Tag Archives: modigovt

ரொக்க மாற்று மற்றும் இலவச ரேஷன் பொருள்கள்உடனடியாக வழங்கிடுக!

இடதுசாரிக் கட்சிகள் அறிக்கை.. புதுதில்லி, மே 30 மக்களின் உயிர்களைக் காத்திடும் விதத்தில், பாதிப்புக்கு உள்ளாகியுள்ள அனைத்துக் குடும்பத்தினருக்கும் ரொக்க மாற்று மற்றும் இலவச ரேஷன் பொருட்களை உடனடியாக அளித்திட வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் கோரியுள்ளன. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் து.ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.-லிபரேசன்), திபங்கர் பட்டாச்சார்யா, புரட்சி சோசலிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் ...

Read More »

பொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை கிடையாது

-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் கோவிட்-19 கொரானா வைரஸ் தொற்று இந்தியாவில் பொது சுகாதார அமைப்புமுறை போதுமான அளவிற்கு இல்லாதிருப்பதையும், அதனை ஆட்சியாளர்கள் அசிங்கமான முறையில் புறக்கணித்து வருவதையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. சமூக முடக்கம் பிறப்பித்து 50 நாட்கள் கழிந்தபின்னரும், மோடி அரசாங்கம் இந்த மிக நாசகர வைரஸ் தொற்றைச் சமாளிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், அனுபவத்திலிருந்து எதையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. அநேகமாக அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசாங்க மருத்துவமனைகள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாலும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் போதுமான அளவிற்கு இல்லாததாலும் திணறிக்கொண்டிருக்கின்றன. ...

Read More »

இல்லவே இல்லை, இடம் பெயர் தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை மத்திய அரசு கொடுக்கவில்லை!

இடம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் பணியிடத்திலிருந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்வதற்கு கட்டணம் வசூலிப்பது குறித்து எதிர்க்கட்சிகள் மிகக்கடுமையாக விமர்சனம் வைத்த பிறகு மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் திங்கள் கிழமையன்று ஒரு விளக்கம் கொடுத்திருந்தார். “மத்திய அரசும் சரி, ரயில்வேயும் சரி ஒருபோதும் இடம் பெயர் தொழிலாளர்களிடமிருந்து கட்டணம் வசூலிப்பது குறித்து பேசியதே கிடையாது. 85 சதவிகிதமான போக்குவரத்துச் செலவை ரயில்வேதான் ஏற்றுக் கொள்கிறது. மாநிலங்கள் வெறும் 15 சதவிகிதத்தை மட்டுமே ஏற்றுக் கொள்கின்றன” என்று பத்திரிக்கையாளர்களிடம் விளக்கம் கொடுத்திருந்தார். ...

Read More »