Tag Archives: lockdown

கொரோனா உயிரிழப்புகளை தடுப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட – தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்

பெறுநர்             மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,             தமிழ்நாடு அரசு,             தலைமைச் செயலகம்,             சென்னை – 600 009. மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்:- கொரோனா நோய்த் தொற்று – பரவாமல் கட்டுப்படுத்துவது – கொரோனா மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகள் – அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள கோருவது தொடர்பாக:             தமிழகத்தில் மதுரை, விருதுநகர், தேனி, திருநெல்வேலி தென்மாவட்டங்கள் உள்பட பெரும்பகுதியான மாவட்டங்களில், நகரங்கள், கிராமங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி ...

Read More »

குற்றமிழைத்த காவலர்களை காப்பாற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ முயற்சிப்பதா? மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சாத்தான்குளம் காவலர்களால் மிருகத்தனமாக சித்ரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட  ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருடைய மரணம் தமிழகத்தையே உலுக்கிக் கொண்டுள்ளது. எந்த குற்ற வழக்குகளிலும் சம்பந்தப்படாத அப்பாவி வியபாரிகளை காவல்நிலையத்தில் அடித்துக்கொன்ற இச்சம்பவத்தில் குற்றம் புரிந்த காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்கிற குரல்கள் தமிழகத்தில் உரத்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், அந்த உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல்,  தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர், குற்றமிழைத்த போலீசாரை காப்பாற்றும் நோக்கோடு அறிக்கைகளும் பேட்டிகளும் அளித்துள்ளது வன்மையான ...

Read More »

பழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்

புதுதில்லி, ஜூன் 22 ஏழை மக்கள் மற்றும் விளிம்புநிலையில் உள்ள மக்களுக்காக சேவை செய்து வருபவர்களுக்கு எதிராக, பழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள் எடுப்பது, எந்தவொரு அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான பிருந்தா காரத் கடிதம் அனுப்பியுள்ளார். மகாராஷ்ட்ர மாநிலத்தில் பீமா கொரேகான் வழக்குடன் சம்பந்தப்பட்ட அரசியல் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களைக் கைது செய்து, மனிதாபிமானமற்ற முறையில் நடத்திக்கொண்டிருப்பது தொடர்பாக, ஞாயிறு அன்று ...

Read More »

ஊரடங்கை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் மின்சாரத் துறைக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி கண்டனம்!

கொரோனா பரவலைத் தொடர்ந்து மின் நுகர்வோருக்கு கட்டணம் செலுத்துவதற்கான இறுதி தேதி மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. மின்வாரியமும் மார்ச், ஏப்ரல் மாதத்துக்கான கட்டணத்தை அதற்கு முந்தைய மாத கட்டணத்தை கட்டலாம் என அறிவித்து இருந்தது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் சுமார் 310 யூனிட்களுக்குள் பயன்படுத்தி வந்த மின்நுகர்வோர், ரூ.560 கட்டணமாக கட்டிய நிலையில், தற்போது பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு மொத்தமாக 1240 யூனிட் என தீர்மானித்து ரூ. 4584 கட்டணத்தை கட்டுமாறு, கோவையைச் சேர்ந்த மின்நுகர்வோர் பத்மநாதன் என்ற ...

Read More »

பயன்படுத்தப்படாத இரயில்வே சீசன் டிக்கெட் காலத்தை நீட்டிக்க கோரி தென்னக ரயில்வே பொது மேலாளர் அவர்களுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்…

பெறுநர்             பொது மேலாளர் அவர்கள்,             தென்னக ரயில்வே,             சென்னை – 600 003. அன்புடையீர், வணக்கம். பொருள்:-     பயன்படுத்தப்படாத இரயில்வே சீசன் டிக்கெட் காலத்தை நீட்டிக்க கோருவது தொடர்பாக… கொரோனா நோய்த் தடுப்பையொட்டி மார்ச் 25 முதல் அமலாக்கப்பட்ட முதலாவது ஊரடங்கு காலம் முதல் இன்று வரை அனைத்து புறநகர் இரயில்களின் இயக்கமும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் விரைவில் புறநகர் இரயில் சேவைகள் துவங்குவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கிற மக்கள் பல்வேறு இரயில் ...

Read More »

மத்திய அரசின் பொருளாதாரத் தொகுப்பின் உண்மை சொரூபம்! -சீத்தாராம் யெச்சூரி

20 லட்சம் கோடி ரூபாய் நிதி ஊக்குவிப்புத் தொகுப்பு என்று பிரதமர் நரேந்திரமோடி கம்பீரமாக அறிவித்து, அதன் விவரங்கள் மத்திய நிதி அமைச்சரால் ஐந்து தவணைகளில் அறிவிக்கப்பட்டது. இவர்கள் அறிவித்துள்ள இந்த நிதித் தொகுப்பின்மூலம், மோடியும் பாஜக மத்திய அரசாங்கமும், கோவிட்-19 கொரானா வைரஸ் தொற்றையும் அதன்காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள தேசிய சமூக முடக்கத்தையும் தங்களுடைய இந்துத்துவா நிகழ்ச்சி நிரலையும், அரக்கத்தனமான முறையில் நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களையும் மேலும் வெறித்தனமாக அமல்படுத்துவதற்குப் பயன்படுத்திக் கொண்டிருப்பது மீளவும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. கோவிட்-19 கொரானா வைரஸ் தொற்றை முறியடிக்கிறோம் ...

Read More »

கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர் பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்டக்குழு வலியுறுத்தல் இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மத்திய அரசின் நேரடி பார்வையில் இயங்கி வரும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சுமார் 7,000த்திற்கும் அதிகமான ஒப்பந்த தொழிலாளர்கள் எல்&டி போன்ற ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் வேலை செய்து வருகிறார்கள். இதில் 6000 பேர் வடமாநில தொழிலாளர்கள். இவர்களுக்கு குறைந்த அளவு ஊதியமே வழங்கப்படுகிறது. 144 தடை உத்தரவு பிறப்பித்த இந்த காலத்தில் கூடங்குளம் ...

Read More »

ஊரடங்கை பயன்படுத்தி சம்பள வெட்டு, பணி நீக்கம் செய்யும் ஊடக நிறுவனங்கள்!

நாடு தழுவிய ஊரடங்கை பயன்படுத்திக் கொண்டு ஊடக முதலாளிகள் தன்னிச்சையாக ஆட்குறைப்பு செய்கின்றன. சம்பள குறைப்பை திணிக்கின்றன. “கொரோனா வைரஸ் பரவல் ஒரு தேசிய நெருக்கடி. இந்த நெருக்கடியை ஊடக நிறுவனங்களும் அதன் பங்குதாரர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் சுமைகளை தொழிலாளர்கள் மீது சுமத்தக் கூடாது” என்று நேஷனல் அலையன்ஸ் ஆப் ஜர்னலிஸ்ட் (என்ஏஜே) மற்றும் டெல்லி யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் (டியுஜே) என்ற இரண்டு ஊடகவியலருக்கான சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன. ஊரடங்கை நிறுவன மூடலாக மாற்றும் ஊடக நிறுவனங்கள்ஊரடங்கால் விற்பனை குறைந்திருக்கிறது. விளம்பரங்கள் ...

Read More »