Tag Archives: India Fights Corona

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் பரிந்துரைத்துள்ளபடி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகள் எடுத்திடுக…

கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலுமாகத் தடுத்து, ஒழித்திட, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் பரிந்துரைத்துள்ளபடி உடனடியாக நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் கீழ் இருக்கின்ற உயர்மட்ட அளவிலான அறிவியலாளர்கள் மற்றும் அறிவியல் சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்கள் மத்தியில் இப்போது நாட்டில் எழுந்துள்ள மோசமான நிலைமை குறித்து கவலைகள் அதிகரித்திருப்பது ஊடகங்களில் மூலமாக தெரிய ...

Read More »

ரம்ஜான் வாழ்த்துக்கள் கூட சொல்ல வேண்டாம்! இந்தப் புறக்கணிப்புகளுக்கு முடிவு கட்டுவோம்!

இசுலாமியர்களுக்கு எதிரான புறக்கணிப்பும் பாரபட்சமும்: மருத்துவத்துறையின் மீது நம்பிக்கையிழக்க வைத்திருக்கிறது… மருத்துவத்துறையில் கூட இசுலாமியர்களுக்கு எதிரான பாரபட்சம் ஒன்றும் புதிதல்ல. ஆனால், சமீபத்தில் தப்ளிகி ஜமாத்தின் தில்லி நிஜாமுதீனிலுள்ள தலைமையத்தைப் பற்றி கொரோனா வைரஸ் பரவலுக்குப் பின்னர் பாய்ச்சப்பட்ட ஊடக வெளிச்சம் நாட்டின் சமூக நல்லிணக்கத்தை பெருமளவிற்கு மாற்றியமைத்திருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதற்கு இசுலாமியர்கள்தான் காரணம் என்ற பிரச்சார தீயில் ஊடகங்கள் எண்ணெய் வார்த்தன. அவர்கள் இசுலாமியர்களை ‘கொரோனா குண்டுகள்’ என்றும் தேசத்தின் எதிரிகள் என்றும் தொலைக்காட்சிகளில் சித்தரிக்க ஆரம்பித்தார்கள். இசுலாமியர் ...

Read More »

கொரோனாவால் இறப்போர் இறுதி நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்க!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் ! கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு தங்கள் பகுதியில் அனுமதிக்க முடியாதென சிலர் ஆட்சேபனை செய்தது இரண்டாவது முறையாக தமிழகத்தில் நடந்திருக்கிறது. நேற்றைய தினம் மரணமடைந்த நரம்பியல் மருத்துவர் சைமன் உடல் அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டபோது, அந்த அடக்கத்திற்காக சென்றவர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டிருக்கிறது. கொரோனாவால் மரணமடைந்தவரை தங்கள் பகுதியில் புதைப்பதால் தாங்கள் பாதிக்கப்படுவோம் என்ற தவறான புரிதலால் சிலர் இதில் ஈடுபட்டிருக்கின்றனர். கொரோனா தொற்றால் இறந்தவர்களை புதைப்பதால் அருகிலுள்ள பகுதிகளுக்கு எந்தவித ...

Read More »

மக்களைக் காக்கும் ஆக்கப்பூர்வமான பணியில் முதல்வர் ஈடுபட வேண்டும்!

அராஜகமான எதிர்நிலை மனோபாவத்தை கைவிட்டு, கொரோனா பரவலை தடுத்து நிறுத்தவும், பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாக்கவும், ஊரடங்கால் அனைத்தையும் இழந்து நிற்கும் மக்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைத்துக் கொண்டு ஆக்கப்பூர்வமான பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

Read More »