Tag Archives: Jayalalithaa disproportionate assets case

வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு 8.12 சதவிகிதம் அல்ல – 76 சதவிகிதம் மேல்முறையீடு தேவை

தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா மற்றும் 3 பேர் மீதான தண்டனைகளை கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று (11.5.2015) ரத்து செய்து தீர்ப்பளித்தது. தீர்ப்பின் நகல் கிடைக்கும் முன்னரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு “இது இறுதி தீர்ப்பல்ல; கர்நாடக அரசு இதன் மீது மேல்முறையீடு செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தது. தீர்ப்பின் நகல் கிடைத்துள்ள நிலையில் தீர்ப்பின் அடிப்படை தவறான கணக்குகள் மற்றும் புரிதலின் அடிப்படையில் அமைந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் செல்வி ஜெயலலிதாவும், ...

Read More »

இறுதித் தீர்ப்பல்ல! சிபிஐ(எம்) கருத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்புடைய சொத்துக் குவிப்பு வழக்கு 18 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும் மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு செய்த மேல்முறையீட்டு மனு ஏற்கப்பட்டு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. எனினும் இது இறுதி தீர்ப்பு அல்ல. இந்தப் பின்னணியில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ...

Read More »