Tag Archives: indian labours

ஆகஸ்ட் 9 இந்தியா பாதுகாப்பு தினம்: “இந்தியாவைப் பாதுகாப்போம்”, “மக்களைப் பாதுகாப்போம்”சிஐடியு, அகில இந்திய விவசாயிகள்சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் அறைகூவல்

புதுதில்லி, ஜூலை 24 வெள்ளையனே வெளியேறு தினமான ஆகஸ்ட் 9 அன்று இந்தியா பாதுகாப்பு தினம் கொண்டாடுவோம். இந்தியாவைப் பாதுகாப்போம், மக்களைப் பாதுகாப்போம் என்று இந்தியத் தொழிற்சங்க மையம், அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் கூட்டாக அறைகூவல் விடுத்துள்ளன. இது தொடர்பாக இம்மூன்று சங்கங்களும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத, விவசாயிகள் விரோத, தொழிலாளர்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம், ஆகஸ்ட் 9 அன்று ...

Read More »

விவசாயிகளை பாதிக்கும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஜூலை 27ல் வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம்

மத்திய பிஜேபி அரசு பொது முடக்கத்தை பயன்படுத்தி மக்களுக்கு விரோதமான சட்டங்களையும் திட்டங்களையும் நிர்வாக உத்தரவின் மூலமாகவும், அவசர சட்டங்கள் மூலமும் நிறைவேற்றி வருகிறது. கொரோனா நோய்த்தொற்று மற்றும் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உருப்படியான நிவாரண உதவிகள் எதையும் செய்யவில்லை. மாறாக, மக்கள் மீது அடுக்கடுக்கான தாக்குதல்களை தொடுத்து வருகிறது.  குறிப்பாக, மின்சார திருத்த சட்ட மசோதா 2020 நடைமுறைக்கு வருமானால் விவசாயத்திற்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்தாகும், குடிசைவாழ் மக்கள் மற்றும் பல்வேறு பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார சலுகை ...

Read More »

ஈரான் நாட்டில் தவிக்கும் 44 தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி முதலமைச்சருக்கு – சிபிஐ (எம்) கடிதம்

பெறுநர்           மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,           தமிழ்நாடு அரசு,           தலைமைச் செயலகம்,            சென்னை – 600 009. மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்:-    ஈரான் நாட்டில் தவிக்கும் 44 தமிழக மீனவர்களை மீட்பதற்கு – தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோருதல் தொடர்பாக:             கொரோனா காரணமாக சர்வதேச போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில், ஈரான் நாட்டிற்கு மீன்பிடி தொழிலுக்கு சென்ற குமரி மாவட்டத்தை சேர்ந்த 562 மீனவர்கள் உட்பட தமிழ்நாட்டை சேர்ந்த 750 மீனவர்கள், ...

Read More »

பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைக் குறைத்திடுக மக்களுக்கு நிவாரணம் அளித்திடுக இடதுசாரிக் கட்சிகள் அறிக்கை

புதுதில்லி, ஜூன் 23 மோடி அரசாங்கம், பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகளைக் குறைத்து, மக்களுக்கு நிவாரணம் அளித்திட வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் கோரியுள்ளன. இது தொடர்பாக திங்கள் அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, புரட்சி சோசலிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா மற்றும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் தேவ பிரதா பிஸ்வாஸ் ...

Read More »

வெளி நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனே தமிழகத்திற்கு திரும்ப அழைத்துவர வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

பெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்: வெளி நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனே தமிழகத்திற்கு திரும்ப அழைத்துவர வலியுறுத்துவது தொடர்பாக …. தமிழகத்திலிருந்து பணி நிமித்தமாக பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் தமிழகத்திற்கு திரும்ப முடியாமல் அந்தந்த நாடுகளிலேயே சிக்கித் தவித்து வருகின்றார்கள். குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளான சவுதி அரேபியா, குவைத், கத்தார், ஐக்கிய அரபு குடியரசு, பஹ்ரைன், ஓமன் மற்றும் ஈராக் ...

Read More »

ரொக்க மாற்று மற்றும் இலவச ரேஷன் பொருள்கள்உடனடியாக வழங்கிடுக!

இடதுசாரிக் கட்சிகள் அறிக்கை.. புதுதில்லி, மே 30 மக்களின் உயிர்களைக் காத்திடும் விதத்தில், பாதிப்புக்கு உள்ளாகியுள்ள அனைத்துக் குடும்பத்தினருக்கும் ரொக்க மாற்று மற்றும் இலவச ரேஷன் பொருட்களை உடனடியாக அளித்திட வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் கோரியுள்ளன. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் து.ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.-லிபரேசன்), திபங்கர் பட்டாச்சார்யா, புரட்சி சோசலிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் ...

Read More »

தொழிலாளர் வேலைநீக்கம், சம்பள வெட்டு உள்ளிட்ட அநீதிகளை கைவிடுக! சிபிஎம் வலியுறுத்தல் !!

கொரோனா தொற்று பாதிப்பால் பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சமூகத்தின் அனைத்து பகுதியினரும் அரசு மற்றும் அரசு நிறுவனங்கள் உதவ வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, தொழில் நிறுவனங்கள், தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதை முன்னிறுத்தி பல்வேறு சலுகைகளை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று கோருகிறார்கள். இந்த கோரிக்கையில் நியாயமிருக்கிறது. அதைப்போன்று, ஒவ்வொரு தொழிலிலும் அங்கமாக இருக்கக்கூடிய தொழிலாளர்களும் மிக கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். அரசு அறிவிக்கும் சலுகைகள் எதுவும் இந்த தொழிலாளர்களை சென்று சேரவில்லை. இந்நிலையில், பல நிறுவனங்கள் கொரோனா ...

Read More »

தொழிலாளிகளின் உயிர் பாதுகாப்பில் சிக்கனத்தை கடைபிடிக்கும் என்எல்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

07.05.2020 அன்று என்எல்சி நிறுவனத்தின் இரண்டாம் அனல்மின் நிலையத்தில் ஆறாவது பாய்லர் வெடித்து இதுவரை 4 தொழிலாளிகள் மரணம் அடைந்திருக்கிறார்கள்; இதர 4 பேர் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார்கள்; வேறு பலர் காயமடைந்துள்ளனர் என்கிற செய்தி வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கலையும், முழுமையான ஆதரவையும் தெரிவிப்பதோடு, இந்தத் துயரத்துக்கு என்எல்சி நிர்வாகம் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. கடந்த கால விபத்துகளிலிருந்து நிர்வாகம் பாடம் கற்றதாகத் தெரியவில்லை. 2016ல் 5வது பாய்லரும், 2019ல் 6வது பாய்லரும் ...

Read More »