Tag Archives: Kerala CPIM

இடது ஜனநாயக முன்னணியைப் பொய்களால் வீழ்த்திட முடியாது!

கொடியேரி பாலகிருஷ்ணன் கேரள மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆயிரம் நாக்குகள் உள்ள அனந்தனின் நாவுகளைக் கடன் வாங்கினாலும் பாஜக-காங்கிரஸ் தலைவர்களால் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற முடியவில்லை. மடியில் கனமில்லாததால் இந்த அரசும், இதை இயக்குகிற சாரதிகளும் எவர் முன்னாலும் அஞ்சவோ, மண்டியிடவோ வேண்டிய அவசியமில்லை. திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பிடிபட்ட தங்கம் கடத்தல் வழக்கு மிகத் தீவிரமானதும், சர்வதேச அளவில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும். ஐக்கிய அரபு எமிரேட் தூதரகப் பெயரின் மறைவில் வந்த ...

Read More »

உங்கள் அரசு வேலை செய்கிறதா பிரதமரே!

சீத்தாராம் யெச்சூரி கோவிட்-19 என்னும் கொரானா வைரஸ் தொற்றை முறியடித்திட தற்போதைய சூழலில், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி,  பிரதமர் நரேந்திர மோடிக்கு சனிக்கிழமையன்று அனுப்பியுள்ள கடிதம். துரதிர்ஷ்டவசமாக, சமூக முடக்கக் காலத்தில் மீண்டும் உங்களுக்குக் கடிதம் எழுத வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. என்னுடைய முந்தைய கடிதங்களுக்கும் தங்களிடமிருந்து எவ்விதப் பதிலும் இல்லை. உண்மையில், அவை வரப்பெற்றதற்கான ஏற்பளிப்புகூட இல்லை. இது வழக்கமற்ற ஒன்று. நாடும், நாட்டின் பெரும்பாலான மக்களும் ...

Read More »

மலையாள மனோரமா இதழ் பொய்ச்செய்திகளைப் பரப்புவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

மலையாள மனோரமா நாளிதழ், சிபிஎம் மத்திய தலைமை குறித்து பொய்ச்செய்திகளை முதல் பக்கத்தில் பிரசுரித்திருப்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கேரளாவிலிருந்து தெளிப்பான் பிரச்சனை மீது வந்த விளக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியத் தலைமை நிராகரித்திருக்கிறது என்று மலையாள மனோரமா நாளிதழ், தன்னுடைய முதல் பக்கச் செய்தியாக வெளியிட்டிருப்பது பொய்யானதும், எவ்வித அடிப்படையுமில்லாததுமாகும். ஒரு புகழ்பெற்ற நாளிதழ், இவ்வாறு பொய்ச்செய்தியைப் பரப்பிக்கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமாகும். கோவித் 19 தொற்றுக்கு எதிரான ...

Read More »

பிரதமரின் அனைத்து கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக தோழர் இளமாறம் கரீம் அவர்கள் எடுத்து வைத்த முக்கிய ஆலோசனைகள்:

மாண்புமிகு பிரதமர் அவர்களே அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்கு இந்திய அரசாங்கத்தை நான் பாராட்ட்டுகிறேன். பிப்ரவரி மாதத்திலிருந்தே இத்தகைய கூட்டத்தை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியும் இடதுசாரி கட்சிகளும் கோரி வந்தன. கோவிட் வைரசுக்கு எதிரான போராட்டம் என்பது இந்திய மக்கள் அனைவரும் ஒரே மனிதனாக அரசியல் வேறுபாடுகளை கடந்து ஓரணியில் நின்று நடத்த வேண்டிய போராட்டம் ஆகும்.இந்த போராட்டத்தில் எங்களது ஆதரவை முழுமையாக நல்குகிறோம். தேசம் தழுவிய ஊரடங்கு என்பது இன்றைய தேவையாக இருக்கலாம். ஆனால் திடீரென அது ...

Read More »

கொச்சி மெட்ரோ 5 தனித்துவமான முயற்சிகள் – ஓரடி முன்னால் பயணிக்கும் இடதுசாரி மாற்று

45 மாதங்களில் முடித்த சாதனை: மும்பை மெட்ரோ 11 கி.மீ கட்டமைக்க 75 மாதங்கள் ஆகின. சென்னை 4 கி.மீ கட்டமைக்க 72 மாதங்கள் ஆகின. தில்லி, ஜெய்ப்பூர், பெங்களூர் அனைத்தைக் காட்டிலும் விரைவாக முடித்த கட்டுமானம். பசுமையில் அக்கறை:  மெட்ரோ ரயில் திட்டத்தின் மின்சாரத் தேவைகளில் 25 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் பயன்படுத்தப்படுகிறது. 23 ஸ்டேசன்களில் அமைக்கப்பட்ட சோலார் பேனல்களில் 2.3 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நகராட்சி குப்பைக் கிடங்கிலிருந்து உரம் தயாரித்து தோட்ட வளர்ப்பு. இலவச சைக்கிள்: ஒவ்வொரு மெட்ரோ ...

Read More »