Tag Archives: formerdeath

தென்காசியில் வனத்துறையினரால் விவசாயி அடித்துக் கொலை! வனத்துறையினர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்க!

தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!! தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகில் உள்ள வாகைக்குளம் கிராமத்தை சார்ந்த விவசாயி முத்து என்பவரை கடந்த ஜூலை 22 அன்று இரவு விசாரணை என்கிற பெயரால் அடித்து சித்ரவதை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இச்சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மந்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட வாகைக்குளம் கிராமத்தில் வீட்டுக்கு அருகே உள்ள தனது தோட்டத்தில் மின்சார முள்வேலி அமைத்து இருந்ததாகவும், அதற்காக விசாரணைக்கு அழைத்து சென்றதாக தற்போது பொய்யான குற்றச்சாட்டை சொல்லி ...

Read More »

ஆகஸ்ட்20-26 அகில இந்திய எதிர்ப்பு வாரம் அனுசரித்திடுக!மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அறைகூவல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் முதன்முறையாக இணையத்தின் வழி (ஆன்லைனில்) ஜூலை 25-26 தேதிகளில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று திங்கள்கிழமை மாலை கூட்டத்தின் முடிவுகளை விளக்கி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது: கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பு பிரதமர் நரேந்திர மோடி எவ்விதத் திட்டமிடலும் இல்லாது, திடீரென்று அறிவித்த பொது முடக்கம் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைப் பரவாது கட்டுப்படுத்துவதில் வலுவிழந்திருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மிக நீண்ட காலத்திற்கு பொது முடக்கத்தை அறிவித்த போதிலும் அதனைப் பயன்படுத்திக் கொண்டு, ...

Read More »

விவசாயி தற்கொலை வங்கிகளின் அடாவடிதனத்தை தடுத்து நிறுத்துக!

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம் மானூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி (55) என்ற விவசாயி, தாராபுரத்தில் உள்ள ஆக்ஸிஸ் வங்கியில் விவசாயத்திற்கென்று 2/12ம் ஆண்டு கடன் பெற்றுள்ளார். முறையாக பணத்தை செலுத்தியதால் 2017ம் ஆண்டு மீண்டும் 1.5 லட்சம் அதே வங்கியில் கடன் வாங்கியுள்ளார். கொரானா நோய்த்தொற்று, பொது முடக்கம் காரணமாக கடநத் நான்கு மாதங்களாக தவணை கட்ட முடியாமல் இருந்துள்ளார். இந்த நிலையில், வங்கியின் சார்பில் கடன் வசூலிக்கும் ரவுடி கும்பல் கடந்த பத்து நாட்களாக தொடர்ந்து அவருடைய வீட்டிற்கு சென்று தவணையை ...

Read More »

உயர்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயி தற்கொலை – சிபிஐ(எம்) கண்டனம்!

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.50 லட்சம்நஷ்டஈடு வழங்க வலியுறுத்தல்! இன்று (25-4-2020) காலை திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம்,  இராமபட்டணத்தில் ராமசாமி (வயது 75) என்கிற விவசாயி அவரது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், ஆழ்ந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது நிலத்தில் தமிழக மின் தொடரமைப்பு கழகம் 400 கே.வி. உயர்மின் அழுத்த மின்கோபுரத்தை அமைத்து வருகிறது. இதற்காக விவசாயி ராமசாமி உயர்ந்தபட்ச இழப்பீடு கோரி வந்தார். அவர் கேட்ட இழப்பீட்டை வழங்குவதாகக் ...

Read More »