சென்னை மணப்பாக்கத்தில் அடையாறு ஆற்றின் கரையோரத்தில் உள்ள தனியார் மியாட் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த 18 நோயாளிகள் செயற்கை சுவாசக் கருவி செயல்படாததால் பலியான சம்பவம் வேதனைக்குரியதாகும். சமீபத்திய கனமழை வெள்ளத்தால் அடையாறு ஆற்றின் உபரிநீர் இம்மருத்துவமனைக்குள் புகுந்ததை தொடர்ந்து மின்தடையும், தரை தளத்தில் உள்ள ஜெனரேட்டர் இயக்கமும் பாதிக்கப்பட்டதாகவும், ஜெனரேட்டர் இயக்கத்துடன் இணைக்கப்பட்டிருந்த தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளுக்கான செயற்கை சுவாசத்திற்கான (வெண்டிலேட்டர்) கருவிகள் இயங்காததால் 18 நோயாளிகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ...
Read More »