Tag Archives: India

நிதி வருவாய்க்கு வழி சொல்லும் அதிகாரிகள் மீது நிதி அமைச்சருக்கு கோபம் வருவது ஏன்?

இந்திய வருவாய்த் துறையில் (IRS) பணியாற்றும் சில இளம் அதிகாரிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதில் மத்திய அரசுக்கு உள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காண, சில புதிய ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளார்கள். காரண காரியங்களோடு இவற்றை ஏற்பதும் மறுப்பதும் மத்திய அரசின் பொறுப்பு. ஆனால், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், கடும் கோபத்தோடு, இவர்களது செயல் பொறுப்பற்ற செயல், இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது, கொரோனா தாக்கத்தில் நாடு சிக்கியுள்ள நிலையில் இது உள்நாட்டு குழப்பம் விளைவிக்கும் செயல் என விமர்சித்ததோடு ...

Read More »

உயர்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயி தற்கொலை – சிபிஐ(எம்) கண்டனம்!

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.50 லட்சம்நஷ்டஈடு வழங்க வலியுறுத்தல்! இன்று (25-4-2020) காலை திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம்,  இராமபட்டணத்தில் ராமசாமி (வயது 75) என்கிற விவசாயி அவரது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், ஆழ்ந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது நிலத்தில் தமிழக மின் தொடரமைப்பு கழகம் 400 கே.வி. உயர்மின் அழுத்த மின்கோபுரத்தை அமைத்து வருகிறது. இதற்காக விவசாயி ராமசாமி உயர்ந்தபட்ச இழப்பீடு கோரி வந்தார். அவர் கேட்ட இழப்பீட்டை வழங்குவதாகக் ...

Read More »

மருத்துவர்கள் துயரம் பற்றி எழுதிய பத்திரிக்கையாளர் சிறையிலடைப்பு!

மருத்துவர்கள் துயரம் பற்றி கண்ணீர் வடிப்பது போலியானதா? கோவையிலிருந்து செயல்படும் சிம்பிள்சிட்டி டிஜிட்டல் ஊடகத்தின் உரிமையாளர் சாம்ராஜா பாண்டியனை காவல்துறை கைது செய்து சிறையிலடைத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்த ஊடகத்தில் ‘இலங்கை தமிழர்களுக்கு உணவு கிடைக்கவில்லை’ என செய்தி வெளியிட்டதற்காக அவரது அலுவலகத்தை தொடர்பு கொண்டு அதிமுகவினர் கடுமையாக மிரட்டியுள்ளனர். இந்நிலையில் கோவை மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவர்கள் உணவும், குடிநீரும் இல்லாமல் அவதிப்படுவதைப் பற்றியும், ரேசன் பொருட்கள் விநியோகம் முறையாக நடைபெறவில்லை என்பதையும் செய்தியாக வெளியிட்டதற்காக அந்த ஊடகத்தின் செய்தியாளர் ...

Read More »

நீதிபதிகளின் ஓய்வுக்கு முந்தைய தீர்ப்புகளும் ஓய்வுக்குப் பிந்தைய வேலைகளும்…

என்.ஜி.ஆர்.பிரசாத் & கே.கே.ராம்சித்தாத்தா அரசியலமைப்புச் சட்டம் நீதித்துறைக்கு ஒரு பெருமை மிக்க இடத்தை வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் அரசமைப்பு பணிகளுக்கு நியமிக்கப்படுவோருக்கு சுதந்திரமாக இயங்குவதற்கான முறையில் ஏராளமான உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி 5ன் 4ஆம் அத்தியாயம் உச்சநீதிமன்றம் குறித்து பேசுகிறது. பகுதி 6ல் 5 ஆம் அத்தியாயம் உயர்நீதிமன்றங்கள் குறித்து பேசுகின்றன. நீதிபதிகளின் சம்பளமும் அவர்களின் ஓய்வு வயது உள்ளிட்டவையும் நீதிபதிகள் சுயேட்சையாக செயல்படும் வண்ணம் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 124/4 மற்றும் 217/1 B ஆகியவற்றின் மூலம் நாடாளுமன்றத்தில் ஒரு ...

Read More »

மருத்துவர்கள் மரணம் – தொடர்பாக தமிழக முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

பெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. வணக்கம். பொருள்:-     கொரோனா தொற்று – மருத்துவப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் – நோய்த்தொற்றுக்கு ஆளாகி வருவது – மருத்துவர்கள் மரணம் – உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது மற்றும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோருவது தொடர்பாக… மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் பாராமல், தங்களது உயிரை துச்சமென மதித்து, தங்களது குடும்பத்தினரைப் பற்றிக் கூட கவலைப்படாமல், கொரோனா ...

Read More »

அம்பேத்கர் ஜெயந்தியை அனுசரித்திட அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் அறைகூவல்

அம்பேத்கர் ஜெயந்தியை அனுசரித்திடுமாறு இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) பொதுச் செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக்,பொதுச் செயலாளர் தேவபிரதா பிஸ்வாஸ், புரட்சி சோசலிஸ்ட் கட்சி பொதுச் செயலர், மனோஜ் பட்டாச்சார்யா,ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டு மக்கள் அனைவரும் ஏப்ரல் 14 அன்றுமாலை 5 மணியளவில், சமூக முடக்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அம்பேத்கர் ஜெயந்தியை அனுசரிக்குமாறு நாட்டு ...

Read More »

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தொண்டர்களைப் பயன்படுத்துவதில் பாரபட்சம் காட்டுவதா? தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம்.

பெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,             தமிழ்நாடு அரசு,             தலைமைச் செயலகம்,             சென்னை – 600 009. வணக்கம். பொருள்:-     ஊரடங்கு பாதிப்பு நிவாரண நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகளையும் தொண்டர்களாக பாரபட்சமின்றி பயன்படுத்திட கோருவது தொடர்பாக… கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழகத்தில் கடந்த 17 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டு, பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியே வருவது தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு வீடுகளில் இருக்கும் மக்களுக்குத் தேவையான பொருட்களை வீடுகளுக்கே சென்று விநியோகிப்பதற்கும், நியாயவிலை ...

Read More »

கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக…

CPIM மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழக முதல்வருக்கு கடிதம் பெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,             தமிழ்நாடு அரசு,             தலைமைச் செயலகம்,             சென்னை – 600 009. வணக்கம். பொருள்:-     கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக… தமிழகத்தில் கொரோனா பரவல் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இந்தியாவிலேயே அதிகம் பேர் பாதித்த மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. கொரோனா பரவலின் இரண்டாவது கட்டத்தில் இருந்து மூன்றாவது கட்டத்திற்கு போவதற்கான ...

Read More »

தொகுதி மேம்பாட்டு நிதி: நாங்கள் கொண்டு வந்ததும் அவர்கள் கொண்டு போவதும்!

கடந்த மாதம் 25ஆம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் கொரோனா சிகிச்சைப் பிரிவுக்குத் தேவையான துணைக் கருவிகளை வாங்க நிதி ஒதுக்கீடு செய்தேன். மொத்தமாக நிதியை ஒதுக்கி, “தேவையான துணைக்கருவிகளை வாங்கிக்கொள்ளுங்கள்” என்று சொல்லாமல், கொரோனா வார்டுக்கு என்னவெல்லாம் தேவை என்பதை மருத்துவமனை முதல்வரிடமும் மருத்துவர்களிடமும் கருத்துக்கேட்டு, அதன் அடிப்படையில் என்னென்ன துணைக்கருவிகள் வாங்க வேண்டும் என்ற பட்டியலோடு நிதி ஒதுக்கீடு செய்தேன். அன்று மாலையே மாவட்ட ஆட்சியர் நிர்வாக உத்தரவினை வழங்கினார். அன்றிலிருந்து வேலை தொடங்கியது.நாடெங்கும் மருத்துவக்கருவிகளை ...

Read More »

கொரோனா வைரஸ் மருத்துவ சிகிச்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலா 1 கோடி நிதி ஒதுக்கீடு!

கொரோனா வைரஸ் நோய் மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்கள் அதாவது வென்ட்டிலேட்டர் மற்றும் பாதுகாப்பு கருவிகள் வாங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் (மாநிலங்களவை), பி.ஆர்.நடராஜன் (கோவை), சு.வெங்கடேசன் (மதுரை) ஆகியோர் தலா 1 கோடி ரூபாய் சம்மந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஏற்கனவே 1 கோடியே 8 லட்சம் வழங்கிவிட்டார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். – கே. பாலகிருஷ்ணன் மாநிலச் செயலாளர்

Read More »