Tag Archives: mekedatu dam

மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அரசியல் உள்நோக்கம் கொண்டது சிபிஐ(எம்) கண்டனம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தாக்கல் செய்த முதல்கட்ட  வரைவு  அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இது  மத்திய அரசு திட்டமிட்டு உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது,  மேலும், காவிரி தொடர்பான அனைத்துப் பிரச்னைகளையும் கவனிப்பதற்கென உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ஆணையத்தின் எல்லையைத் தாண்டி   கர்நாடக அரசின் வேண்டுகோளை ...

Read More »

காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அமைச்சரவை முடிவை தடுத்து நிறுத்துக சிபிஐ(எம்) வலியுறுத்தல்

காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் அணை கட்டிட கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது. ரூ. 5,912 கோடி செலவில் நிறைவேற்றப்படவுள்ள அந்த திட்டத்தில், 66.5 டி.எம்.சி. தண்ணீரை தேக்கிவைக்கவுள்ளதாகவும், அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும் கர்நாடக மாநில சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா தெரிவித்திருக்கிறார். காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பை அமலாக்க தொடர்ந்து மறுத்துவரும் கர்நாடக அரசு, புதிய அணைகளைக் கட்டுவதில் முனைப்புக் காட்டிவருவது கண்டனத்திற்குரியதாகும். நடுவர்மன்ற தீர்ப்பை அமலாக்கவும், மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழு ஏற்படுத்துவதில் மத்திய அரசும், கர்நாடக அரசும் ...

Read More »