Tag Archives: Neyveli

நெய்வேலியில் பாய்லர் வெடித்து 6 தொழிலாளிகள் மரணம்மேலும் பலர் படுகாயம்! தொடர் விபத்துகளுக்கு காரணங்களை விசாரிக்க உயர்மட்டக்குழு அமைத்திடுக!!

மேலும் பலர் படுகாயம்! தொடர் விபத்துகளுக்கு காரணங்களை விசாரிக்க உயர்மட்டக்குழு அமைத்திடுக!! இந்தியாவின் நவரத்தினா நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி. இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இன்று (1.07.2020) காலை 2வது அனல் மின்நிலையத்தில், 5வது யூனிட்டில் பாய்லர் வெடித்து ஆறு தொழிலாளர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 16க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல்சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த கோர விபத்தில் இன்னும் பலர் பாதிக்கப்பட்டிக்கக் கூடும் என கிடைக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. இதே இரண்டாவது அனல் மின் நிலையத்தில், கடந்த ...

Read More »

என்எல்சி நிறுவனத்தின் இயக்குநர் மீது ஊழல் புகார்: சிபிஐ மற்றும் சிவிசி உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிபிஐ(எம்) வலியுறுத்தல்! கடலூர் மாவட்டம் நெய்வேலியிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் செயல்பட்டு வரும் மத்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. யில் நிரந்தர தொழிலாளர்கள்,பொறியாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என சுமார் 30,000 பேர் பணியாற்றி வருகிறார்கள். அனல் மின்நிலையம், சூரிய ஒளி, காற்றாலை ஆகியவற்றின் மூலம் சுமார் 4,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து, ஆண்டுக்கு ரூபாய் 1,000 கோடி லாபம் ஈட்டும் நவரத்னா நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. சமீப நாட்களில் இந்நிறுவனத்தை பற்றி வரும் செய்திகள் கவலை அளிப்பதாக உள்ளன. நிறுவனத்திற்கான ...

Read More »