Tag Archives: Modi Government

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் டிசம்பர் 14 அன்று – சிபிஐ (எம்) சார்பில் அம்பானி, அதானி பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம்

மூன்று வேளாண் சட்டங்களையும், இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்கான மின்சார சட்டத் திருத்த மசோதா (2020)-ஐ முற்றாக ரத்து செய்யவேண்டுமென வலியுறுத்தி நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து டிசம்பர் 8 அன்று நாடு தழுவிய மகத்தான பந்த் போராட்டம் நடைபெற்றது. டிசம்பர் 9 அன்று, 6வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்த போது மத்திய அரசு ஆணவப் போக்கோடு நடந்து கொண்ட காரணத்தினால் விவசாய சங்க கூட்டமைப்பு போராட்டத்தை தீவிரப்படுத்த அறைகூவல் விடுத்துள்ளது. டிசம்பர் 14 அன்று, தில்லி மாநகரத்தின் அருகமையில் இருக்கும் மாநில ...

Read More »

‘நமோ டிவி’ செலவினைமறைத்த பாஜக மீது தேர்தல் ஆணையம்நடவடிக்கை எடுக்குமா?தலைமைத் தேர்தல்ஆணையருக்கு சீத்தாராம் யெச்சூரி கேள்வி

புதுதில்லி, ஆக. 18- ‘நமோ டிவி’ செலவினை மறைத்த பாஜக மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என்று, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர், சுனில் அரோராவிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: முதலில், பீகார் சட்டமன்றத் தேர்தலில், 64 வயதுக்கு மேம்பட்டவர்களுக்கு அஞ்சல் வாக்கு மூலம் வாக்குரிமை அளிக்கும் முடிவை கிடப்பில் போட்டிட, முடிவெடுத்திருப்பதற்கு எங்கள் ஏற்பளிப்பினைத் தெரிவித்துக் கொள்கிறோம். எனினும், வாக்காளர்களை நேரடியாக சரிபார்க்கும் கொள்கையை உத்தரவாதப்படுத்துவதே, ...

Read More »

கொரோனா உயிரிழப்புகளை தடுப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட – தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்

பெறுநர்             மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,             தமிழ்நாடு அரசு,             தலைமைச் செயலகம்,             சென்னை – 600 009. மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்:- கொரோனா நோய்த் தொற்று – பரவாமல் கட்டுப்படுத்துவது – கொரோனா மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகள் – அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள கோருவது தொடர்பாக:             தமிழகத்தில் மதுரை, விருதுநகர், தேனி, திருநெல்வேலி தென்மாவட்டங்கள் உள்பட பெரும்பகுதியான மாவட்டங்களில், நகரங்கள், கிராமங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி ...

Read More »

ஆக.20-26 மாபெரும் மக்கள் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் 2020 ஜூன் 30 மற்றும் ஆகஸ்ட் 2 ஆகிய தேதிகளில் காணொலி வாயிலாக நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்துகொண்டு மத்தியக்குழு முடிவுகளை விளக்கினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர் என். குணசேகரன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் ...

Read More »

அயோத்தி: அறக்கட்டளை அதன் வேலையைச்செய்யட்டும்மத்திய, மாநில அரசுகளுக்கு அதில் வேலையில்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

புதுதில்லி, ஆக.3- அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை அதற்கென நியமிக்கப்பட்டிருக்கும் அறக்கட்டளை செய்யட்டும் என்றும், மாறாக ‘பூமி பூஜை’ செய்யும் பணியை மாநில நிர்வாகமோ, மத்திய அரசாங்கமோ இதில் சம்பந்தப்படக் கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இது தொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: அயோத்தி தாவா, இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒப்பந்தம் மூலமாகவோ, அல்லது, நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலமாகவோ தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆரம்பம் ...

Read More »

கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்திடுக!மக்கள் அனைவருக்கும் இயல்புவாழ்க்கையை மீளவும் ஏற்படுத்திடுக! இடதுசாரிக் கட்சிகள் அறிக்கை

புதுதில்லி, ஆக.3- கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும், மக்கள் அனைவருக்கும் இயல்புவாழ்க்கையை மீளவும் ஏற்படுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி, மத்திய அரசாங்கத்தை இடதுசாரிக் கட்சிகள் கோரியுள்ளன. இது தொடர்பாக, ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து, இடதுசாரிக் கட்சிகள் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா,  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் – லிபரேசன்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் ...

Read More »

சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் தோழர் சீத்தராம் யெச்சூரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம்

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு  இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்க வேண்டுமென வலியுறுத்தி திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தராம் யெச்சூரி அவர்கள் நன்றி தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் பின்வருமாறு; தோழர் சீத்தராம் யெச்சூரி எழுதியுள்ள கடிதம்; http://tncpim.org/wp-content/uploads/2020/07/20200731-OBC-Reservation-MK-Stalin.pdf

Read More »

பிஎம் கேர் நிதியம்: வெளிப்படையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

பிஎம் கேர்ஸ் நிதியம் என்ற தனியார் அறக்கட்டளை வசூல் செய்து குவித்துள்ள நிதி குறித்து பொது மக்களின் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் அலுவலகம், பிஎம் கேர்ஸ் நிதியம் சார்பில் வசூலித்துள்ள தொகை குறித்த விவரங்களை வெளிப்படுத்திட பிடிவாத மாக மறுத்து வருவது கண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அதிருப்தி கொள்கிறது. பிரதமரைத் தலைவராகவும், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரை ...

Read More »

பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைக் குறைத்திடுக மக்களுக்கு நிவாரணம் அளித்திடுக இடதுசாரிக் கட்சிகள் அறிக்கை

புதுதில்லி, ஜூன் 23 மோடி அரசாங்கம், பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகளைக் குறைத்து, மக்களுக்கு நிவாரணம் அளித்திட வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் கோரியுள்ளன. இது தொடர்பாக திங்கள் அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, புரட்சி சோசலிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா மற்றும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் தேவ பிரதா பிஸ்வாஸ் ...

Read More »

பிரதமரின் அறிக்கை குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது விளக்கம் தேவை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

புதுதில்லி, ஜூன் 22 இந்திய – சீன எல்லைக் கோடு தொடர்பாக ஏற்பட்டுள்ள மோதலை அடுத்து எழுந்துள்ள நிகழ்ச்சிப் போக்குகள் குறித்து பிரதமர் அளித்துள்ள அறிக்கை குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பதால், அது குறித்து விளக்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரி இருக்கிறது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய – சீன எல்லைக்கோட்டில் மோதல் ஏற்பட்டதற்கான நிகழ்ச்சிப் போக்குகள் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்குவதற்காக ஜூன் 19 அன்று அரசாங்கம் ஓர் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தாமதமாக ...

Read More »