Tag Archives: Modi

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறிக்கை!

இந்தியாவின் “ஹைட்ராக்சி க்ளோரோக்கின்” மருந்து சரக்குகளை அமெரிக்காவிற்கு அனுப்பிய பின், தமிழகத்திற்கு வரவிருந்த சோதனை உபகரணங்கள் அமெரிக்காவிற்கு வழிமாற்றிவிடப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மிரட்டலுக்கு அடிபணிந்து இந்தியா “ஹைட்ராக்சி க்ளோரோக்கின்” மாத்திரைகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ததை, அரசாங்கத்திற்கு ஆதரவாக வாதிடுபவர்கள் அது மனிதாபிமான அடிப்படையில் செய்யப்பட்டது என சப்பைக் கட்டு கட்டினார்கள். அனால் இன்று அமெரிக்கா வெளிப்படுத்தியுள்ள உக்கிரம், அப்படிப்பட்ட மனிதாபிமானத்தை நாம் திரும்பி எதிர்பார்க்க முடியாது என்பதை தெளிவாக்குகின்றது. அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரியப் போர் காலத்து அமெரிக்க சட்டமான “பாதுகாப்பு உற்பத்தி ...

Read More »

தொகுதி மேம்பாட்டு நிதி: நாங்கள் கொண்டு வந்ததும் அவர்கள் கொண்டு போவதும்!

கடந்த மாதம் 25ஆம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் கொரோனா சிகிச்சைப் பிரிவுக்குத் தேவையான துணைக் கருவிகளை வாங்க நிதி ஒதுக்கீடு செய்தேன். மொத்தமாக நிதியை ஒதுக்கி, “தேவையான துணைக்கருவிகளை வாங்கிக்கொள்ளுங்கள்” என்று சொல்லாமல், கொரோனா வார்டுக்கு என்னவெல்லாம் தேவை என்பதை மருத்துவமனை முதல்வரிடமும் மருத்துவர்களிடமும் கருத்துக்கேட்டு, அதன் அடிப்படையில் என்னென்ன துணைக்கருவிகள் வாங்க வேண்டும் என்ற பட்டியலோடு நிதி ஒதுக்கீடு செய்தேன். அன்று மாலையே மாவட்ட ஆட்சியர் நிர்வாக உத்தரவினை வழங்கினார். அன்றிலிருந்து வேலை தொடங்கியது.நாடெங்கும் மருத்துவக்கருவிகளை ...

Read More »

பிரதமர் இன்றே அறிவிக்க வேண்டும்!

கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு பரவிவருகிற சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக முக்கியமாக முன்னுக்கு வந்திருக்கின்றன. எனவே, இந்தியாவில் என்.பி.ஆர் கணக்கெடுப்பை வரும் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து நடத்துவதை கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்துகிறது. அரசும் அதன் முகமைகளும் ஒரே உணர்வோடு நின்று கொள்ளை வியாதி பரவலை கட்டுப்படுத்த வேண்டும். மக்கள் சுகாதாரத்திற்கும் வாழ்க்கை பாதுகாப்புக்கும் எழுந்திருக்கும் அச்சுறுத்தலை தடுக்க வேண்டும். என்.பி.ஆர் என்.ஆர்.சி திட்டங்களை 13 மாநில அரசுகள் எதிர்த்திருக்கின்றன என்பதை இங்கே கவனப்படுத்துகிறோம். சென்சஸ் ...

Read More »

இடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

சிபிஐ (எம்) மாநிலக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று (11.02.2020) நிறைவேற்றப்பட்ட தீர்மானம்… உத்தரகாண்ட் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் பதவி உயர்வுகள் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு மீது அளித்துள்ள தீர்ப்பு ஓ.பி.சி, எஸ்.சி., – எஸ்.டி., மக்களின் உரிமைகளுக்கு விரோதமானதும், அரசியல் சாசனத்திற்கு எதிரானதும் ஆகும். உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. இட ஒதுக்கீடு குறித்த நீண்ட நெடிய விவாதங்களுக்கு பின்னரே அரசியல் அமைப்பு சாசனம் அதை ...

Read More »

பொருளாதார வீழ்ச்சிக்கு யார் பொறுப்பு?

கடந்த சில தினங்களாக நாட்டின் பொருளாதாரம் குறித்து வந்து கொண்டிருக்கும் செய்திகள் தொடர்ந்து மிகவும் பயங்கரமாக இருக்கின்றன. வெளியாகியிருக்கும் தரவுகள் அனைத்துமே ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்தது, நாட்டின் பொருளாதார மந்தத்தை துரிதப்படுத்தியிருக்கிறது என்றும் நாடு பின்னோக்கிச் செல்வதற்கு இட்டுச் செல்லும் என்றும் காட்டுகின்றன. ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரத்தின் இருண்ட பக்கத்தையே சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கையின் இரண்டாம் தொகுதி காட்டியுள்ளது. 2016-17க்கான உண்மையான மதிப்புக்கூட்டல் (real Gross Value Added) வளர்ச்சி விகிதம்6.6 சதவீதமாகும். இது 2015-16 ஆம் ஆண்டில் 7.9 சதவீதமாக ...

Read More »

செல்லா நோட்டு அறிவிப்பு, பிரதமர் மோடியின் தேசத் துரோக நடவடிக்கை – இந்தியா ஒருபோதும் மன்னிக்காது

செல்லா நோட்டு அறிவிப்பு, பிரதமர் மோடியின் தேசத் துரோக நடவடிக்கையாகும். இதனை இந்தியா ஒருபோதும் மன்னிக்காது. 99 சதவீதம் செல்லாப் பணம் வங்கிகளுக்குத் திரும்பிவிட்டது. நூற்றுக்கணக்கான இந்தியர்கள் வங்கி வரிசையில் நின்று செத்தார்கள். ஏழைகளே இந்த நடவடிக்கையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இத்தனை விலை கொடுத்ததன் பலன் என்ன? வாழ்க்கையும், வாழ்வாதாரமும் இழந்து – பொருளாதாரத்திற்கு கடும் விலை கொடுத்து, வேலையிழப்பை எதிர்கொண்டு செய்த தியாகத்தின் பலன்கள் என்ன? … மோடியின் தேசவிரோத நடவடிக்கையை நாடு ஒருநாளும் மன்னிக்காது. – சீத்தாராம் யெச்சூரி

Read More »

கறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி

பாரதி புத்தகாலயத்தின் புதிய வெளியீடு சீத்தாரம் யெச்சூரியின் பாராளுமன்ற உரை ‘கறுப்புப்பணம்; ஜெய்ஹிந்த் அல்ல…. ஜியோஹிந்த்”

Read More »

பெட்ரோல் – டீசல் விலை உயர்வு: எதிர்ப்பு இயக்கம் நடத்துக! சிபிஐ(எம்) அறைகூவல்!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்கசிஸ்ட்)-யின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி: இரண்டு வாரங்களுக்குள் மறுபடியும் பெட்ரோல் – டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பதற்கு  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் அரசியல் தலைமைக்குழு கடுமையான கண்டத்தை தெரிவிக்கிறது; 1 லிட்டருக்கு பெட்ரோல் விலை ரூ.2.50ம், டீசல் ரூ.2.26 என்றும் உயர்த்தப்பட்டிருக்கிறது. மோடி அரசு பதவியேற்றதிலிருந்து இதுவரை டீசல் விலை 19 முறையும், பெட்ரோல் விலை 16 முறையும் உயர்த்தப்பட்டுள்ளது. மோடி அரசு தனது இரண்டாண்டு கால ஆட்சியில் மிகவும் ஆடம்பரமான முறையில் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் ...

Read More »

தாத்ரி படுகொலை சம்பவம் பிரதமர் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?

தாத்ரி படுகொலை மற்றும் பாகிஸ்தான் பாடகர் குலாம் அலி நிகழ்ச்சிக்கு தடை போன்ற சம்பவங்கள் மற்றும் அதன் மீது பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கை பற்றிய புதிய தலைமுறை விவாதம்.

Read More »

Congratulations to CPI(M) Tripura for huge victory in both bye elections

In keeping with the expectation of the people, CPI(M) retained it’s hold in the bye elections to the Pratapgarh and Surma assembly segments by a huge margin. Both these SC reserved seats had become vacant because of the untimely demise of the CPl(M) MLAs, comrade Anil Sarkar and comrade Sudhir Das. The campaign itself had made it clear that the ...

Read More »