Tag Archives: nellai

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ராஜாங்கம் காலமானார்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், தொழிற்சங்க தலைவர் தோழர் எம்.ராஜாங்கம் 21.7.20 அன்று  மதியம்  சுமார் 12.00  மணியளவில் காலமானார். அவருக்கு வயது 77. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா நெட்டூர் கிராமத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.  மதுரையில் கூட்டுறவு தொழிலாளிகளை திரட்டியதில் இருந்து அவரது அரசியல் பணி துவங்கியது. 1972ல்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட மேற்கு பிராந்திய கமிட்டியில் இணைந்து செயல்பட துவங்கினார். 1970களில் பீடித் தொழிலாளர் சங்கம் துவக்கப்பட்டது. அதன் தலைவராக பாலவிநாயகமும், செயலாளராக ராஜாங்கமும் ...

Read More »

பார்பரம்மாள்புரம் தலித் மக்கள் மீதான தாக்குதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்டக்குழு கண்டனம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: நாங்குநேரி தாலுகா விஜயநாராயணம் அருகே உள்ள பார்பரம்மாள்புரம் பதைக்கம் காலனியை சார்ந்த வேல்முருகன், சுபாஷ், சதீஷ், முத்துசரவணன் ஆகியோர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது. பதைக்கம் காலனி பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் உள்ள தண்ணீரை வீணடித்தும், மாசுபடுத்தியும் வந்த குகானந்தம், ராஜகோபால், பிரேம் ஆனந்த் மூவரையும் பதைக்கம் காலனியை சார்ந்த தலித் மக்கள் தண்ணீரை பாழடிக்காதீர்கள் என்று சொன்னதற்காக ...

Read More »

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் காவல்நிலை சித்ரவதையால் வாலிபர் குமரேசன் மரணம் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை 8 தென்காசி மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அனுப்புநர்: நவநீதகிருஷ்ணன் (வயது 55/2020) த/பெ. ஆதிமூலம் 5, ஹைஸ்கூல் தெருவீரகேரளம்புதூர் தென்காசி மாவட்டம் அலைபேசி எண்: 9677590708 தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூரைச் சார்ந்த குமரேசன் (வயது 25/2020) காவல் துறையினரின் தாக்குதலால் உள்ளுருப்புகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 27.6.2020 அன்று திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறந்துள்ளார். அவரது இறப்பு முழுக்க முழுக்க வீகேபுரம் காவல்துறையின் மிருகத்தனமான தாக்குதலின் விளைவால் நடந்ததுள்ளது. கடந்த 10.6.2020 அன்று குமரேசனுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ...

Read More »