Tag Archives: govt teachers

கொரோனா – ஊரடங்கு காலத்தில் கௌரவ விரைவுரையாளர்களுக்கு ஊதியம் மறுப்பு! முதலமைச்சர் தலையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!

தமிழகத்தில் உள்ள 113 கலை மற்றும் அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் இரண்டு சுழற்சிகளிலும் சேர்த்து 4084 கௌரவ விரிவுரையாளர்கள் மிகக் குறைந்த ஊதியமான ரூ. 15,000/-ல் பணியாற்றி வருகின்றனர். கொரோனா நோய் தொற்று பரவல் மற்றும் ஊரடங்கினால் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இவர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் இவர்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்களுக்கு உள்ளாகி தங்களது குடும்பத் தேவைகளை கூட சமாளிக்க முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கொரோனா நோய்த் தொற்று, ஊரடங்கு ஆகிய காரணங்களால் இவர்கள் தங்களது குடும்பத் ...

Read More »

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டகலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன்கல்வி ஆகிய பாடப்பிரிவுகளுக்கு அரசுப்  பள்ளிகளில் 2012ம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டு காலமாக, 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் ரூ. 5,000/- தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்டு, தற்போது ரூ. 7,700/- ஊதியம் பெற்று பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு வருடத்திற்கு 11 மாதச் சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் ...

Read More »

அனைத்து பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் சமைத்த மதிய உணவு வழங்கிட தமிழக முதல்வருக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்

பெறுநர்       மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,       தமிழ்நாடு அரசு,       தலைமைச் செயலகம்,       சென்னை – 9. மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம். பொருள்:-        அனைத்துப் பள்ளி குழந்தைகளுக்கும் சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்குவது – இந்த கல்வி ஆண்டில் கல்வி அளிப்பது  குறித்து ஆசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கல்வியாளர்களுடன் கலந்துரையாடி முடிவு செய்வது – பள்ளி பாடப்புத்தகங்கள், நோட்டுகள் உடனடியாக விநியோகிப்பது தொடர்பாக:             “கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் ...

Read More »

பள்ளிக் கல்வித்துறை வல்லுநர் குழுவில் கல்வியாளர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர் பிரதிநிதிகளையும் சேர்த்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

கொரோனா நோய்த் தொற்று காலத்தில் பள்ளிக் கல்வி செயல்பாடு குறித்து ஆய்வு செய்து பதினைந்து நாட்களுக்குள் அறிக்கை அளித்திட தமிழ் நாடு அரசு 12.5.2020 வெளியிடப்பட்ட அரசாணை மூலம் பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையில் ஒரு வல்லுநர் குழுவை (நுஒயீநசவ ழுசடிரயீ) அமைத்தது. சுகாதாரப் பேரிடர் காலத்தில் பள்ளிக் கல்வி செயல்பாடு பற்றி அறிக்கை அளிப்பதே இக்குழுவின் நோக்கம். தற்போது 29.5.2020 வெளியிடப்பட்ட அரசாணைக் குழுவில் இன்னும் சிலரை சேர்த்து விரிவுபடுத்தி, அறிக்கை அளித்திட மேலும் ஒரு வார காலம் நீட்டிப்பு அளித்துள்ளது. தமிழ்நாட்டில் ...

Read More »