Tag Archives: k.balakrishnan

புத்தாண்டு மக்கள் போராட்டங்களின் ஆண்டாக மலரட்டும்!

தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்து சென்ற ஆண்டின் கசப்புகள் நீங்கி, எதிர்வரும் ஆண்டில் மகிழ்ச்சி மலரட்டும் என வாழ்த்துகிறோம். கோவிட்-19 எனும் பெருந்தொற்று உலக மக்களை பெரும் துயரில் ஆழ்த்தியது. உலகம் முழுவதும் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்த சோகம் குடி கொண்டுள்ளது. உயிர் வாழ்வதற்காகவும், வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் பெரும் போராட்டத்தை மக்கள் நடத்தவேண்டி வந்தது. மறுபக்கம், மோடி அரசின் விவசாயிகள் விரோத சட்டங்களை எதிர்த்து தலைநகர் தில்லியிலும், நாடு முழுவதும் ...

Read More »

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களி கட்டணத்தை குறைத்திடுக! தமிழக முதல்வருக்கு சிபிஐ (எம்) கடிதம்

பெறுநர்                 மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,                 தமிழ்நாடு அரசு,                 தலைமைச் செயலகம்,                 சென்னை – 600 009. பொருள்:- சிதம்பரம், ராஜா அண்ணாமலை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு – இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை பெற்றுக் கொண்டு கல்வி தொடர வாய்ப்பளிக்க கோருவது தொடர்பாக: சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு 2013-2014ம் ஆண்டில் அதிக கட்டணம் (ரூ. 5.54 லட்சம்) தீர்மானிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் தொடுத்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசு நியமித்த கல்விக் கட்டணம் தீர்மானிக்கும் குழு கட்டணங்களை ...

Read More »

கடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே, குருங்குடி என்ற கிராமத்தில் இயங்கி வந்த நாட்டு வெடி செய்யும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 பெண்கள் உயிரிழந்துள்ளனர்; 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்ற துயரச் செய்தி பெரும் வேதனையை அளிக்கிறது. இந்த வெடிவிபத்தில் கட்டடங்கள் தரைமட்டமாகி உள்ளன. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்புப்பணிகளை தீவிரமாக முடுக்கி விட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கோருகிறது. மாநிலம் முழுவதும் இதுபோன்ற நாட்டுவெடி மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் வெடி விபத்து ...

Read More »

ஸ்டெர்லைட் ஆலை மீதான தடை தொடரும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு ; மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு !!

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பகுதியில் இருக்கிற மக்கள் நடத்தி வந்துள்ள போராட்டத்திற்கு  கிடைத்த வெற்றியே  சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இன்றைய தீர்ப்பாகும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.  சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு விதித்துள்ள தடை தொடரும் என தெரிவித்துள்ள தீர்ப்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டி வரவேற்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென பல கட்டங்களாக அந்த பகுதி மக்கள் போராடி ...

Read More »

சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றிபெற்ற 100 சதவிகித பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பிருந்தா கராத் தொலைபேசியில் வாழ்த்து!

நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ள சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் தமிழகத்திலிருந்து மதுரையைச் சார்ந்த பூரண சுந்தரி மற்றும் சென்னையைச் சேர்ந்த பாலநாகேந்திரன் ஆகிய இரு பார்வை மாற்றுத்திறனாளிகள் வெற்றிபெற்றுள்ளனர். சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிருந்தா கராத் அவர்கள், வெற்றிபெற்றுள்ள இந்த இரு  பார்வை மாற்றுத்திறனாளிகளையும் தொலைபேசியில் தனித்தனியே தொடர்புகொண்டு வெற்றி பெற்றுள்ளதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார், பார்வை மாற்றுத்திறனாளிகளின் விடாமுயற்சிகளுக்கும், தன்னம்பிக்கைக்கும் தனது இதயபூர்வ பாராட்டுதல்களை தெரிவிப்பதாக தோழர் பிருந்தா கராத் கூறியுள்ளதோடு, அவர்கள் தங்கள் பணிகளில் சிறந்து விளங்குவதற்கும் ...

Read More »

கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசு கவனம்செலுத்த வேண்டிய பிரச்சினைகள் குறித்தும், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வலியுறுத்தியும் சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் முதலமைச்சருக்கு கடிதம்

பெறுநர்           மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,             தமிழ்நாடு அரசு,             தலைமைச் செயலகம்,             சென்னை – 600 009. மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்:- கொரோனா தடுப்பு சம்பந்தமாக தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினைகள் குறித்து:             அரசு மற்றும் தனியார் பரிசோதனை நிலையங்களில் கொரோனா  தொற்று பரிசோதனையை தமிழக அரசு நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் அரசு பரிசோதனை நிலையங்களில் அறிகுறிகள் இல்லாமல் வருவோருக்கு பரிசோதனை மறுக்கப்படுகிறது.  தொற்று குறித்த விவரத்தின் அடிப்படையில், பாதிப்புக்குள்ளானவர்கள் ...

Read More »

கொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்!

கொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திட வேண்டுமென தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களுக்கும், மின்சாரத்துறை அமைச்சர் திரு. பி. தங்கமணி ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். பெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்:- கொரோனா காலத்திற்கு மின் கட்டணம் குறைப்பு கோருவது தொடர்பாக:- * கொரோனா ஊரடங்கு காலத்தில் மத்திய, மாநில அரசுகள் ...

Read More »

தமிழக பள்ளிக்கல்வித்துறை அடிக்கடி தடுமாறுவது ஏன்? 11ம் வகுப்பிற்கான பாடத்திட்ட மாறுதலை ஒத்தி வைக்கவேண்டும்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்!! தமிழக பள்ளிக் கல்வித்துறை சமீப காலங்களில் முன்னுக்குப் பின்னான பல முரண்பட்ட திட்டங்களை அறிவிப்பதும், பின்னர் மக்களின் வற்புறுத்தல் காரணமாக அதை வாபஸ் பெறுவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த வகையில் தற்போது நடப்பாண்டிற்கான (2020-21) 11ம் வகுப்பிற்கான பாடத்திட்டத்தில் மாறுதலை ஏற்படுத்தி புதிய குழப்பத்தை உருவாக்கியுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறை இந்திய நாட்டில் பல சாதனைகளை சாதித்துள்ளது. இந்திய நாடு முழுவதும் 10+2 வகுப்பு முறை 1967-68ம் ஆண்டு முதல் அமல்படுத்த வேண்டுமென இந்திய அரசு வற்புறுத்திய போதும், ...

Read More »

அனைத்து பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் சமைத்த மதிய உணவு வழங்கிட தமிழக முதல்வருக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்

பெறுநர்       மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,       தமிழ்நாடு அரசு,       தலைமைச் செயலகம்,       சென்னை – 9. மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம். பொருள்:-        அனைத்துப் பள்ளி குழந்தைகளுக்கும் சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்குவது – இந்த கல்வி ஆண்டில் கல்வி அளிப்பது  குறித்து ஆசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கல்வியாளர்களுடன் கலந்துரையாடி முடிவு செய்வது – பள்ளி பாடப்புத்தகங்கள், நோட்டுகள் உடனடியாக விநியோகிப்பது தொடர்பாக:             “கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் ...

Read More »

உடுமலை சங்கர் சாதி ஆணவப்படுகொலை வழக்கு – உயர்நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது!

மேல்முறையீடு செய்திட தமிழக அரசு சிபிஐ(எம்) வலியுறுத்தல்.. உடுமலைப்பேட்டை சங்கர், கௌசல்யா ஆகியோரின் சாதி மறுப்பு திருமணத்தை ஏற்க முடியாத சாதிவெறி சக்திகள் சங்கரை கொலைசெய்தனர். 2016 மார்ச் 13 அன்று பட்டப்பகலில், பலர் முன்னிலையில், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு எதிரில் சங்கர் கொடூரமான முறையில் கூலிப் படையினரால் படுகொலை செய்யப்பட்டார். சங்கர் கொல்லப்படுவதை தடுக்க முயன்ற கௌசல்யாவையும் கொலையாளிகள் வெட்டி வீழ்த்தினார்கள். மிகத்தீவிரமான சிகிச்சைக்கு பிறகே கௌசல்யா உயிர் பிழைத்தார். தமிழகம் மட்டுமல்ல,  உலகமே அதிர்ச்சி அடைந்த மிகக் கொடூரமான சாதி ஆணவப்படுகொலை ...

Read More »