சு.வெங்கடேசன் எம் பி மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்றினைக் கையாள்வதில் செயலின்மையும் குளறுபடியும் தொடர்ந்து நீடித்து வருகின்றன. பலமுறை எடுத்துக்கூறியும் அதனைப் புரிந்து கொள்ளாத நிலை தொடர்கிறது. கடந்த ஒன்றாம் தேதி முதல், சோதனையை அதிகப்படுத்தப் பலமுறை கூறியும் கேட்காததன் விளைவை இன்று மதுரை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இப்பொழுது பிரச்சனை வளர்ந்து, அடுத்த கட்டத்தினை எட்டி நிற்கிறது. மதுரையில் தொற்றுப்பரவும் வேகமானது 7.9% இருப்பதைச் சுட்டிக்காட்டி அதற்கேற்ற வேகத்தில் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று எழுத்துப்பூர்வமான ஆலோசனையை வழங்கியுள்ளேன். கடந்த 24ஆம் தேதி சிறப்புக் ...
Read More »தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மீண்டும் ஒரு கோடி ரூபாய் வழங்க திட்டம்!
மதுரை மாவட்டத்துக்கு சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் சந்திரமோகன் இஆப அவர்களை இன்று காலை சந்தித்து, மதுரையில் கரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய 15 நடவடிக்கைகளைப்பற்றி எழுத்துபூர்வமான மனுவினை அளித்தேன். இந்த நடவடிக்கைகளை நிறைவேற்ற எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உடனடியாக ரூபாய் ஒரு கோடி வழங்க தயாராக உள்ளேன் என்பதையும் தெரிவித்துள்ளேன் . சு. வெங்கடேசன் எம்பி மதுரை. இணைப்பு: பெறுநர்: உயர்திரு டாக்டர் சந்திரமோகன் இஆபசிறப்பு கண்காணிப்பு அதிகாரிமதுரை உயர்திரு டாக்டர் வினய் இஆபமாவட்ட ஆட்சித்தலைவர்மதுரை அன்பு வணக்கம்! ...
Read More »