Tag Archives: Honour killing

உடுமலை சங்கர் சாதி ஆணவப்படுகொலை வழக்கு – உயர்நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது!

மேல்முறையீடு செய்திட தமிழக அரசு சிபிஐ(எம்) வலியுறுத்தல்.. உடுமலைப்பேட்டை சங்கர், கௌசல்யா ஆகியோரின் சாதி மறுப்பு திருமணத்தை ஏற்க முடியாத சாதிவெறி சக்திகள் சங்கரை கொலைசெய்தனர். 2016 மார்ச் 13 அன்று பட்டப்பகலில், பலர் முன்னிலையில், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு எதிரில் சங்கர் கொடூரமான முறையில் கூலிப் படையினரால் படுகொலை செய்யப்பட்டார். சங்கர் கொல்லப்படுவதை தடுக்க முயன்ற கௌசல்யாவையும் கொலையாளிகள் வெட்டி வீழ்த்தினார்கள். மிகத்தீவிரமான சிகிச்சைக்கு பிறகே கௌசல்யா உயிர் பிழைத்தார். தமிழகம் மட்டுமல்ல,  உலகமே அதிர்ச்சி அடைந்த மிகக் கொடூரமான சாதி ஆணவப்படுகொலை ...

Read More »

“சாதி மறுப்பு தம்பதிகளை நாங்கள் பாதுகாப்போம்” – என்.சங்ரய்யா

  இடதுசாரி சிந்தனை கொண்ட இன்றைய தலைமுறையினருக்கு ‘இன்ஸ்பிரேஷன்’ ஆக இருப்பவர், விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்ரய்யா. எளிமைக்கும், நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி வரும் சங்கரய்யாவுக்கு, ‘அரசியல் மற்றும் பொது வாழ்வில் நேர்மைக்கான விருது’ காயிதே மில்லத் அறக்கட்ட ளையால் சமீபத்தில் வழங்கப் பட்டது. அந்த விருதைப் பெற்றுக்கொண்ட சங்கரய்யா, விருதுத் தொகையான இரண்டரை லட்சம் ரூபாயை ஏழை மாணவர்களின் கல்விச் செலவுக்காக அப்படியே கொடுத்துவிட்டார். இன்னும் சில மாதங்களில் 95 வயதைத் தொடப்போகிற சங்கரய்யாவை சந்தித்தோம். ...

Read More »

சாதி ஆணவக் கொலைகளுக்கு முடிவு கட்ட சிபிஐ(எம்) வலியுறுத்தல்

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் உடுமலைப் பேட்டையில் சங்கர் என்ற 21 வயது வாலிபர் சாதி ஆதிக்க சக்திகளால் படுகொலை செய்யப்பட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. அஇஅதிமுக அரசு தமிழகத்தில் சாதி ஆணவக் கொலைகள் நடைபெறவில்லை என்பதும், சாதிய ஆணவக் கொலைகள் நடந்து கொண்டே இருப்பதும் வழக்கமாக மாறியிருக்கிறது. தெரியாமல் கொல்வது என்பதிலிருந்து பட்டப்பகலில் நட்ட நடு ரோட்டில் ஊரே பார்க்க சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை வெட்டிக் கொல்வதும், கொலை ஆயுதங்களோடு தப்பிச் செல்வதும் சாத்தியம் ...

Read More »

கௌரவக் கொலைகளைத் தடுத்து நிறுத்த தனி சட்டம் அவசியம் சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

கௌரவக் கொலைகள் எதுவுமே தமிழகத்தில் நடக்கவில்லை, எனவே தனி சட்டம் தேவையில்லை என்று தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் அவர்கள் சட்டமன்றத்தில் கூறியிருப்பது தமிழகத்தின் உண்மை நிலையை மறுத்து, மறைத்து செய்யப்பட்ட அறிவிப்பு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. இதற்கென்று தனி சட்டமோ, சட்டப் பிரிவுகளோ இல்லாத சூழலில், இபிகோ 302ன் கீழ் பதிவு செய்யப்பட்டு இதர கொலைகளின் கணக்கில் இவை சேர்க்கப் படுகின்றன என்பது தான் உண்மை. எவிடென்ஸ் அமைப்பின் ஆய்வின் படி, கடந்த 2 ஆண்டுகளில் 42 கௌரவக் கொலைகள் நடந்திருப்பதாகத் ...

Read More »