Tag Archives: n.sankaraiah

தோழர் என்.சங்கரய்யா; வாழ்க்கையும் இயக்கமும்…

Download PDF பொறியாளர் குடும்பம் தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவருமான என்.சங்கரய்யா, 1922 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதியன்று கோவில்பட்டியில் பிறந்தார். அவரது குடும்பம் அன்றைய நெல்லை மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தது. அது இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. சங்கரய்யாவின் பாட்டனார் எல்.சங்கரய்யாவும், அவரது அண்ணன் எல்.அண்ணாமலையும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அந்தக் குடும்பம் பரம்பரை கிராம அதிகாரிகளின் குடும்பமாகும். பின்னர் அண்ணாமலை தூத்துக்குடி கிரேட் காட்டன் சாலையில் ...

Read More »

தலைவர் 11 தகவல்கள்: என்.சங்கரய்யா

மாணவப் பருவத்திலேயே பொதுவாழ்வுக்கு வந்துவிட்ட என்.சங்கரய்யாவுக்கு இப்போது 96 வயது. 1922 ஜூலை 15ல் கோவில்பட்டியில் பிறந்தவர். இயற்பெயர் பிரதாப சந்திரன். அவரது பாட்டனார் எல்.சங்கரய்யா தன் பெயரைத்தான் வைக்க வேண்டும் என்று அடம்பிடித்து வீட்டில் உண்ணாவிரதம் இருக்க, பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பிரதாப சந்திரனின் பெயர் சங்கரய்யாவானது! அமெரிக்கன் கல்லூரி மாணவராக இருந்தபோது, மதுரையில் நடைபெற்ற ஆலயப் பிரவேசப் போராட்டம் பெரும் உத்வேகம் தந்தது. சுயமரியாதை இயக்கம் மீது பெரும் மரியாதை வைத்திருந்த சங்கரய்யா, 1938ல் இந்தித் திணிப்புக்கு எதிராக திராவிட இயக்கம் ...

Read More »

சங்கரய்யா: உழைக்கும் மக்களின் ஓய்வறியா தலைவர்

நாட்டின் சுதந்திரத்துக்காகவும், உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் போராடி, எட்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, எண்பது ஆண்டுகளாக மக்கள் பணி செய்து கொண்டு, இன்றைக்கும் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் தோழர் சங்கரய்யா! ஜூலை மாதம் 15 அன்று அவருக்கு 95 வயது முடிந்து, 96 வது பிறந்த நாள்! கோவில்பட்டியில் வசதியான குடும்பத்தில் நரசிம்மலு – ராமானுஜம் இணையருக்கு இரண்டாவது மகனாக, 1922-ல் சங்கரய்யா பிறந்தார். அவரது தாய்வழிப் பாட்டனார் ராமசாமி, பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர். ‘குடியரசு’ இதழின் சந்தாதாரர். பாட்டனார் வீட்டில் ...

Read More »

தோழர் என்.சங்கரய்யாவின் நவம்பர் புரட்சியின் 100ம் ஆண்டு துவக்க விழா உரை

Read More »

“சாதி மறுப்பு தம்பதிகளை நாங்கள் பாதுகாப்போம்” – என்.சங்ரய்யா

  இடதுசாரி சிந்தனை கொண்ட இன்றைய தலைமுறையினருக்கு ‘இன்ஸ்பிரேஷன்’ ஆக இருப்பவர், விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்ரய்யா. எளிமைக்கும், நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி வரும் சங்கரய்யாவுக்கு, ‘அரசியல் மற்றும் பொது வாழ்வில் நேர்மைக்கான விருது’ காயிதே மில்லத் அறக்கட்ட ளையால் சமீபத்தில் வழங்கப் பட்டது. அந்த விருதைப் பெற்றுக்கொண்ட சங்கரய்யா, விருதுத் தொகையான இரண்டரை லட்சம் ரூபாயை ஏழை மாணவர்களின் கல்விச் செலவுக்காக அப்படியே கொடுத்துவிட்டார். இன்னும் சில மாதங்களில் 95 வயதைத் தொடப்போகிற சங்கரய்யாவை சந்தித்தோம். ...

Read More »

தமிழகத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக மாற்றுங்கள் – தோழர் என்.சங்கரய்யா வேண்டுகோள்!

தமிழகத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக மாற்ற அனைத்து கட்சி தோழர்களும் பாடுபட வேண்டும் என செங்கல்பட்டில் நடைபெற்ற கட்சியின் பொன்விழா கருத்தரங்கில் தோழர் என். சங்கரய்யா வேண்டுகோள் விடுத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்விழா மற்றும் தீக்கதிர் சந்தா வழங்கும் கருத்தரங்கம் செங்கல்பட்டில் வெள்ளியன்று (02.10.2015) நடைபெற்றது. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் இ.சங்கர் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர்கள் என்.சீனிவாசன், ஏ.ஆறுமுகநயினார், தீக்கதிர் சென்னை பதிப்பு மேலாளர் சி.கல்யாணசுந்தரம் ...

Read More »

தோழர் என்.சங்கரய்யா – 94வது பிறந்த நாள்

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்தவர்களில் ஒருவருமான விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கராய்யாவின் 94வது பிறந்தநாளான இன்று (2015 ஜூலை 15) அவரை அவரது இல்லத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் மாநிலச் செயலாளருமான தோழர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர். மேலும் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் கே.வரதராஜன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் பல்வேறு தலைவர்கள், தோழர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

Read More »

களப்பணியில் கம்யூனிஸ்டுகள் – என்.சங்கரய்யா உரை part1

Read More »