சிக்கிறது. உதாரணமாக, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி, பெட்ரோல் – டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, கோவிட் -19 பாதிப்பினால் ஏற்பட்ட வேலையிழப்பு, தொழில்முடக்கம் என தொடர் தாக்குதலால் மக்கள் வாழ வழியின்றி தத்தளிக்கிறார்கள். வேளாண் துறையை ...

Read More »

விவசாயிகளை வீதியில் தள்ளிய மத்திய – மாநில அரசுகளுக்கு கண்டனம்… தலைநகரை உலுக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்புவோம்!

மத்திய மோடி அரசு கோடிக்கணக்கான விவசாயிகளது வாழ்வை நாசமாக்கும் வகையிலும், வேளாண்மையை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் வகையில் சட்டங்களை நாடாளுமன்றத்தில் அதிரடியாக நிறைவேற்றியது. இதேபோல போராடிப் பெற்ற தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் சட்டத் திருத்தங்களை அதிரடியாக நிறைவேற்றி நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளையும், தொழிலாளர்களையும் நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது. மத்திய அரசை கண்டித்து நவம்பர் 26ந் தேதி நாடு தழுவிய வரலாறு காணாத வேலைநிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். நவம்பர் 27ந் தேதி டில்லியில் மோடி அரசை முற்றுகையிட பல லட்சம் விவசாயிகள் ...

Read More »